உயிர் ⬅️ மனம் ➡️ உடல்
🌻 மனம் தான் உயிரையும் சந்திக்கிறது.
🌻 மனம் தான் உடலையும் சந்திக்கிறது.
🌻 மனம் உயிரோடு நிரந்தரமாக பற்றி இருக்கிறது.
🌻 ஆனால் உடலோடு உறவாடிக் கொண்டிருக்கிறது.
🌻 உடல் உயிரால் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
🌻 ஆனால் மனம் உடலுக்கும் உயிருக்கும் ஒரு இணைப்பு பாலமாக இருந்து தனது விருப்பத்தில் உடலுடன் உறவாடிக் கொண்டிருக்கிறது.
🌻 அதாவது எப்படி ஒருவர் இயங்கிக் கொண்டிருக்கும் BIKE-ஐ தனது விருப்பத்திற்கு வேகமாகவும் மெதுவாகவும் ஓட்டி பயணிக்கிறாரோ,
🌻 அப்படி உயிரால் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உடலை, உயிருடன் நிரந்தர தொடர்புடைய நான் என்ற மனம், உடலை தனது விருப்பத்திற்கு கட்டுப்படுத்தி செயல்களை செய்து பயணித்துக் கொண்டிருக்கிறது.
🌻 மனம் தான் புலன்களால் பார்த்து கேட்டு நுகர்ந்து ருசித்து ஸ்பரிசித்து கொண்டிருக்கிறது.
🌻 மனம் தான் முன் பதியப்பட்ட பதிவுகளை கொண்டு பேசுகிறது.
மனமும் அதன் பெயர்களும்
🌻 பொதுவாக எந்த ஒரு மனிதனுக்கு பெயர் வைத்தாலும் அதை உயிருடன் சம்பந்தப்படுத்தி வைக்கும் ஒரு வழக்கம் முந்தைய காலங்களில் இருந்து இப்போது வரை நடைமுறையில் இருக்கிறது.
🌻 சிவா, ராமா, கிருஷ்ணா, முருகா, பெருமாள் என்று மனதிற்கு பல பெயர்கள் வைத்திருந்தாலும் அவை உயிரையே குறிக்கிறது.
🌻 ஏனென்றால் மனம் உயிரின் நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக பெயர்களில் உத்திகளை கையாண்டார்கள்,
🌻 சிவா என்று எழுப்பினால்,
🌻 தூங்கிக் கொண்டு உயிரின் நிலையிலிருந்த சிவா என்ற மனம் தான் விழிக்கிறது.
🌻 அதாவது இறைவனை எழுப்புகிறோம் என்ற புரிதலில் வைக்கப்பட்டது தான் பெயர்கள்.
மனமும் விதியும்
🌻 மனதில் தான் விதியும் வேலை செய்கிறது.
🌻 மனம் தான் பிறவி எடுக்கிறது.
🌻 மனம் பிறவி எடுத்து அதற்கான வேலைகளை அல்லது துன்பங்களை அனுபவிக்கிறது.
🌻 அதற்கு ஏற்றபடி தான் அது எண்ணங்களை எழுப்பும்.
🌻 அதற்கு ஏற்றபடி தான் சிந்திக்கும்.
🌻 அதாவது அது கடந்து வந்த பிறப்பில் பெற்ற புரிதலை கொண்டு சிந்தித்து செயல்களால் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
🌻 மனம் இறைவனை புரிந்து கொள்ளாத வரை பிறவி துன்பத்தில் சிக்கிக் கொண்டிருக்கும்.
🌻 மனதிற்கு இறைவனை புரிந்து கொண்ட ஒரு நல்ல குரு வழிகாட்டியாக கிடைத்தால் அந்த மனம் விதியை மதியால் வென்று இறைவனடி அடையும்.
🌻 அப்படி ஒரு நல்ல குரு வழிகாட்டியாக கிடைப்பதற்கு இறைவன் வழி காட்ட வேண்டும்.
🧘🏻♀️ நீங்கள் உங்கள் விதியை மதியால் வென்று இறைவனடி அடைய விரும்பினால் குருவினை நேரில் சந்திப்பது நல்லது. 🧘🏻
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : JULY 2025