மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
திருமூலருக்கு பின்வந்த மனிதர்களால்
3000 ஆண்டு வாழ்ந்த மனிதனின் புரிதல் என்பது
திருமூலரின் ஆயுட்காலம் 3000 என்று மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
🌹 திருமூலர் 3000 ஆண்டுகள் வாழ்ந்த மனிதர் என்றும்,
🌹 அவர் எழுதிய திருமந்திரம் என்னும் நூலில்,
🌹 வருடத்திற்கு ஒரு பாடல் வீதம் மொத்தம் 3000 பாடல்களை எழுதி இருக்கிறார் என்றும்,
🌹 அதனால் அவருடைய ஆயுட்காலம் 3000 ஆண்டுகள் என்றும் நம்பப்படுகிறது.
🌹 முதலில் திருமந்திரத்தை எழுதியவர் ஒரு மனிதன்.
🌹 இதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
🌹 ஏனென்றால் மற்ற ஜீவராசிகளுக்கு எழுத படிக்கத் தெரியாது.
🌹 அவர் எழுதிய பாடல்களைக் கொண்டே,
🌹 திருமூலர் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர் என்றும்,
🌹 திருமூலர் கடவுள் புரிந்த மனிதர் என்றும்,
🌹 திருமூலர் வாழ்க்கையின் சூட்சுமங்களை புரிந்து கொண்ட மனிதர் என்று புரிந்து கொள்ளலாம்.
பின்னை நின்று என்னே பிறவி பெறுவது?
முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்;
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே.
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே.
🌹 இவ்வளவு புரிந்து எழுதிய மனிதன் தான் எவ்வளவு காலம் வாழ்ந்தான் என்பதை பற்றி இந்த பாட்டிலும் எழுதவில்லை.
🌹 திருமூலர் காலத்திற்குப் பின்வந்த மனிதர்கள் திருமந்திரத்தை படித்து,
🌹 சராசரி மனிதனால் இந்த நூலை எழுதியிருக்க முடியாது.
🌹 ஒரு 3000 வருடம் வாழ்ந்திருந்தால் தான் இந்த நூலை எழுதியிருக்க முடியும்
🌹 என்று சொன்னவுடன்,
🌹 அது மடைமாற்றம் செய்யப்பட்டு திருமூலரின் ஆயுட்காலம் 3000 ஆண்டுகள் என்று மக்களால் நம்பப்படுகிறது.
🌹 ஆனால் உண்மையிலேயே அவர்கள் சொல்ல வந்தது,
🌹 ஒரு மனிதன் 3000 வருடம் வாழ்ந்தால் என்ன புரியுமோ அந்த புரிதலை திருமூலர் பெற்றிருக்கிறார் என்றும்,
🌹 தன்னுடைய புரிதலை நூலாக எழுதி இருக்கிறார்.
🌹 அதனால் இந்த நூல் விசேஷமானது என்று எல்லா எல்லா மனிதர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட ஒரு விஷயத்தை,
🌹 சரியாக புரிந்து கொள்ளாமல் அவருடைய ஆயுள் 3000 ஆண்டுகள் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்.