மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
சிவாகமம் – (2242)
📖 அணுவின் துரியத்தில் ஆன நனவும்
📖 அணுஅசை வின்கண் ஆனகனவும்
📖 அணுஅசை வில்பரா தீதம் சுழுத்தி
📖 பணியில் பரதுரி யம்பர மாமே.
🌻 அணு அளவே ஆன துரியத்தில் ஆகும் நனவும்
🌻 அணு அளவே அசைவினால் ஆன கனவும்
🌻 அணு அளவே அசைவில் பராதீதம் சுழுத்தி
🌻 பணியில் பர துரியம் பரமாமே .
✍️ பின்குறிப்பு – எண்ணமும் செயலும் இணைந்திருக்க பரமாகும்.
சிவாகமம் – (2243)
📖 பரதுரி யத்து நனவும் பரந்து
📖 விரிசகம் உண்ட கனவும்மெய்ச் சாந்தி
📖 உருவுறு கின்ற சுழுத்தியும் ஓவத்
📖 தெரியும் சிவதுரி யத்தனு மாமே.
🌻 பரமாகும் துரியத்தில் நனவும் பரந்து
🌻 அகண்ட உலகம் அடையும் கனவும் மெய்யும் அமைதி அடையும்.
🌻 வடிவம் பெறும் சுழுத்தியும் கழிய
🌻 தெரியும் சிவதுரியம் தானாகவே.
✍🏻 பின்குறிப்பு – எண்ணங்கள் அழித்தவரே சிவத்தை உணர்வார்.
சிவாகமம் – (2244)
📖 பரமா நனவின்பின் பால்சக முண்ட
📖 திராமார் கனவும் சிறந்த சுழுத்தி
📖 உரமாம் உபசாந்தம் உற்றல் துறவே
📖 தரனாம் சிவதுரி யத்தனும் ஆமே.
🌻 பரத்தின் நனவால் பால்சகம் உண்டாக
🌻 திரமான கனவும் சுழுத்தியும்
🌻 உரமாக துணைஅமைதி அடைவதே துறவு.
🌻 இத்தரமானவரே சிவதுரியத்தான்.
✍🏻 பின்குறிப்பு – நடப்பதையே கனவாக காண்பவர் தரமான சிவதுரியத்தார்.