மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
சிவாகமம் – (2627)
📖 ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
📖 ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
📖 ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
📖 ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே.
🌻 ஓம் என்ற ஒலியாக நிற்கும் ஓங்காரத்தின் உள்ளே ஒரு மொழி என்ற புரிதல் உண்டாக்கும் வார்த்தை இருக்கிறது.
🌻 ஓம் என்ற ஓங்காரத்தின் உள்ளே உருவமும் அருவமும்.
🌻 ஓம் என்ற ஓங்காரத்தின் உள்ளே பலவகை பேதம் பிறக்கிறது.
🌻 ஓம் என்ற ஓங்காரத்தின் மூலம் ஒண்முத்தியும் சித்தியும் உண்டாகிறது.
✍🏻 பின்குறிப்பு – ஓம் என்ற நாதமே முத்திக்கு ஆதாரமானது.
சிவாகமம் – (2628)
📖 ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதங்கள்
📖 ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்
📖 ஓங்கார தீதத்து உயிர்மூன்றும் உற்றன
📖 ஓங்கார சீவ பரசிவ ரூபமே.
🌻 ஓம் என்ற ஓங்காரத்தில் இருந்தே பூதங்கள் ஐந்து உருவாகிறது.
🌻 ஓங்காரத்தின் உள்ளே இருந்து உதித்த சராசரம்
🌻 ஓங்காரத்தின் உள்ளே அதீதமாய் உயிர் மூன்றும் நின்றன.
🌻 ஓங்காரம் சீவ பரசிவ உருவமே.
✍🏻 பின்குறிப்பு – ஓங்கார நாதத்தில் இருந்தே பூதமும் உயிர்களும் தோன்றின.
சிவாகமம் – (2629)
📖 வருக்கம் சுகமாம் பிரமமும் ஆகும்
📖 அருக்கம் சராசரம் ஆகும் உலகில்
📖 தருக்கிய ஆதாரம் எல்லாம்தன் மேனி
📖 சுருக்கம்இல் ஞானம் தொகுத் துணர்ந் தோரே.
🌻 வருக்கம் சுகமானது அது பிரம்மத்தின் ஏற்பாடு ஆகும்
🌻 அருக்கம் சராசரம் ஆகின்ற உலகில்
🌻 வாய்த்த ஆதாரம் எல்லாம் தன் மேனி
🌻 சுருக்கமாகும் குறையற்ற ஞானம் இதை நன்கு தொகுத்து உணர்ந்தோர்க்கே.
✍🏻 பின்குறிப்பு – வர்க்க பேதம் பற்றிய அறிவு உள்ளவர் தெளிந்த ஞானம் உள்ளவர்.
சிவாகமம் – (2630)
📖 மலையும் மனோபவம் மருள்வன ஆவன
📖 நிலையில் தரிசனம் தீப நெறியாம்
📖 தலமும் குலமும் தவம்சித்த மாகும்
📖 நலமும்சன் மார்க்கத்து உபதேசம் தானே.
🌻 மலைத்து நிற்கும் மனோபாவம் மருள் அறிவு ஆகும்.
🌻 நிலையான தரிசனம் தீப நெறியாகும்
🌻 நிற்கும் தலமும் குலமும் தவத்தின் சித்தத்தால் ஆகும்
🌻 நலம் அருள்வது சன்மார்க்க உபதேசம் தானே.
✍🏻 பின்குறிப்பு – மருள் அறிவு மலைத்தும் அருள் அறிவு நிலைத்தும் இருக்கும்.
சிவாகமம் – (2631)
📖 சோடச மார்க்கமும் சொல்லும் சன்மார்க்கிகட்கு
📖 ஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழிற்
📖 கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்து
📖 ஏறியே ஞானஞே யாந்தத்து இருக்கவே.
🌻 நட்புடன் வழிகாட்டும் ஆறு மதமும் அறிந்தவருக்கு
🌻 ஆடிய இரண்டு ஆறின் அந்தமும் பதிநான்கில்
🌻 கூடிய அந்தமும் கோதண்டமும் கடந்து
🌻 ஏறியே ஞான ஞேயத்து இருக்கவே.
✍🏻 பின்குறிப்பு – மத நுட்பம் அறிந்து தன் அந்தம் புரிந்து கோதண்டம் கடப்பதற்கு காரணம் ஞானத்தில் திளைக்கவே.
சிவாகமம் – (2632)
📖 ஒளியை அறியில் உருவும் ஒளியும்
📖 ஒளியும் உருவம் அறியில் உருவாம்
📖 ஒளியின் உருவம் அறியில் ஒளியே
📖 ஒளியும் உருக உடனிருந் தானே.
🌻 ஒளியை அறிய ஊடி உருவும் ஒளியும்,
🌻 ஒளியையும் உருவமாக அறிந்தால்
🌻 ஒளியும் உருவமே ஒளியின் உருவமாக இருப்பதும் ஒளியே
🌻 ஒளியும் உருக அதன் உடன் இருந்தானே.
✍🏻 பின்குறிப்பு – ஒளி ஒளிர்வதற்கான காரணப் பொருளாக இறையே இருக்கிறது.
சிவாகமம் – (2633)
📖 புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும்
📖 அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும்
📖 பகல்ஒளி செய்தும் அத்தா மரையிலே
📖 இகல்ஒளி செய்துஎம் பிரான்இருந் தானே.
🌻 ஒளியின் துணையுடன் புகுவது எளிமையானதாக எட்டும் பல புவனங்கள்.
🌻 உள்ளத்தே ஒளியாய் இருக்க இருள் அழுக்கு அழியும்படி வீசும்.
🌻 வெளிப்படையாக ஒளி செய்தும் அத்தாமரையில்
🌻 இகல் ஒளி செய்தும் எம் தலைவன் இருந்தானே.
✍🏻 பின்குறிப்பு – ஒளியின் துணையுடன் பலவற்றை அறியச் செய்து ஒளிக்குள் இறை இருக்கிறது.
சிவாகமம் – (2634)
📖 விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன்
📖 துளங்கொளி பெற்றன சோதி யருள
📖 வளங்கொளி பெற்றதே பேரொளி வேறு
📖 களங்கொளி செய்து கலந்து நின்றானே.
🌻 அறியும் ஒளியாக சூரிய சந்திரன் இருக்க
🌻 அதை உணரும் ஒளி பெற்றன சோதியின் அருளே.
🌻 சோதியின் அருளால் வளம் பெற்றதே பேரொளி அருளே ஆகும்
🌻 மறைமுக ஒளியாகவும் இறை கலந்து நிற்கின்றது.
✍🏻 பின்குறிப்பு – ஒளியாக இருந்து அறியவும் அறியாதபடி இருக்கவும் இறையே செய்கிறது.