மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம் மனிதர்கள்
எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
🌹 திருமணத்துக்குப் பிறகு என் உடன் பிறந்தவருக்கோ அல்லது என் நெருங்கிய உறவுக்கோ நான் பண உதவி செய்தால்,
🌹 அதை என் மனைவியால் ஒத்துக்கொள்ள முடிவதில்லை.
காரணம்,
🌹 அவள் என்னை நம்பி தான் வந்திருக்கிறாள்.
🌹 என்னை நம்பி தான் என்னுடைய குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறாள்.
🌹 அதனால் அவளையும் குழந்தையையும் காப்பாற்ற வேண்டியது ஒரு குடும்பத் தலைவனின் தலையாயக்கடமை என்பதை நான் புரிந்து கொள்ள வேண்டும்.
🌹 அப்படித்தான் உடன் பிறந்தவரை காப்பாற்ற வேண்டியதும் பெற்றோரின் கடமை.
🌹 என்னுடைய குடும்பத்திற்கு நான் செய்ய வேண்டிய என் கடமைகளை தாண்டி,
🌹 நான் பிறருக்கு உதவக்கூடிய தகுதியில் இருக்கிறேன் என்ற பட்சத்தில் பிறருக்கும் உதவலாம்.
🌹 அப்படி இல்லாத பட்சத்தில் பிறருக்கு பண உதவி செய்வது ஆபத்தானது தான்.
🌹 தனக்கு போக மிஞ்சியது தான் தர்மம் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது.
🌹 என்னால் பிறருக்கு பணம் கொடுத்து உதவக்கூடிய தகுதி இருந்தாலும்,
🌹 பணத்தை கொடுத்து உதவுவதைவிட
🌹 அந்த பணத்தை அவர்களே சம்பாதித்துக் கொள்வதற்கான திறமையையோ வழியையோ உருவாக்கிகொடுப்பது தான் சிறந்தது.