மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
சிவாகமம் – (2598)
📖 எறிவது ஞானத் துறைவாள் உருவி
📖 அறிவது னோடேயவ் வாண்டகை யானைச்
📖 செறிவது தேவர்க்குத் தேவர் பிரானைப்
📖 பறிவது பல்கணப் பற்றுவி டாரே.
🌻 விட்டு எறிவதற்காக ஞானத்து உறைவாள் உருவி
🌻 அறிவது உடனே அந்த ஆண்டகையானை
🌻 செம்மை செய்வது தேவர்க்குத் தேவர் தலைவனை
🌻 பரிதவிக்கச் செய்யும் பல போக்கின் பற்றை விட்டாரே.
✍🏻 பின்குறிப்பு – ஞான வாளால் அறியாமையை அழிக்கலாம்.
சிவாகமம் – (2599)
📖 ஆதிப் பிரான்தந்த வாளங்கைக்கொண்டபின்
📖 வேதித்து என்னை விலக்கவல் லாரில்லை
📖 சோதிப்பன் அங்கே சுவடு படாவண்ணம்
📖 ஆதிக்கட் டெய்வ மவனிவ னாமே.
🌻 உலகம் படைத்த நாயகன் தந்த வாள் என் கை அடைந்ததால்
🌻 வேதியல் மாற்றம் செய்து என்னை இறை இடத்தில் இருந்து விலக்க முடிந்தவர் இல்லை.
🌻 அப்படி வருபவரை சோதித்து சுவடும் ஏற்படாதபடி
🌻 காத்துக் கொள்ளும் இவன் அவன் என்ற ஆதிக்கண் உள்ளவனே.
✍🏻 பின்குறிப்பு – இறைப் பற்றால் எதையும் வென்று நிறைவாய் வாழ்ந்து தெய்வமாகலாம்.
சிவாகமம் – (2600)
📖 அந்தக் கருவை யருவை வினைசெய்தற்
📖 பந்தம் பணியச்சம் பல்பிறப் பும்வாட்டிச்
📖 சிந்தை திருத்தலுஞ் சேர்ந்தாரச் சோதனை
📖 சந்திக்கத் தற்பர மாகுஞ் சதுரர்க்கே.
🌻 இயல்பாய் இருந்த கருவை உருவமான ஒன்றை தன் வினைக்கு ஏற்ப
🌻 பந்தம் பணித்து பல பிறவி கொடுத்து வாட்டி
🌻 சிந்தையை திருத்தி திருந்தாவிடின் தீராத சோதனை தர
🌻 அதை சந்தித்து வெல்லுதல் ஆகும் சதுரர்க்கே.
✍🏻 பின்குறிப்பு – நான்கு மறை அறிந்தவரும் சோதனை கடந்தே இறை உணர முடியும்.
சிவாகமம் – (0000)
📖 உரையற்ற தொன்றை யுரைத்தான் எனக்குக்
📖 கரையற் றெழுந்த கலைவேட் டறுத்துத்
📖 திரையொத்த என்னுடல் நீங்கா திருத்திப்
📖 புரையற்ற என்னுட் புகுந்தற் பரனே.
சிவாகமம் – (2601)
📖 பலியும் அவியும் பரந்து புகையும்
📖 ஒலியும் ஈசன் தனக்கென்றே உள்கிக்
📖 குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த்
📖 தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே.
🌻 பலிபீடமும் வேதனைக்கு தீர்வும் வாசனையான புகையும்
🌻 மணியின் ஒலியும் ஈசன் எனக்கானவன் என்று உருகும்
🌻 மனத்தவர் நிறைந்தும் இருக்கும் குருமடத்தை கண்டவர் தாமாக போய்
🌻 தளிரும் மலரடி சார்ந்து நின்றாரே.
✍🏻 பின்குறிப்பு – நல்ல குருமடத்தை அடைந்தவர் உபதேசப் பொருளை சார்ந்து இருப்பார்.
சிவாகமம் – (2602)
📖 இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை
📖 அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின்
📖 அவனுக்கு இவனில்லம் என்றென்று அறிந்தும்
📖 அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே.
🌻 இவன் என்பதே இல்லம் அதைக்கடந்து இறைவனுக்கு வேறு இல்லம் அங்கே
இல்லை.
🌻 அவனுக்கு வேறு இல்லம் உண்டா என அறிந்தபின்
🌻 அவனுக்கு இவனே இல்லம் என்று அறிந்தும்
🌻 அவனை புறம் என்று அரற்றுகின்றாரே.
✍🏻 பின்குறிப்பு – இறை தனக்குள் குடி இருக்க புறத்தே உள்ளது என அரற்றுகின்றாரே.
சிவாகமம் – (2603)
📖 நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின்
📖 கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி
📖 தேட அரியன் சிறப்பிலி எம்இறை
📖 ஓடும் உலகுயிர் ஆகிநின் றானே.
🌻 நாடவேண்டிய பெருந்துறையை நான் கண்டு அடைந்தபின்
🌻 கூடும் சிவனது கொய்யமுடியா மலர் சேவடி
🌻 தேட அரியவன் சிறப்பிற்கு நிகர் அற்றவன் எம் இறை
🌻 நிலைக்காது ஓடும் உலகிற்கு உயிராகி நின்றானே.
✍🏻 பின்குறிப்பு – உபதேசம் அறிந்து வெற்றி பெற்றபின் உலக உயிர்களாய் இருப்பதை அறியலாம்.
சிவாகமம் – (2604)
📖 ஆசனத் தோடு மலையும்
📖 இயம்புவன் சித்தக் குகையும் இடமும்
📖 இயம்புவன் ஆதாரத் தோடு வனமும்
📖 இயம்புவன் ஈராறு இருநிலத் தோர்க்கே.
🌻 எடுத்து இயம்புபவன் ஆசனங்களுடன் இரண்டு மலையும்
🌻 இயம்புபவன் சித்தமுடன் இறை அருளிய குகையும் இடமும் எடுத்து
🌻 இயம்புபவன் ஆதாரத்துடன் வளமும்
🌻 இயம்புபவன் இரண்டு ஆற்றை ஆண் பெண் என ஆன இருநிலத்தோர்க்கே.
✍🏻 பின்குறிப்பு – ஆண் பெண் என இருவருக்கும் உபதேசம் எடுத்து இயம்புபவன் குரு
சிவாகமம் – (2605)
📖 முகம்பீடம் மாமடம் முன்னிய தேயம்
📖 அகம்பர வர்க்கமே ஆசில்செய் காட்சி
📖 அகம்பர மாதனம் எண்எண் கிரியை
📖 சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே.
🌻 முகம் எண்ணங்களை பலி இட ஏற்ற பீடம் அதனை அடுத்து அமைந்ததே உடல் மடம்.
🌻 உள்ளே எழும் மாற்றங்களே ஆட்சி செய்யும் காட்சி.
🌻 உள்ளே பரமன் ஆசனம் எண்ணிக்கை அற்ற கிரியைகள் நடக்கின்றது.
🌻 ஈரமாக உள்ளதே தற்குகை ஆதாரம்.
✍🏻 பின்குறிப்பு – குரு அடைந்தவர் எளிதில் விளக்கம் பெறலாம்.
சிவாகமம் – (2606)
📖 அகமுக மாம்பீடம் ஆதார மாகும்
📖 சகமுக மாம்சத்தி யாதன மாகும்
📖 செகமுக மாம்தெய்வ மேசிவ மாகும்
📖 அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே.
🌻 உள்முகமாக இருப்பதற்கு ஆதாரம் ஆவது பீடம்.
🌻 யாருக்கும் சத்தி அளிப்பது ஆதனம் ஆகும்.
🌻 உலகில் உள்ளோர்க்கு தெய்வம் உள்ளே இருக்கும் சிவமாகும்.
🌻 அகத்தே கண் கொண்டு ஆய்ந்தவர்க்கே இந்த அறிவு விளங்கும்.
✍🏻 பின்குறிப்பு – உள்ளே ஆராயும் அறிவு உள்ளவரே தனக்குள் இறை உணர்வார்.