மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம் மனிதர்கள்
எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
🌻 சூன்யம் (Nothingnesss) 🌻
🌻 நான் பேசுவதைக் கேட்டு நீங்கள் என்ன அர்த்தம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.
🌻 ஆனால் நான் கடவுள் மறுப்பாளன் கிடையாது.
🌻 கடவுளை ஆழமாக புரிந்து கொண்டவன் என்பதை முதலில் ஆழமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
🌻 ஏனென்றால் நான் பேசப்போவது சூன்யம் (கடவுள்).
🌻 இங்கே படைப்புகள் இருப்பதனால், படைத்தவனும் கட்டாயம் இருப்பான்.
🌻 சூன்யம் என்ற வார்த்தையை புத்தர் சொல்லிவிட்டு போயிருக்கிறார்.
🌻 அவர் ஒரு உச்சகட்ட அனுபவத்தை (சூன்யத்தை), அனுபவித்துவிட்டு போயிருக்கிறார்.
🌻 மற்ற மனிதர்கள் எட்ட முடியாத எல்லையை (சூன்யத்தை), அனுபவித்து விட்டு போயிருக்கிறார்.
🌻 இந்த, சூன்யம் என்பது தான் கடவுள்.
🌻 அண்ட சராசரமும் பெருவெடிப்பினால் தோன்றியது என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.
🌻 இந்த பெருவெடிப்பு எங்கே நடந்தது என்றால்.
🌻 வெட்ட வெளியில் (Space-ல்), ஒன்றுமற்ற இடத்தில் தான் அத்தனையும் நடந்தது. இதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது.
🌻 அந்த ஒன்றுமற்ற இடத்திற்கு பெயர் சூன்யம்.
🌻 சூன்யம் என்றால்,
🌻 ஏதுமற்றது,
🌻 ஒன்று மற்றது,
🌻 வெட்டவெளி.
🌻 சூன்யத்தை புத்தர் மட்டும் தான் சொன்னாரா ? அவர் மட்டும்தான் அனுபவித்தாரா ? என்றால் இல்லை.
🌻 கடவுளை புரிந்து கொண்ட நிறைய மனிதர்கள் அதைப் பற்றி சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள்.
🌻 குதம்பை சித்தர் (சூன்யத்தை),
📖 வெட்டவெளி தன்னை மெய்யென்று இருப்பவர்களுக்கு பட்டயம் ஏதுக்கடி?
📖 குதம்பாய், பட்டயம் எதுக்குடி?
என்று குதம்பை சித்தர் சொல்லி விட்டு போயிருக்கிறார்.
🌻 முகமது நபி (சூன்யத்தை),
📖 “ லாஇலாஹ இல்லல்லாஹ் “
கடவுள் நிகரற்றது என்று சொல்லி விட்டு போயிருக்கிறார்.
🌻 வள்ளுவர் (சூன்யத்தை),
📖 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
📖 பகவன் முதற்றே உலகு.
பகுக்க (வெட்ட) முடியாத வான் என்று திருவள்ளுவர் கடவுளை சொல்லி விட்டு போயிருக்கிறார்.
🌻 மாணிக்கவாசகர் (சூன்யத்தை),
📖 தென்னாடுடைய சிவனே போற்றி ! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !
என்றும்,
📖 வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி,
📖 ஊனாகி, உயிராகி, உண்மையுமாய், இன்மையுமாய்,
📖 கோனாகி, யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு,
📖 வானாகி, நின்றாயை, என்சொல்லி வாழ்த்துவனே.
என்றும், மாணிக்கவாசகர் சொல்லி விட்டு போயிருக்கிறார்.
🌻 கம்பர் (சூன்யத்தை),
📖 உலகம் யாவையும் தாமுளவாக்கலும்,.
📖 நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா,.
📖 அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்!
📖 அன்னவர்க்கே சரண் நாங்களே”
என்று கம்பர் சொல்லி விட்டு போயிருக்கிறார்..
🌻 இவர்கள்தான் அந்த மகாசூன்யத்தை புரிந்து கொண்டவர்கள்.
🌻 நீங்கள் கடவுள் – சூன்யம் என்று புரிந்து கொள்வதால், ஓரளவு மதத்திலிருந்து விடுதலை பெற அது உதவலாம்.
🌻 ஆனால் இது போதுமானது இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
🌻 அதை அனுபவிக்கும் போது தான் உங்களுடைய தரமும், தரத்திற்கான தன்மையும் மாறும்.
🌻 அதை அனுபவிப்பதற்கான முயற்சிக்குப் பெயர்தான் யோகம்.
🌻 பதஞ்சலி யோகத்தில் ,
📖 (அதா யோக சாதனா)
என்று சூத்திரம் போட்டு வைத்திருப்பார்கள்.
🌻 ஒரு குரு சொல்கிறார் சூன்யம் தான் கடவுள். அதை அடைவது தான் யோக சாதனை என்று,
🌻 கடவுளையும், அதை அடைவதற்கான யோகத்தையும், கடவுளை அடைந்த குருவிடம் தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று புரிந்து கொண்ட மனிதன்.
🌻 எது யோக சாதனை? என்ற கேள்வி எழும்ப வேண்டும் என்பதற்காகவே,
அதா யோக சாதனா என்ற வார்த்தையை சூத்திரமாக பயன்படுத்துகிறான்.
🌻 அடுத்த சூத்திரம்,
📖 (சம் விருத்தி நிரோத்தா),
🌻 சம் விருத்தி (உள்ளிருந்து எழும்பும் எண்ணங்களை) நிரோத்தா (தடை செய்வதுதான்) யோகத்திற்கு அடிப்படை.
🌻 அதாவது, உள்ளிருந்து எழும்பும் எண்ணங்களை தடை செய்வதுதான் இறைவனை புரிந்து கொள்வதற்கு அடிப்படை.
🌻 கடவுளைப் பற்றி வேறு மொழியிலும் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.
🌻 GOD is Nothingness.
G – O – D
G – Generate (படைத்தல்)
O – Organized (காத்தல்)
D – Destroy (அழித்தல்)
🌻 கடவுளால், ஒன்றை (Generate) உருவாக்க முடியும்.
🌻 ஆனால், அது உருவாக்கப்பட்டு இல்லை.
🌻 கடவுளால், உருவாக்கியதை (Organized) ஒழுங்கமைத்து பாதுகாக்க முடியும்.
🌻 ஆனால், அது Organized Form-ல் இல்லை.
🌻 கடவுளால், உருவாக்கியதை (Destroy) அழிக்க முடியும்.
🌻 ஆனால் அதை அழிக்க முடியாது.
🌻 (படைத்தல், காத்தல், அழித்தல்) இந்த மூன்று செயல்களையும் கடவுள் செய்யும்.
🌻 ஆனால், கடவுளை படைக்கவோ, காக்கவோ,அழிக்கவோ முடியாது.
🌻 இப்போது உங்களுக்கு கடவுள் சூன்யம் என்று தெரிந்த பிறகு அதைத் தேடக்கூடாது.
🌻 அதை எப்படி அடைவது என்றால்,
🌻 நீங்கள் சூன்யமாக இருக்க வேண்டும்.
🌻 ஞான சூன்யம் என்று மனிதர்களை திட்டுவதுண்டு.
🌻 ஆனால், ஞானமே சூன்யமாக தான் இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
🌻 இப்போது சூன்யம் தான் கடவுள் என்றும், அதில் இருந்து தான் எல்லாம் உண்டாகி இருக்கிறது என்றும், உங்களுக்கு புரிந்திருக்கும்.
🌻 அப்படி என்றால், உருவாக்கப்பட்ட அனைத்திலும் என்ன இருக்கும்? என்றால் சூன்யம் தான், (கடவுள் தான்) இருக்கும்.
🌻 இதை புரிந்து கொள்ளும் வல்லமை மனிதனுக்கு மட்டும்தான் இருக்கிறது.
🌻 அதற்கு பெயர் தான் பகுத்தறிவு.
🌻 பகுத்து அறியும் அறிவு மனிதனுக்கு மட்டும்தான் இருக்கிறது.
🌻 சூன்யத்தை புரிந்து கொண்ட ஒரு மனிதனுடைய மனம் அவ்வளவு விசேஷமாக இருக்கும்.
🌻 அந்த மனிதனின் கால்களில் விழும்போது அந்த மனிதனுக்கு ஆணவம் ஏற்படுவதில்லை.
🌻 ஏனென்றால், அந்த மனம் சூன்யமான பிறகு சலனப்படுவதற்கே இடம் இல்லை.
🌻 அந்த சூன்யத்தை அடையும்போதே, உங்களுடைய ஆணவம் எல்லாம் பழுத்து விழுந்து விடும்.
🌻 அல்லது ஆணவம் அழிந்தால் தான் சூன்யத்தை அடைய முடியும் என்றும் சொல்லலாம்.
🌻 ஒரு நெருப்பை தொட்டால் கரியாகி விடுவீர்கள். அல்லது, நீங்கள் கரியாகிவிட்டால் நெருப்பு ஏதும் செய்யாது.
🌻 அதுதான் யோக சாதனை.
🌻 அந்த சூன்யத்தை அனுபவிக்காமல் புரிந்து கொண்டால், அனுபவித்து எழுதிய மனிதர்களின் பாடல்கள் முரண்படும்.
🌻 சிவவாக்கியர் எழுதிய சிவவாக்கியத்தில்,
📖 அடக்கினும், அடக்கொணாத, அம்பலத்தின் ஊடுபோய்,
📖 அடக்கினும், அடக்கொணாத, அன்பிருக்கும் என்னுளே,
📖 கிடக்கினும், இருக்கினும், கிலேசம்வந்து இருக்கினும்,
📖 நடக்கினும், இடைவிடாத நாதசங் கொலிக்குமே.
🌻 மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்தில்,
📖 நமச்சிவாய வாழ்க ! நாதன் தாள் வாழ்க!
🌻 இப்போது கடவுள் சூன்யமா ? நாதமா ? என்று தோன்றலாம்.
🌻 சூன்யத்தைப் பற்றிய அனுபவம் இல்லாதவர்கள் இந்த வரிகளை தவற விட்டுவிடுவார்.
🌻 அதனால், நல்ல குருவை சந்தித்து அவரிடம் கேட்டு தெரிந்து கொள்வதும்.
🌻 அல்லது, அவரிடம் கற்ற யோக பயிற்சிகளை முறையாக செய்து அனுபவம் பெறுவதும் தான் முரண்படாமல் இருப்பதற்கான வழி.
🌻 திருமூலர் எழுதிய சிவாகமத்தில்,
📖 யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்,
📖 வான்பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின்,
📖 ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்,
📖 தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே,
🌻 நீங்கள் கடவுள் சூன்யம் என்பதையும், அதுதான் எல்லாவற்றையும் படைத்து, காத்து, அழிக்கிறது என்பதையும் அனுபவிக்காதவர் கூட கற்றுக் கொடுக்கலாம்.
🌻 ஆனால் இந்த ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் இதை அனுபவித்தவரால் மட்டும் தான் கற்றுக் கொடுக்க முடியும்.
📖 தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே,
🌻 உணர்வு பெற்ற ஒரு மனிதன் இந்த பூமியில் எப்போதும் இருப்பான். அவன் உதவுவான் என்று தான் இந்த பாடலை திருமூலர் பாடி வைத்திருக்கிறார்.
🌻 ஏன் என்றால், ஒவ்வொரு உணர்வு பெற்ற மனிதனும், என்ன நினைப்பான் என்றால்
🌻 இறைவா, நீ எனக்கு மட்டும் இருந்தால் போதுமா ??
🌻 உன்னை புரிந்து கொண்ட மனிதன் எப்போதும் இந்த பூமியில் இருக்க வேண்டும். என்று நினைப்பான்.
🌻 எனக்கும், அந்த தாகம் தான்.
🌻 யாராவது கடவுளை தெரிந்து கொள்ள மாட்டார்களா?
🌻 யாராவது அதை அனுபவிக்க மாட்டார்களா ?
🌻 இன்னொருவருக்கும் அதைப்போல ஒரு அனுபவம் கிடைக்காதா ?
🌻 என்று தான், கடவுளிடம் வேண்டிக் கொண்டிருக்கிறேன்.
🌻 என்னிடம் யோக பயிற்சி கற்றுக்கொண்டு செய்பவர்களுக்கு 40 நாட்களில் மூன்றாவது கண் விழிப்பு ஏற்படும் அதை நான் சாதித்தும் இருக்கிறேன்.
🌻 என்னுடைய பயிற்சி செய்தால் 40 நாட்களில் மூன்றாவது கண் விழிப்பு கட்டாயம் ஏற்படும் என்று நான் சொல்கிறேன்.
🌻 ஆனால் சூன்ய தரிசனத்தையும், நாத அனுபவத்தையும் நீங்கள் அடைவீர்கள் என்று என்னால் கட்டாயமாக சொல்ல முடியாது.
🌻 ஏனென்றால்,
🌻 நீங்கள் உணர்வின் உச்சமாகவும்,
🌻 நீங்கள் ஆணவம் மற்ற மனிதராகவும் மாற வேண்டும்.
🌻 அப்போதுதான் சூன்ய தரிசனம் என்பது சாத்தியப்படும்.
அதனால்தான்,
📖 திருகுழிஞ்சா ஞானம் என்று,
🌻 சூன்ய தரிசனம் செய்த ரமணர் சொல்லிவிட்டு போயிருக்கிறார்.
🌻 சூன்யம் என்றால் ஒன்றுமில்லை என்று நினைத்துக் கொள்ளலாம் ஆனால் அங்கே அனுபவம் இருக்கிறது.
🌻 சூன்யத்தில் நாத அனுபவம் இருக்கிறது.
🌻 சூன்யத்தில் நிறைந்த நிம்மதியான தூக்கம் இருக்கிறது.
🌻 சூன்யத்தில் அமைதியான வாழ்க்கை இருக்கிறது.
🌻 சூன்யத்தில் எல்லாவற்றையும் சரியாகப் புரிந்து கொள்ளும் மனநிலை வளர்கிறது.
🌻 சூன்யத்தில் ஆண், பெண் பாலற்று இலகுவாக பழகும் மனநிலை வருகிறது.
📖 நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்
📖 பாலொன்று பற்றினால் பண்பின் பயன்கெடும்
📖 கோலொன்று பற்றினால் கூடா பறவைகள்
📖 மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே. (திருமூலர் அருளிய சிவாகமம் – 295)
🌻 இதையெல்லாம் நான் சூன்யத்தை அடைந்துவிட்டேன். என்னால் மட்டும் தான் சாத்தியம் என்பதற்காக சொல்லவில்லை.
🌻 நீங்களும் அதை அடையலாம், நீங்களும் அடைய வேண்டும்.உங்களாலும் முடியும் என்பதற்காகத்தான் சொல்கிறேன் .
🌻 அதனால், இதையெல்லாம் புரிந்து கொள்ளுங்கள். ஆனந்தமாக இருங்கள். மதச் சடங்குகளை உங்களுடைய கொண்டாட்டத்திற்காக வைத்துக் கொள்ளுங்கள்.ஆனால் அதுதான் சரி என்று அடம் பிடிக்காதீர்கள்.
🌻 ஆனந்தமாக இருப்பதே இலக்கு என்று இருங்கள்.
🌻 கடவுள் எப்போதும் உண்டு. அது நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறது.என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
🌻 நான் செய்யக்கூடிய அனைத்தும் கடவுளுக்கு தெரியும். ஏனென்றால் நான் செய்யக்கூடிய அனைத்து செயல்களும் கடவுளுக்கு உள்ளே தான்.
🙏🏻 நன்றி 🙏🏻
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : March 2025