மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
உண்மை புரிந்து கொண்டால் பொய் சொல்லலாம்.
கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஏமாற்றுதல் என்பதும் கிடையாது.
பொய் சொல்லுதல் :
🌹 நம்முடைய இருப்பே மெய்யை (உடலை) மறைத்து வாழும் பொய்யாக (ஆடையாக) இருக்கிறது.
🌹 ஆடையில்லாமல் வாழும் மனிதனை எப்படி இந்த சமூகம் ஒத்துக்கொள்ளாதோ,
🌹 அப்படி உண்மை பேசும் மனிதனையும் ஒத்துக்கொள்ளாது.
🌹 ஏனென்றால் சமூகம் நடிக்க கற்றுக் கொடுத்திருக்கிறது.
🌹 கற்றுக் கொண்டதைப் போல் நடிக்கும் மனிதர்களை மட்டும் தான் சமூகம் ஒத்துக் கொள்ளும்.
🌹 அதனால்தான் ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்த்து ரசித்தாலும் ரசிக்காதது போல நடித்துக் கொள்வான்.
🌹 அப்படி மத ரீதியாக பார்க்கும் போது
சிலர் பொட்டு வைத்து நடிப்பார்கள்.
சிலர் பட்டை அடித்து நடிப்பார்கள்.
சிலர் நாமம் போட்டு நடிப்பார்கள்.
சிலர் பைபிள் வைத்து நடிப்பார்கள்.
சிலர் குரான் வைத்து நடிப்பார்கள்.
🌹 அதனால், நாம் எங்கிருக்கிறோமோ அந்த இடத்திற்கு ஏற்றபடி நடித்து தான் ஆக வேண்டும்.
🌹 எப்படி தேவையான இடத்தில் மட்டும் ஆடை இல்லாமல் இருக்கிறோமோ,
🌹 அப்படி தேவையான இடத்தில் மட்டும் தான் உண்மை பேச வேண்டும்.
🌹 மற்ற இடங்களில் பொய்தான் பேச வேண்டும்.
🌹 ஆனால் அந்த பொய்யை எல்லோரும் ஏற்கும் படி, ஒத்துக் கொள்ளும் படி சரியாக பேச வேண்டும்.
கண்டித்தல் :
🌹 அடித்து அல்லது வற்புறுத்தி எனக்கு ஏற்றபடி மாற்றுவதற்கு பெயர் கண்டித்தல்.
🌹 சிகரெட் பிடிக்கும் குழந்தையை கண்டித்தால் அது மாறிவிடாது.
🌹 ரகசியமாக செய்ய கற்றுக் கொள்ளும்.
🌹 சிகரெட் பிடிப்பதால், நுரையீரல் பாதிக்கும்.
🌹 உடல் நலம் குறைவு ஏற்படும் என்று எப்போது அந்த குழந்தைக்கு புரிகிறதோ,
🌹 அப்போதுதான் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விடும்.
🌹 புரியாத வரை செய்து கொண்டு தான் இருக்கும்.
🌹 அதனால் கண்டிப்பதால் ஒரு செயல் செய்வதை மாற்ற முடியாது.
🌹 அவரவர் புரிந்து கொண்டால் மட்டும்தான் மாற்றம் ஏற்படும்.
🌹 அப்படி கடவுளைப் பற்றிய உண்மை புரிந்து கொண்டால் தான் மதரீதியாக சடங்குகள் என்ற பெயரில் பொய்யாக நடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதே புரியவரும்.
ஏமாற்றுதல் :
🌹 என்னுடைய லாபத்தை நான் பிறரிடம் சொல்லி வியாபாரம் செய்தால்,
🌹 அதாவது, 8 ரூபாய்க்கு வாங்கிய பொருளை, 10 ரூபாய்க்கு விற்கிறேன்.
🌹 எனக்கு லாபம் 2 ரூபாய் என்று வெளிப்படையாக உண்மையை சொல்லி வியாபாரம் செய்தால்,
🌹 பெரும்பாலான மனிதர்கள் பேரம் பேசி 8 ரூபாய்க்கு வாங்க தான் விரும்புவார்கள்.
🌹 அதனால் மனிதர்களைப் பற்றிய உண்மை புரிந்து கொண்டு அந்த இடத்தில் பொய் சொல்வது ஏமாற்றுவது கிடையாது.
🌹 ஆன்மீக ரீதியாகவும் சரி பொருளாதார ரீதியாகவும் சரி மனிதர்களை பற்றிய உண்மை புரிந்து கொண்டு பொய் சொன்னால் அது ஏமாற்றுவது கிடையாது.