சத்சங்க தலைப்பு : 🌻 மனம் – (ஆன்மா) – PART – 1 🌻
🌻 மனம் (ஆன்மா)
🌻 மனதிற்கு மற்றொரு பெயர் ஆன்மா அல்லது ஆத்மா.
🌻 (மண்) – வெற்றிடத்தில் இருந்து 4️⃣ நிலைகளை கடந்தபின் மண்ணாக மாறுகிறது.
1️⃣ ஆகாயம்
2️⃣ காற்று
3️⃣ நெருப்பு
4️⃣ நீர்
5️⃣ மண்
🌻 (மண் ➡️ மணம்)
🌻 மண்ணில் இருந்து எழும்பும் வாசனைக்குப் பெயர் மணம்.
🌻 (உடல் ➡️ மனம்)
🌻 மண்ணான இந்த உடம்பிலிருந்து எழும்பும் வாசனைக்குப் பெயர் மனம்.
🌻 ம(ண)ம் – ம(ன)ம்
🌻 மண்ணான இந்த உடம்பில் இருக்கும் மனம் விசேஷமானது என்பதை புரிய வைப்பதற்காக இரண்டு சுழி (ன) எழுத்தை பயன்படுத்தி (மணம்) – (மனம்) என்று வேறுபடுத்தி வைத்திருக்கிறார்கள்.
🌻 நான் (உடல் – உயிர் – மனம்) என்ற மூன்றாக இருக்கிறேன்.
🌻 உடல் இருக்கிறது.
🌻 உடலை உயிர் இயக்குகிறது.
🌻 மனம் வாசம் (அனுபவம்) செய்கிறது.
🌻 இந்த மனம் தான் நான்.
🌻 மனதை எண்ணங்களால் அறியலாம்.
🌻 மனம் விழிப்பு நிலையில் எண்ணங்களை (Mind) எழுப்பிக்கொண்டு இருக்கிறது.
🌻 மனம் தூங்கிக்கொண்டிருக்கும் போது எண்ணமற்று இருக்கிறது.
🌻 இறந்த பிறகு அல்லது உடல் தகுதியை இழந்த பிறகு மனம் உடலை விட்டு பிரிகிறது.
🌻 உடல் இல்லாத மனதிற்கு பெயர் பேய்,ஆன்மா அல்லது ஆத்மா, Soul
🌻 மனம் தான் பிறவி எடுக்கிறது.
🌻 அது எடுக்கும் உடலை பொருத்து ஆண் பெண் என்று அடையாளப்படுத்தப்படுகிறது.
🌻 நான் யார் ? என்றால்,
🌻 நான் (உடல் – உயிர் – மனம்) என்ற மூன்றால் ஆனவன்.
🌻 இதைத்தான் மதங்களில்
🌻 (பிதா – குமாரன் – பரிசுத்த ஆவி) என்றும்,
🌻 (சிவன் – பிரம்மா – விஷ்ணு) என்றும் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
உயிர் – (சிவன்) – உடலை இயக்குகின்ற ஜீவன் சிவன்.
மனம் – (பிரம்மா) – எண்ணங்களால் படைக்கின்ற மனம் பிரம்மா.
உடல் – (விஷ்ணு) – பார்க்கப்படுகின்ற இந்த உடல் விஷ்ணு.
🌻 என்னை சுற்றிலும் உள்ள மனித படைப்புகள் அனைத்தும் மனித மனதால் எண்ணமிடப்பட்டு படைக்கப்பட்டது தான்.
🌻 எனது உடலில் ஏற்படும் வலியை அனுபவிப்பதும், உடலாக இருக்கும் நான் என்ற மனம் தான்.
🌻 மனம் கற்றுக் கொள்வதால் அதை சரி தவறு என்று ஒரு வடிவத்தை ஏற்படுத்தி அதனுள் சிக்கி அதைத் தாண்டி சிந்திக்க மறுக்கிறது.
🌻 இறைவனை அடைந்த யோகிகள் மனதை ஆழமாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.
🌻 அவர்கள் நான் மனமாக இருக்கிறேன் என்றும்.
🌻 நான் என் மனதை செம்மை படுத்தினால் இறைவனை அடைந்து விடலாம் என்றும் புரிந்து வைத்திருந்தார்கள்.
🌻 ஏனென்றால் இறைவனை,கடவுளை அல்லது இயற்கையை அனுபவித்த மனித மனங்கள் செம்மையாக இருந்தது.
🌻 அவர்களின் மனம் சரி தவறு என்ற வடிவத்துக்குள் சிக்குவதில்லை.
🌻 அந்த மனம் உடைய மனிதரை அடைந்த மனிதர்களுக்கும் நல்லதும் அதிசயமும் நடக்கிறது.
🌻 இறை உணர்ந்த ஒரு யோகியின் மனம் மற்ற மனிதமனங்கள் செம்மை அடைவதற்கான வழிகளை படைக்கிறது.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : JULY 2025