மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
இந்தியாவில் இருக்கும் அதிகப்படியான பிரச்சனைகள்
கனடாவில் குறைவாக இருப்பதால்
இந்தியா ஏழை நாடாகவும், கனடா பணக்கார நாடாகவும் இருக்கிறது.
🌹 மனிதன் தான் நிலப்பரப்பை தனித்தனி நாடாக பிரித்து வைத்திருக்கிறான்.
🌹 பிரிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்களின் மனநிலை கலாச்சார ரீதியாக வேறுபட்டு இருக்கிறது.
இப்போது,
🌹 ஏன் கனடா பணக்கார நாடாகவும், இந்தியா ஏழை நாடாகவும் இருக்கிறது ? என்றால்,
🌹 இந்தியாவில் வாழும் அதிகப்படியான மக்கள் வசதியாக இல்லாததாலும்,
🌹 நல்ல வீடு இல்லாததாலும்,
🌹 சுகாதாரமான உணவு இல்லாததாலும்,
🌹 நாட்டின் பராமரிப்புகள் சரியில்லாததாலும்,
🌹 அரசு ஆட்சியாளர்கள் சரியில்லாததாலும்,
🌹 அதிகப்படியான மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பதாலும்,
🌹 தின உணவிற்காக அலையும் மக்களின் கூட்டம் அதிகமாக இருப்பதாலும்,
🌹 இயற்கை வளங்கள் அதிகமாக இருந்தும், அதை எல்லா மனிதனும் அனுபவித்துக் கொள்ள முடியாதபடி,
🌹 மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வுடன் அதிகமாக இருப்பதாலும்,
🌹 ஜாதிய பிரிவினை அதிகமாக இருப்பததாலும்,
🌹 மத இன வேறுபாடு அதிகமாக இருப்பதாலும்,
🌹 இதனால் பெரும்பாலான மனிதர்கள் கொண்டாட்டமாகவும் மகிழ்ச்சியாகவும் இல்லாமல் இருப்பதாலும்,
🌹 இந்தியா ஏழை நாடாக இருக்கிறது.
ஏன் ? கனடா பணக்கார நாடாக இருக்கிறது. என்றால்,
🌹 கனடாவில் வாழும் அதிகப்படியான மக்கள் வசதியாக இருப்பதாலும்,
🌹 நல்ல வீட்டில் வாழ்வதாலும்,
🌹 போதுமான உணவு கிடைப்பதாலும்,
🌹 நாட்டின் பராமரிப்புகள் சிறப்பாக இருப்பதாலும்,
🌹 அரசு ஆட்சியாளர்கள் சிறப்பாக இருப்பதாலும்,
🌹 குறைவான மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பதாலும்,
🌹 தின உணவிற்காக அலையும் மக்களின் கூட்டம் குறைவாக இருப்பதாலும்,
🌹 மனிதனை ஏற்றத்தாழ்வுடன் பார்க்காமல்,
🌹 மனிதனை மனிதனாக பார்க்கும் மக்கள் இருப்பததாலும்,
🌹 இதனால் பெரும்பாலான மனிதர்கள் கொண்டாட்டமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாலும்
🌹 கனடா ஒரு பணக்கார நாடாக இருக்கிறது.