மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
சிவாகமம் – (2225)
📖 தன்னை அறியாது உடலைமுன் தான்என்றான்
📖 தன்னைமுன் கண்டான் துரியம் தனைக்கண்டான்
📖 உன்னும் துரியமும் ஈசனோடு ஒன்றாக்கால்
📖 பின்னையும் வந்து பிறந்திடும் தானே.
🌻 தன்னை அறியாத நிலையில் உடலை தான் என்றவர்
🌻 தன்னை முன்னே அறிந்தபின் துரியம் தனைக்கண்டார்.
🌻 அறிந்த துரியம் ஈசனோடு ஒன்றவில்லை என்றால்
🌻 மீண்டும் வந்து பிறந்திடுவாரே.
✍🏻 பின்குறிப்பு – உடல் கடந்த உண்மை புரிந்தாலும் இறையுணர்வில் ஒன்றாதவர் மீண்டும் பிறப்பார்கள்.
சிவாகமம் – (2226)
📖 சாக்கிரத் தன்னில் அதீதம் தலைப்படில்
📖 ஆக்கிய அந்த வயிந்தவம் ஆனந்தம்
📖 நோக்கும் பிறப்புஅறும் நோன்முத்தி சித்தியாம்
📖 வாக்கும் மனமும் மருவல்செய் யாவே.
🌻விழிப்புணர்வில் அதீதம் தலைப்பட்டால்
🌻செய்யப்பட்ட அந்த வயித்தவத்தில் ஆனந்தம் உண்டாகும்.
🌻 நோக்கமும் பிறப்பும் அற்றுப் போகும் முக்தியும் உண்டாகும்.
🌻 வாக்கும் மனமும் மாறுபாடு இல்லாது இருக்கும்.
✍🏻 பின்குறிப்பு – விழிப்புணர்வில் தீவிரம் முக்தியை அருளும்.