மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
சிவாகமம் – (2244)
📖 பரமா நனவின்பின் பால்சக முண்ட
📖 திராமார் கனவும் சிறந்த சுழுத்தி
📖 உரமாம் உபசாந்தம் உற்றல் துறவே
📖 தரனாம் சிவதுரி யத்தனும் ஆமே.
🌻 பரத்தின் நனவால் பால்சகம் உண்டாக
🌻 திரமான கனவும் சுழுத்தியும்
🌻 உரமாக துணை அமைதி அடைவதே துறவு.
🌻 இத்தரமானவரே சிவதுரியத்தான்.
✍🏻 பின்குறிப்பு – நடப்பதையே கனவாக காண்பவர் தரமான சிவதுரியத்தார்.
சிவாகமம் – (2245)
📖 சீவன் துரியம் முதலாகச் சீரான
📖 ஆவ சிவன்துரி யாந்தம் அவத்தைபத்தும்
📖 ஓவும் பராநந்தி உண்மைக்குள் வைகியே
📖 நாலேழ் விடுவித்துநின் றானே.
🌻 சீவன் துரியம் முதல் சீரானதாக
🌻 ஆக சிவன் துரியானந்தம் வரை அவத்தைகள்
(01) சீவதுரியம்,
(02) சிவதுரியாதீதம்,
(03) பரநனவு,
(04) பரகனவு,
(05) பரசுழுத்தி,
(06) பரதுரியம்,
(07) சிவநனவு,
(08) சிவக்கனவு,
(09) சிவசுழுத்தி,
(10) சிவதுரியம்
🌻 என பத்தும் கடந்த பராநந்தி உண்மைக்குள் வைத்தவன்.
🌻 அடுத்து மேவும் ஒன்றுடன் பதினொன்றையும் விடுவித்து நின்றானே.
✍🏻 பின்குறிப்பு – யாவற்றையும் கடந்து நிற்கச் செய்தார் நந்தி.
சிவாகமம் – (2246)
📖 பரம்சிவன் மேலாம் பரமம் பரத்தில்
📖 பரம்சிவன் மேலாம் பரநனவாக
📖 விரிந்த கனாவிடர் வீட்டும் சுழுமுனை
📖 உரந்தரும் மாநந்தி யாம்உண்மை தானே.
🌻 பரம்சிவன் இதைவிட மேலானதாம் பரமம் பரத்தில்,
🌻 பரம்சிவன் இதைவிட மேலானதாம் பரநனவாக,
🌻 விரியும் கனாவை விடச் செய்யும் சுழுமுனை
🌻 உரமாக இருக்கும் மாநந்தியாம் உண்மை தானே.
✍🏻 பின்குறிப்பு – நல்ல குருவின் துணை உரம் போல் அமையும்.
சிவாகமம் – (2247)
📖 சார்வாம் பரம்சிவன் சத்தி பரநாதம்
📖 மேலாய விந்து சதாசிவம் மிக்கோங்கிப்
📖 பாலாய்ப் பிரமன் அரிஅம ராபதி
📖 தேவாம் உருத்திரன் ஈசனாம் காணிலே.
🌻 சார்ந்து இருக்க வேண்டியது பரம்சிவன் சத்தி, பரநாதம்,
🌻 மேலாய விந்து, சதாசிவம் கொஞ்சம் வளர்ந்தபின்
🌻 பாலாய் பிரமன் அரி அமராபதி, அடுத்து
🌻 உருத்திரன் காணும் பொழுதில் ஈசன் எனப்படுவர்.
✍🏻 பின்குறிப்பு – மன ஒடுக்கத்தின் இறுதியில் ஈசனாகலாம்.