மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
🌻 சிவன் என்றாலே இந்து மதம் தான் நினைவுக்கு வரும்.
🌻 சிவன் சிலையை நீங்கள் கோவில்களில் பார்த்திருக்கலாம்.
🌻 ஆராய்ச்சியாளர்கள் சிவன் சிலையின் வடிவத்தை புதையுண்ட நகரங்களில் இருந்து எடுத்து இருக்கிறார்கள்.
🌻 அதாவது, சிந்து சமவெளி நாகரிகத்தில், ஐரோப்பா மொகஞ்சதாரோ போன்ற புதையுண்ட நகரங்களை ஆராய்ச்சி செய்ததில் சிவன் வடிவம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
🌻 அப்படி என்றால் முந்தைய காலத்தில் இருந்தே சிவன் என்ற ஒன்று இருந்திருக்கிறது.
🌻 அதை அவர்கள் வழிபட்டார்களா என்று தெரியாது.
🌻 ஆனால் சிவனின் வடிவத்தை செதுக்கி வைத்திருக்கிறார்கள்.
🌻 செதுக்கப்பட்ட அந்த வடிவத்தில், ஒருவர் அமர்ந்திருக்கிறார்.
🌻 அவர் மீது பாம்பு சுற்றப்பட்டு இருக்கிறது.
🌻 மாடு, குதிரை, மான் போன்ற விலங்குகள் எல்லாம் அவரை சுற்றி இருக்கிறது.
🌻 உயிருள்ள ஒரு பாம்பு எப்படி மனிதனுடன் ஒன்றாக இருக்கும்.
🌻 பாம்பை கண்டால் மாடு மிரளும்.
🌻 ஆனால் இரண்டும் ஒன்றாக இருப்பதைப் போன்று ஒரு முரண்பாடான வடிவத்தை செதுக்கி வைத்திருக்கிறார்கள்.
🌻 இதைப் போன்று வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமான வடிவங்கள் கிடைக்கின்றன.
🌻 அதில் ஒரு மாடும், அதன் முன் ஒரு கல்லும் (லிங்கமும்) இருப்பது போன்ற வடிவம் கிடைக்கிறது.
🌻 இந்த சிலை வடிவங்கள் ஏதோ ஒன்றை சொல்ல வருகிறது.
🌻 நிறைய மனிதர்கள் சிவத்தை பற்றி பேசியிருக்கிறார்கள்.
🌻 திருமூலர் சிவாகமம் என்னும் நூலையே எழுதியிருக்கிறார்.
🌻 சிவன் அவன் என் சிந்தையும் நிறைந்த அதனால் என்று மாணிக்கவாசகர் எழுதியிருக்கிறார்.
🌻 சிவன் சிந்தையில் நிறைந்தான் என்றால் சிவன் உருவம் உள்ளதா? உருவம் மற்றதா?என்று இன்னொரு கேள்வியும் இருக்கிறது.
🌻 ஆனால், கோவில்களில் உருவமாக சிவன் சிலையை அல்லது ஓவியத்தை வைத்திருப்பார்கள்.
🌻 அதை நீங்கள் பார்த்தீர்கள் என்றால்,
🌻 ஒரு மனிதன் புலித்தோல் மீது அமர்ந்து கொண்டும்,
🌻 திரிசூலம் என்னும் ஆயுதத்தை கையில் கொண்டும்,
🌻 அதில் உடுக்கை கட்டப்படும்,.
🌻 நிலவை தலையில் சூடிக் கொண்டும்,
🌻 தலையில் கங்கை என்று ஒரு மனைவியும்,
🌻 பார்வதி என்ற மற்றொரு மனைவி அருகில் அமர்ந்திருப்பதையும் நீங்கள் கோவில்களில் பார்த்திருக்கலாம்.
🌻 மனிதர்கள் சிந்தித்து உண்மை புரிந்து கொள்வார்கள் என்பதற்காக செதுக்கப்பட்ட வடிவத்தை,
🌻 சிந்திக்காமல் அப்படியே ஒத்துக்கொள்ள, வழிபட பழகி விட்டோம்.
🌻 சிவனை புரிந்து கொள்ளாமலேயே அதைப்பற்றி நிறைய மனிதர்கள் பேச வந்து விட்டார்கள்.
🌻 சிவன் என்பது உன்னதத்தின் உச்சம்.
🌻 கடவுள் என்ற ஒன்றையும் அதன் தன்மையையும் மொகஞ்சதாரோ, ஐரோப்பா காலத்தில் வாழ்ந்த யாரோ சில மனிதர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
🌻 மொழி கடந்து சொல்ல வேண்டும் என்பதற்காக சிலை செய்து வைத்திருக்கிறார்கள்.
🌻 சிவன் என்றால் ஜீவன் அல்லது உயிர்.
🌻 அந்த உயிரின் தன்மை வெட்ட வெளியாக இருக்கிறது.
🌻 அந்த வெட்ட வெளி உடலுக்குள் நிறைந்து (உயிராக) அல்லது (ஜீவனாக) அல்லது (சிவனாக) இருப்பதால் தான்,
🌻 சிவன் அவன் என் சிந்தையில் நிறைந்த அதனால் என்று மாணிக்கவாசகர் எழுதியிருக்கிறார்.
🌻 அந்த (வெட்ட வெளி) அல்லது (ஜீவன்) அல்லது (சிவன்) அல்லது (உயிர்) கடத்திற்க்குள் உடலுக்குள் நிறைந்து இருப்பதால்தான்,
🌻 (கடவுள்) என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள்.
🌻 மனிதருக்குள் இருப்பதும் எல்லா ஜீவராசிகளுக்குள் இருப்பதும் சிவன் தான்.
🌻 எல்லாமே ஒன்று தான் ( சிவன் தான்) என்பதை புரிய வைப்பதற்காக,
🌻 மனிதன், பாம்பு, குதிரை, மாடு, மான் போன்ற அனைத்து ஜீவராசிகளும் ஒன்றாக்க இருப்பதைப் போன்று சிவன் வடிவத்தை நம் முன்னோர்கள் செதுக்கி வைத்தார்கள்.
🌻 ஒன்றுக்கொன்று அறிவில் முரண்பட்டிருந்தாலும், எல்லாவற்றிலும் சிவன் தான் இருக்கிறது என்பதை புரிய வைக்க பார்க்கிறார்கள்.
🌻 ஓரறிவு முதல் ஆறறிவு மனிதன் வரை உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் சிவன் தான் இருக்கிறது என்பதை புரிய வைக்க பார்க்கிறார்கள்.
🌻 சிவன் எங்கு இருக்கிறார் என்றால்,
🌻 சுடுகாட்டில் ஆடிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லுவதுண்டு.
🌻 அதாவது உடலில் தான் சிவன் ஆடிக் கொண்டிருக்கிறார்.
🌻 அதனால்தான் உடல் சூடுகிறது என்றும்,
🌻 சுடும் இந்த உடலை சுடுகாடு என்று மறைமுகமாக சொல்ல பார்க்கிறார்கள்.
🌻 சிவம் இல்லை என்றால் சவம்
🌻 என்று சொல்வதும் இதைத்தான்
🌻 சிவன் ஆடிக் கொண்டிருப்பதால் சுடும் இந்த உடல்.
🌻 சிவன் உடலில் இல்லாமல் போய்விட்டால் சுடாத சவமாகிவிடும்.
🌻 அதாவது பிணமாகிவிடும்.
🌻 சிவன் ஒன்று தான்.
🌻 அதற்குப் பெயர்கள் பல பல
🌻 அல்லா என்றாலும்
🌻 சிவன் என்றாலும்
🌻 கடவுள் என்றாலும்
🌻 கர்த்தர் என்றாலும்
🌻 GOD என்றாலும்,
🌻 அது வெட்ட வெளியான சிவனையே குறிக்கிறது.
GOD என்றால்
G – Generate (படைத்தல்)
O – Organised ( காத்தல்)
D – Destroying (அழித்தல்)
🌻 இந்த மூன்றையும் சிவன் தான் செய்கிறது.
🌻 சிவனின் மனைவி பார்வதி.
🌻 பார்வதி என்றால் (பார்க்கப்படுகின்ற ஆதி), அல்லது உடல்
🌻 வெட்ட வெளியான சிவன் தான் உடலுடன் உறவாடி கொண்டிருப்பதால் சிவனின் மனைவி பார்வதி.
🌻 சிவன் (உயிர்) – பார்வதி (உடல்)
🌻 வெட்ட வெளியான சிவன் தான் உடலுடன் உறவாடிக் கொண்டிருக்கிறது என்பதை புரிய வைப்பதற்காகத்தான்
🌻 மனிதன் மற்றும் ஜீவராசிகளின் சிலையை,சிவன் சிலை என்று செய்து வைத்திருக்கிறார்கள்.
🌻 இது புரிந்தால் சிவனும் பார்வதியும் என்னுடன் தான் இருக்கிறார்கள் என்பது புரிந்துவிடும்.
🌻 அவர்கள் தான் என்னுடைய அம்மா அப்பா என்பது புரிந்துவிடும்.
🌻 (சிவன்) (உயிர்) (அப்பா) – (பார்வதி) (உடல்) (அம்மா)
🌻 இதை புரிந்து கொள்ளாமல்,
🌻 தென்னாடுடைய சிவனே போற்றி என்று சொன்னதும்,
🌻 தெற்கு நாட்டில் இருக்கும் சிவனே போற்றி என்று அர்த்தம் செய்து கொண்டு
🌻 தெற்கு நாட்டில் சிவன் இருப்பதாக சிவன் சிலையை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
🌻 தென்னாடுடைய சிவனே போற்றி என்றால்.
🌻 தெற்கு நாட்டில் உள்ள சிவன் என்று பொருள் கிடையாது.
🌻 தென்படும் நாட்டில் (தெரிகின்ற நாட்டில்) எல்லாம் நிறைந்திருக்கும் வெட்ட வெளியே (சிவனே) போற்றி என்று பொருள்.
🌻 அதனால்தான் மாணிக்கவாசகர் பார்க்கும் இடம் எங்கும் நீக்கமர நிறைந்திருக்கின்ற ஆனந்த பரிபூரணமே என்று பாடி வைத்திருக்கிறார்.
🌻 எனக்கு உள்ளே தான் சிவன் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டால்
🌻 நான் என்னை கொண்டாட்டமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்வது தான் சிவனுக்கு நான் செய்யும் தூண்டு என்பது புரிந்துவிடும்.
🌻 அவர்தான் சிவத்தொண்டர்
🌻 அதனால் தான் திருமூலர், சிவாகமத்தில்
தன்னை அறிய தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்க தான் இருந்தானே.
🌻 சிவன் ஏன் நிலவை தலையில் சூடிக்கொண்டிருக்கிறார் என்றால்,
🌻 நிலவு எங்கே இருக்கிறது என்றால் வானத்தில் வெற்றிடத்தில் இருக்கிறது.
🌻 அதாவது வெற்றிடம் தான் நிலவை சூடிக் கொண்டிருக்கிறது
🌻 இதை புரிய வைப்பதற்காக தான் நிலவை சிவன் தலையில் சூடியபடி வடிவமைத்திருப்பார்.
🌻 சிவன் எனக்குள்ளே தான் உடுக்கை அடித்துக் கொண்டு ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறார்.
🌻 அந்த சத்தத்தை உங்கள் நெஞ்சினை தொட்டு பார்த்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
🎼 நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா 🎼
🌻 என்று சிவத்தைப் புரிந்த மனிதன், சிவனாகவே பாடி இருப்பான்.
🌻 அதாவது, சிவன் தான் (வெற்றிடம் தான்) என் உடல் முதல் அகிலத்தையும் அசைந்து கொண்டிருக்கிறது.
🌻 அது இடம் கொடுத்திருப்பதால் தான் என்னால் அசைய முடிகிறது
🌻 இதை புரிந்து கொண்டால் நான் செய்தேன் என்று ஆணவம் கொள்ள முடியாது.
🌻 சிவன் அல்லது வெற்றிடம் இடம் கொடுத்திருப்பதால் தான் தான் நம்மால் செய்ய முடிகிறது.
🌻 அகத்திக் கீரையை மாட்டுக்கு கொடுப்பதுதான் சிவ வழிபாடு என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
🌻 அதை நேரடியாக புரிந்து கொண்டு அகத்திக்கீரையை மாட்டுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
🌻 உண்மையிலேயே சிவ வழிபாடு என்றால் அகத்திக்கீரை மாட்டுக்கு கொடுப்பது கிடையாது.
🌻 அகத்திற்கு இறை கொடுப்பது.
🌻 மாடு போல அசைபோடும் மனதிற்கு,
🌻 இறையாக இறைவனை கொடுப்பது (இறைவனை சிந்திப்பது)
🌻 இறையை அசைபோட்டு செரித்து விட்டால் அதற்கு அந்த மாட்டுக்கு பெயர் நந்தி
🌻 அதாவது, இறைவனை சிந்தித்து தெளிந்து விட்டால் (எண்ணமற்று போய்விட்டால்) அந்த மனதிற்கு பெயர் நந்தி
🌻 ஏன் சிவன் தலையில் பாம்பு சுற்றி இருக்கிறது என்றால்,
🌻 சிவத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் ஆற்றல் உடல் முழுவதும் பரவி இருக்கும்
🌻 விசேஷமாக தலையைத் தாண்டி வெளியேறும்.
🌻 அதாவது சிவத்தை அனுபவிக்கும் மனிதனுக்கு (சிவனுக்கு) குண்டலினி எழும்பி இருக்கும்.
🌻 அதை புரிய வைப்பதற்காக சிவன் தலையிலும் அங்கங்கு பாம்பு சுற்றப்பட்டது போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும்.
🌻 தன்னுள் இருக்கும் ஆற்றலை அல்லது ஆன்மாவை மிகைப்படுத்தி,குண்டலினி எழுப்பி, மூன்றாவது கண் விழிப்படைந்து,
🌻 சிவத்தை அனுபவித்து சிவனாக வேண்டும் என்று நினைக்கும் மனிதனுக்கு குரு கற்றுக்கொடுத்த உபதேசமும் பயிற்சியும் உதவும்.