மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
சிவாகமம் – (2248)
📖 கலப்புஅறி யார்கடல் சூழ்உல கேழும்
📖 உலப்புஅறி யார்உட லோடுஉயிர் தன்மை
📖 இங்குஅர சாளகி லாதார்
📖 குறிப்பது கோலம் அடலது வாமே.
🌻 கடலால் சூழப்பட்டுள்ள உலகம் ஏழும் கலந்திருப்பதை அறிபவர்கள் இல்லை.
🌻 உடலுடன் உயிர் இருக்கும் தன்மையின் உலப்பு அறிபவர்கள் இல்லை,
🌻 முடிவை இங்கே அரசை ஆள இயலாதவர்கள்
🌻 குறிப்பது அடக்கமற்ற கோலத்தையே.
✍🏻 பின்குறிப்பு – உண்மை அறியாதவர்களே ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.
சிவாகமம் – (2249)
📖 பின்னை அறியும் பெருந்தவத்து உண்மைசெய்
📖 தன்னை அறியில் தயாபரன் எம்இறை
📖 முன்னை அறிவு முடிகின்ற காலமும்
📖 என்னை அறியலுற்று இன்புற்ற வாறே.
🌻 பின்னாளில் அனுபவமாக அறியப்படும் சிறப்பு பெற்ற தவத்தின் உண்மை செய்யத்தூண்டி பெற்ற
🌻 தன்னை அறியச் செய்யும் தயாபரன் எம்மிறை.
🌻 முன்னே பெற்ற அறிவு முடிகின்ற காலமும்
🌻 என்னை அறிந்து இன்புற்றவாரே
✍🏻 பின்குறிப்பு – தவத்தினை செய்வதாலும் அறிவு முடிவுக்கு கொண்டுவருவதாலும் இறையை அறியலாம்.
சிவாகமம் – (2250)
📖 பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்
📖 பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம்
📖 தன்னை மறைத்தது தன்கர ணங்களாம்
📖 தன்னின் மறைந்தது தன்கர ணங்களே.
🌻 தங்கத்தை மறைத்தது தங்க அணிகலன்கள்,
🌻 தங்கத்தில் மறைந்தது தங்க அணிகலன்கள்.
🌻 தன்னை மறைத்தது தனது கரணங்களே,
🌻 தன்னில் மறைந்தது தன் கரணங்களே.
✍🏻 பின்குறிப்பு – வினைகளால் நாம் மறைந்து இருக்கிறோம், வினைகள் நம்மை மறைத்து விடுகிறது.
சிவாகமம் – (2251)
📖 மரத்தை மறைத்தது மாமத யானை
📖 மரத்தின் மறைந்தது மாமத யானை
📖 பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
📖 பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே.
🌻 மரத்தை மறைத்தபடி இருந்தது பெரிய மதயானை,
🌻 மரத்தால் மறைக்கப்பட்டது பெரிய மதயானை,
🌻 பரமாகிய இறையை மறைத்தது படைக்கப்பட்ட பூதம்.
🌻 பரத்தில் மறைந்தது படைக்கப்பட்ட பூதம்.
✍🏻 பின்குறிப்பு – மறைப்பதை அறிந்தால் உண்மை விளங்கும்.
சிவாகமம் – (2252)
📖 ஆறாறு ஆகன்று நமவிட்டு அறிவாகி
📖 வேறான தானே யகாரமாய் மிக்கோங்கி
📖 ஈறார் பரையின் இருளற்ற தற்பரன்
📖 பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே.
🌻 தத்துவங்கள் முப்பத்து ஆறும் நம்மை விட்டு அகன்று அறிவால்
🌻 வேறுபடுத்தி தான் என்ற யகாரமாய் மிக ஓங்கி
🌻 கீழானவர்கள் சொல்லும் இருமை பண்பற்ற தற்பரன்
🌻 தகுதியானவற்கே சிவாய என அடங்கும் அதன்பின் முக்தி வாய்க்கும்.
✍🏻 பின்குறிப்பு – தத்துவம் கடந்த ஒருமை அடைந்த பின்பே முக்தி வாய்க்கும்.
சிவாகமம் – (2253)
📖 துரியத்தில் ஓரைந்தும் சொல்அக ராதி
📖 விரியப் பரையில் மிகும்நாதம் அந்தம்
📖 புரியப் பரையில் பராவத்தா போதம்
📖 திரிய பரமம் துரியம் தெரியவே.
🌻 துரியத்தில் ஓர் ஐந்தும் சொற்களின் பொருளும்
🌻 விரிய, பரையில் மிகுந்திடும் நாதம் அந்தமாக
🌻 புரிய, பரையில் பராவத்தை போதம்
🌻 திரிய, பரமம் துரியம் தெரியவே.
✍🏻 பின்குறிப்பு – துரிய அனுபவம் அவத்தைகளை அழித்துவிடும்.
சிவாகமம் – (2254)
📖 ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்றுப்
📖 பந்திடும் சுத்த அவத்தைப் பதைப்பினில்
📖 நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம்
📖 அந்தி இருள்போலும் ஐம்மலம் மாறுமே.
🌻 ஐந்தும் சகலத்தின் அருளால் புரியாமல்
🌻 குவிந்திடும் சுத்த அவத்தை பதைப்பினில்,
🌻 நந்தி பராவத்தை நாடிட சுடர்முனம்
🌻 அந்தி இருள் போலும் ஐம்மலம் மாறுமே.
✍🏻 பின்குறிப்பு – அதிகாலை இருள் போல் – அகலும் நந்தி என்ற குரு அருள் பெற்றால்.
சிவாகமம் – (2255)
📖 ஐஐந்து மட்டுப் பகுதியும் மாயையும்
📖 பொய்கண்ட மாமாயை தானும் புருடன்கண்டு
📖 எய்யும் படியாய் எவற்றுமாய் அன்றாகி
📖 உய்யும் பராவத்தை உள்ளுதல் சுத்தமே.
🌻 இருபத்து ஐந்து கீழ்மையானதும் மாயையும்
🌻 பொய்யாக கண்ட மாமாயை தானும் புருடன் கண்டு
🌻 மயக்கும் படியாய் உள்ள யாவையும் இல்லை என்றாக்கி
🌻 உய்யும் பராவத்தை எண்ணுதலே சுத்தமாகும்.
✍🏻 பின்குறிப்பு- தத்துவங்கள் மற்றும் மாயையால் உண்டான பலவற்றை கடந்து எண்ணுதலே சுத்தமாக்கும்.
சிவாகமம் – (2256)
📖 நி ன்றான் அருளும் பரமும்முன் நேயமும்
📖 ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும்
📖 சென்றான் எனைவிடுத்து ஆங்கிச் செல்லாமையும்
📖 நன்றான ஞானத்தின் நாதப் பிரானே.
🌻 மனதை ஒருநிலைப்பற்றி நின்றவன் அருளும் பரமும் நேயமும்
🌻 ஒன்றே என மாறும் உருவும் துணையாவதும்
🌻 என்னை விலகியவனை நோக்கி தானும் விலகாத நிலையும்
🌻 நன்றான ஞானத்தின் நாதப்பிரானே.
✍🏻 பின்குறிப்பு – அறியாமையின் பின் செல்லாதவர் நாதப்பிரானாகிறார்.