மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம் மனிதர்கள்
எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
🌹 மனம் தந்திரமானது.
🌹 கடவுள் கருணையாளனாக இருந்தால் எந்தப் பாவத்தையும் செய்து விட்டு கருணையின் நிமித்தம் தப்பித்து விடலாம் என்று சிந்திக்க கூடியது.
🌹 அதனால்தான் கடவுளிடம் கருணையை எதிர்பார்க்கிறது.
🌹 உண்மையிலேயே, கடவுளுக்கு எந்த குணமும் கிடையாது.
🌹 கடவுள் நல்லவரும் கிடையாது கெட்டவரும் கிடையாது.
🌹 கடவுள் கருணையாளனும் கிடையாது வெறுப்பாளனும் கிடையாது.
🌹 அதனால் கடவுளுக்கு குணம் என்பது கிடையாது ஆனால் மனிதனுக்கு தான் எல்லா குணமும் இருக்கிறது என்பதற்காக தான்,
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்.
தாளை வணங்காத் தலை.
🌹 என்று வள்ளுவர் எழுதியிருக்கிறார்.
🌹 கடவுளுக்கு குணம் கிடையாது என்பதால் தான், கடவுளுக்கு நிற்குணன் என்று பெயர்.
🌹 நீங்கள் கற்றுக்கொண்ட கருணைக்கான இலக்கணத்திற்கு அப்பாற்பட்டவர்.
🌹 கடவுள் – சூன்யம்
🌹 கடவுள் – வெட்ட வெளி
🌹 கடவுள் – எங்குமாக வியாபித்திருக்கிற சர்வ வியாபி
🌹 கடவுள் – எந்த குணமும் அற்ற நிற்குணன்.
🌹 கடவுள் – படைத்து, காத்து, அழிக்கிறது.
🌹 படைத்து காத்து அழிப்பதால் கருணையாளன் கிடையாது.
🌹 படைப்பதும் காப்பதும் அழிப்பதும் கடவுளின் இயல்பு.
🌹 மனிதனையும் மனிதனுக்கு ஆபத்து தரும் ஜீவராசிகளையும் உருவாக்கியதும் காப்பதும் அழிப்பதும் கடவுள் தான்.
🌹 கடவுள் என்னை உண்டாக்கி,
🌹 நான் அவரை உணர்கிறேனா என்று பார்க்கிறார்.
🌹 நான் அவரை உணர்ந்தால் அவருடன் என்னை சேர்த்துக் கொள்கிறார் அவ்வளவுதான்.
🌹 அதனால் கடவுளுக்கும் எனக்கும் மட்டும் தான் ஒப்பந்தம்.
🌹 கடவுளுக்கும் எனக்குமான அந்த ஒப்பந்தத்தில்
🌹 நான் எந்த செயலையும் கொண்டாட்டமாக செய்தேனா?
🌹 எனக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தேனா?
🌹 எனக்கு திருப்தியாக வாழ்கிறேனா ?
🌹 என்பதுதான் முக்கியம்.
🙏🏻 நன்றி 🙏🏻
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐