மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம் மனிதர்கள்
எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
🌹 நான் சுவாசிக்கிறேன் என்பதே இன்பம் தான்.
🌹 எப்படி என்றால் என் மூச்சை நிறுத்த முயற்சிக்கும்போது அதை மீறி என் சுவாசம் நடைபெறும்.
🌹 அப்போது தான் புரியும் இதுவரை நான் சுவாசித்துக் கொண்டிருந்ததே இன்பம் என்று ..
அதனால்,
🌹 நான் உயிருடன் இருக்கிறேன் என்பதற்காகவே இன்பமாக இருக்க வேண்டும்.
🌹 அதன் நிமித்தம், என்னுடைய எல்லா செயல்களையும் இன்பமாகவே செய்ய வேண்டும்.
🌹 அப்படி இருந்தால் என் வாழ்நாள் முழுவதும் நான் இன்பத்திலேயே திளைத்திருப்பேன்.
🌹 நான் துன்பமாக இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
🌹 இந்த சமூகம் தான் துன்பப்படும்படியான சூழ்நிலையை எனக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறது.
🌹 ஜாதியையும், மதத்தையும், ஏழ்மையையும் கற்றுக் கொடுத்து என் முன்னேற்றத்தை நானே தடுத்து துன்பப்படும்படி செயல்பட வைத்திருக்கிறது.
🌹 துக்கப்பட்டால் வாழ்க்கையில் முன்னேற முடியாது.
🌹 பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும்.
🌹 துன்பம் என்பது நீ வாங்கிக் கொள்வது.
🌹 துன்பம் என்பது நீ ஒத்துக் கொள்வது.
🌹 துன்பம் என்பது நீ ஏற்றுக்கொள்வது.
அதை விட்டுவிட்டு,
🌹 நான் துன்பப்பட மாட்டேன்.
🌹 நான் மகிழ்ச்சியாகத்தான் இருப்பேன்.
🌹 நான் நன்றாகத்தான் இருப்பேன்.
🌹 நான் நன்றாக இருப்பதற்கான வழியை தேடுவேன்.
🌹 நான் இன்னும் வசதியாக மாறுவேன் என்று,
🌹 நான் தான் நினைத்து இன்பத்தை நோக்கி நகர (செயல்பட) வேண்டும்.
🌹 அப்படி செயல்படும் போது இன்பம் மட்டும்தான்.