❤️ உலகப் பொதுமறை திருக்குறளுக்கு விளக்கம் தந்தவர்கள் அநேகம் பேர் உண்டு.
❤️ தமிழ் கூறும் நல்லுலகில் இந்த எளியேனும் எனக்குப் புரிந்ததை, என்னால் உணரப்பட்டதை, எனக்கு புரிந்த படியே நான் எழுதுகிறேன்.
❤️ இது உங்களுக்கு பொருத்தமா, இல்லையா என்று எனக்குத் தெரியாது.
❤️ எனக்கு அது அவசியமும் இல்லை.
❤️ ஆனால், மூலத்தை எந்த விதத்திலும் சிதைத்து விடாமல் பொருளை மட்டும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன்.
❤️ என்னதான் இருந்தாலும் வள்ளுவரைப் போல் என்னால் சொல்ல முடியாது.
❤️ ஆனால், வள்ளுவத்தை முழுவதுமாக நான் புரிந்து கொண்டதாக நினைக்கிறேன்.
❤️ வாருங்கள் என் உரை உங்களுக்கு அப்படி உதவியாக இருக்கலாம்.
❤️ முதலில் அதன் நோக்கம் அறம்,பொருள், இன்பமென்று மூன்றாக பிரித்திருக்கிறார்.
❤️ அறத்துடன் பொருளைச் சேர்த்து இன்பமாக இருப்பவன் வீடுபேறு அடைகிறான் என்ற விதத்திலேதான் அது எழுதப்பட்டிருக்கிறது.
❤️ வீடுபேறு என்பது வெளியே எங்கேயோ இருப்பது அல்ல.
❤️ அது இங்கேயே இப்பொழுதே இந்தக்கணமே ஏற்படுவது.
❤️ இக்கணத்தில் வாழும் ஒரு மனிதன் எப்போதுமே மகிழ்ச்சியாகத்தான் இருப்பான்.
❤️ அவன் அறமுள்ளவனாக இருப்பான்.
❤️ பொருள் நிறைந்தவனாக இருப்பான்.
❤️ அறம் இல்லையென்றால் அவனுக்கு பொருள் இருக்காது.
❤️ பொருளில்லையென்றால் அவனுக்கு இன்பமும் இருக்காது.
❤️ அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது நம் தமிழ்ச்சான்றோனாகிய வள்ளுவனின் வாக்கு.
❤️ வள்ளுவனை பின்தொடர்தல் அல்லது வள்ளுவனை புரிந்து கொள்ளுதல் அல்லது வள்ளுவனை வழிமுறையாகவோ வழிகாட்டியாகவோ ஏற்றுக்கொள்வது என்பது ஒரு தனி மனிதனுக்குச் சிறப்பானது.
❤️ காரணம், அவன் மதம் கடந்த சிந்தனையாளன், மனிதநேயம் மிக்கவன்.
❤️ இங்கிருந்து எங்கோவொரு காலத்தில் மனித சமூகம் எப்படியோ இருந்த ஒரு இருட்டான காலத்தில் ஒரு வெளிச்சமாக இருந்திருக்கிறான்.
அவன் வெளிச்சம் இன்றுவரை பரவிக்கொண்டிருக்கிறது.
❤️ திருக்குறளை படிப்பதனால் அக இருட்டு அழிந்து வெளிச்சம் ஏற்பட்டு புற இருட்டை
❤️ நீங்களாகவே அழிக்குமளவிற்கு உங்கள் சுயவெளிச்சம் மேலோங்கி விடுகிறது.
திருக்குறளை படிக்கும்பொழுது எனக்குள் எண்ணிலா ஆனந்தம் பொங்கி வழிவதை நான் கண்டிருக்கிறேன்.
❤️ எனக்குள் இருந்த என் குழப்பமெல்லாம் தீர்ந்து போயின.
❤️ நானொரு தெளிந்த மனிதனாக மாறுவதற்கு திருக்குறள் ஒரு மூல காரணமாக இருந்தது.
❤️ எனவேதான் இதை எழுதுகிறேன்.
❤️ மற்றவர்களும் இப்படி தெளிந்துவிட வேண்டும் ஆனந்த மடைந்து விட வேண்டும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே என் உயர்ந்த நோக்கம்.
❤️ அருள் கூர்ந்து தமிழ் நெஞ்சங்களே, அல்லது தமிழ் தெரிந்து கொண்ட நெஞ்சங்களே,
❤️ இந்த நூலை படிக்கும் பொழுது கொஞ்சம் உணர்வோடு படியுங்கள்.
❤️ ஏதோ எழுத்துக்களும், வார்த்தைகளும் மட்டுமல்ல அவைகள்.
❤️ அதைத்தாண்டிய உணர்வுகள் அதனுள்ளே இருக்கின்றன.
❤️ நீங்கள் படித்து இன்புறுங்கள்.
❤️ இந்த வையகம் உய்யவும், மனித வளம் மேலும் ஓங்கவும், எப்போதும்
ஆனந்தத்தில் நிலைத்திருக்கவும் திருக்குறள் ஓர் உன்னத நூல்.
❤️ அதன் தன்மை, அதன் அறிவு, அதனுடைய வெளிச்சம், அதனுடைய முழுமை அதனுடைய ஆழம், இவையெல்லாமே மனித நாகரிகத்தின் உச்சமாகவே இருக்கிறது.
❤️ காலம் பழையதாக இருப்பதினால் அது அந்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளோடு பின்னப்பட்டு இருந்தாலும்,
❤️ சமகாலத்திற்கும் பொருந்தும் விதத்தில் அதில் அநேக கருத்துக்கள் இருக்கின்றன.
❤️ வருங்காலத்திற்கும் பொருந்தும் விதமாகவும் அது எழுதப்பட்டிருக்கிறது.
❤️ மனிதன் முழுமையடைவதற்கு ஒரு முழுமையான நூல் திருக்குறள் என்றால் அது மிகையாகாது.
❤️ தமிழில் என்னை பிறக்க வைத்த இறைவனுக்கு நன்றி கூறும் வகையில் இந்த நூலை எழுதி மகிழ்கிறேன்.
வாழ்க தமிழ் !..
வாழ்க வள்ளுவம் !..
என்றும் அன்புடன் உங்கள்
❤️ சிவயோகி ❤️
(அதிகாரங்கள்)
அறத்துப்பால்
பொருட்பால்
காமத்துப்பால்