📂 CATEGORIES 📂 FOR GURU SIVAYOGI POST

📂 குரு சிவயோகி

📂 கடவுள்

📂 குருவும் ~ சீடனும்

📂 ஞானமும் ~ யோகமும்

📂 ஞான நூல் விளக்கம்

📂 ஆன்மீகம்

📂 மதங்களில் தெளிவு

📂 மனம் சார்ந்த பதிவுகள்

📂 கர்மா

📂 ஜோதிடம் (ஜாதகம்)

📂 திருமணம்

📂 கணவன் மனைவி

📂 குழந்தையை வளர்ப்பது எப்படி ?

📂 SEX education (பாலியல் கல்வி)

Read More

இறைவனின் முக்கியநோக்கம் என்ன? எந்தக்காரணத்திற்காக இத்தனையும் படைத்தார்?

🌹 இறைவனின் முக்கிய நோக்கமே மகிழ்ச்சியாக, சந்தோசமாக, கொண்டாட்டமாக இருப்பதற்கு தான்.

🌹 அதற்குத்தான் படைப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறான்.

🌹 படைக்கப்பட்ட படைப்புகள் அனைத்துமே,

🌹 யார் ஒருவன் எல்லாவற்றையும் சுகித்து (சுகமாக அனுபவித்து) கொள்கிறானோ அவனுக்குத்தான்.

🌹 (நான்) கொண்டாட்டமாக இருப்பதற்கு தான் இந்த அத்தனை படைப்புகளையும் கடவுள் படைத்திருக்கிறார் என்பதை ஒரு மனிதன் புரிந்து கொண்டாலே,

🌹 கொண்டாட்டமாகி விடுகிறான்.

📖 உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே. 📖

🌹 உலகம் பிறந்தது எதற்காக என்றால் ??..

🎼🎼 உலகம் பிறந்தது எனக்காக 🎼 🎼

QA 🔓PUBLIC VIDEO🔓 NOVEMBER 2025

Read More

தூங்காமல் தூங்கி சுகம் காணுதல் என்றால் என்ன? #sivayogi #yogakudil #spirituality

🌹  நான் தூங்கும் போது (நான்) என்ற ஒன்று அல்லது எண்ணம்  என்ற ஒன்று இல்லை.

🌹 அதாவது நான் என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை.

🌹  அதனால் தான் நான் குறட்டை விட்டாலும் அல்லது தூக்கத்தில் என்ன செய்தாலும் எனக்கு தெரிவதில்லை.

🌹  அதாவது, நான் என்ற ஒன்று இல்லாததால் எல்லா செயலும் இறைவனின் கட்டுப்பாட்டில் நடக்கிறது.

🌹  அப்படி விழிப்பு நிலையிலும் நான் இன்றி இறை விருப்பத்தில் செயல்பட முடியும்.

🌹  அதைத்தான் யோக சாதனையாக , காணாத கண், கேளாத செவி என்றெல்லாம் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

🌹  அந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் “தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்” என்று நம் சித்தர் பெருமக்கள் பாடி வைத்திருக்கிறார்கள்.

QA 🔓PUBLIC VIDEO🔓 OCTOBER 2025

Read More

என்னை சாகடிக்கவும் துணிந்தவர்களிடம் எப்படி நடந்து கொள்வது?

🌹 ஒருவர் நன்றாக வாழாததால் தான்,

🌹 அவருக்கு மற்றவர்கள் நன்றாக வாழ்வது பிடிக்கவில்லை.

🌹 அதனால் தான் உறவாக இருந்து வாழ விடாமல் தொந்தரவு அல்லது பிரச்சனை செய்கிறார்கள்.

🌹 பிரச்சனையை வரமாக்க வேண்டும்.

🌹 ஒரு கல் எவ்வளவு அடி வாங்குகிறதோ அந்த அளவுக்கு அது ஒரு சிற்பம் ஆகிவிடும்.

🌹 அப்படி உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளால் நீங்கள் உயர்ந்து விடவேண்டும்.

🌹 பிரச்சனையை படிக்கல்ளாக்கி மேலே செல்ல வேண்டும்.

🌹 பிரச்சனைகளைக் கொண்டே,

🌹 மேலும் நன்றாக இருப்பது எப்படி ?

🌹 மேலும் தேவைகளை சந்திப்பது எப்படி ?

🌹 மேலும் திறமைகளை வளர்த்துக் கொள்வது எப்படி?

என்று சிந்தித்து உயர்ந்து விட வேண்டும் .

QA 🔓PUBLIC VIDEO🔓 OCTOBER 2025

Read More

ஒரு உயிரை சாகடிக்கும் போது என் மனநிலை எப்படி இருக்க வேண்டும்?

🌹 உணவிற்காக அல்லது தன் தேவைக்காக கடலில் மீன் பிடிக்கும் ஒரு மீனவருக்கு வலையில் நிறைய மீன்கள் கிடைத்தால் அவருடைய மனநிலை மகிழ்ச்சியாக இருக்கும்.

🌹 மீன் துடிப்பதை பார்த்து துடிக்கும் ஒருவரின் மனநிலை துன்பத்தில் இருக்கும்.

🌹 இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது.

🌹 அதனால், ஒரு உயிரை சாகடிக்கும் போது
என் மனநிலை எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்வியை விட,

🌹 என் மனதை எப்படி சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்
என்ற கேள்விதான் பொருத்தமானது.

🌹 எது சரியான மனம் என்றால் ?

🌹 எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பதுதான் சரியான மனம்.

🌹 மனம் சரியாகிவிட்டால்,

🌹 மீனுக்கு நன்றி சொல்லும் மனநிலையும்,

🌹 அந்த உயிர் சொர்க்கம் அடைய வேண்டும் என்ற நினைப்பும் வெளிப்ப்டும்.

QA 🔓PUBLIC VIDEO🔓 OCTOBER 2025

Read More