மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம் மனிதர்கள்
எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
ஒரு கல் எவ்வளவு அடி வாங்குகிறதோ, அந்த அளவுக்கு
அது ஒரு சிற்பம் ஆகிவிடும்.
பொதுவாக,
🌹 ஒரு மனிதனை வாழ விடாமல், அழிப்பதற்கு தான் சூனியம், மந்திரம், தந்திரம் செய்யும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
🌹 ஆனால் ஒரு மனிதன் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக சூனியம், மந்திரம், தந்திரம், செய்யும் மனிதர்கள் இந்த உலகத்தில் கிடையாது.
🌹 ஏனென்றால், இந்த உலகம் சந்தோஷமான மனிதர்களால் உருவாக்கப்பட்டது கிடையாது.
📖 உலகம் (சொர்க்கம்) என்பது உயர்ந்தோர் மாட்டே 📖
🌹 ஆனால், நம்மை சுற்றி இருக்கும் இந்த உலகம் (நரகம்) உயர்ந்தோரால் உருவாக்கப்பட்டதில்லை என்பதால் தான்,
🌹 மனதால் வாழும் ஒவ்வொரு மனிதனும் கெட்ட எண்ணத்தால், கேடுகெட்ட வாழ்க்கை வாழ்ந்து உலகத்தை(சொர்க்கத்தை) நரகமாக்கி நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
🌹 நரகத்தில் வாழும் அந்த மனிதர்களுடன் உறவாடும் போது நம்முடைய வாழ்க்கையும் நரகமாகிவிடுகிறது.
🌹 ஒரு மனிதன் ஏன் நரகத்தில் இருக்கிறான் என்றால்,
🌹 தேவையை சந்திக்காமல்,
🌹 இலக்கணங்களை வகுத்து அல்லது வகுக்கப்பட்ட இலக்கணங்களின் மீது அக்கறையாக இருந்து,
🌹 குற்ற உணர்வில் சிக்கி,
🌹 வாழ்க்கையை நரகமாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறான்
🌹 என்னை சுற்றியுள்ள உறவுகள் நன்றாக வாழாததால் தான், அவர்களுக்கு நான் நன்றாக வாழ்ந்தால் பிடிக்கவில்லை.
🌹 அதனால்தான் அவர்கள் எனக்கு தொந்தரவு செய்கிறார்கள்.
🌹 அவர்களுக்கு பயந்து நான் வாழாமல் இருக்கக் கூடாது.
🌹 நிறைய மனிதர்களின் கடுமையான வார்த்தைகளை கடந்துதான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.
🌹 ஏனென்றால் எதுவும் என்னால் ஆனது கிடையாது என்பது எனக்குப் புரிந்து விட்டது.
🌹 ஒரு கல் எவ்வளவு அடி வாங்குகிறதோ அந்த அளவுக்கு அது ஒரு சிற்பம் ஆகிவிடும்.
🌹 அப்படித்தான் உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளால் நீங்கள் உயர்ந்து விடுவீர்கள்.
🌹 பிரச்சனையை படிக்கல்ளாக்கி மேலே செல்ல வேண்டும்.
🌹 ஆனால் பெரும்பாலான மனிதர்கள் பிரச்சனைகளில் சிக்கி வழுக்கி கீழே விழுந்து விடுகிறார்கள்.
🌹 அதனால் பிரச்சனைகளால் கீழே விழாமல்,
🌹 பிரச்சனைகளைக் கொண்டே,
🌹 மேலும் நன்றாக இருக்க முடியுமா?
🌹 மேலும் தேவைகளை சந்திக்க முடியுமா ?
🌹 மேலும் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியுமா?
🌹 என்று சிந்தித்து உயர்வாக வாழ்ந்தால்,
🌹 வள்ளுவன் சொன்ன உயர்வான உலகத்தில் வாழலாம்.