👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 125 நெஞ்சொடு கிளத்தல் 📖 (Nenjodu kilathal)
📖 (குறள் – 1241) 📖
📖 நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
📖 எவ்வநோய் தீர்க்கும் மருந்து.
🌻 நினைத்துச் சரியான ஒன்றைச் சொல்வாயா என் நெஞ்சே எதன் பொருட்டும்
🌻 தீராத நோய் தீர்க்கும் மருந்து.
📖 (குறள் – 1242) 📖
📖 காதல் அவரிலர் ஆகநீ நோவது
📖 பேதைமை வாழியென் நெஞ்சு.
🌻 அவருக்கு காதல் இல்லாமல் இருந்தும் நீ நோவது
🌻 பேதமையாகும் இருப்பினும் வாழியே என் நெஞ்சே.
📖 (குறள் -1243) 📖
📖 இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
📖 பைதல்நோய் செய்தார்கண் இல்.
🌻 இங்கிருந்தபடியே எண்ணி கலங்கும் நெஞ்சே பரிவற்று
🌻 சிறுமை நோய் செய்தவருக்கு இது இல்லையே .
📖 (குறள் – 1244) 📖
📖 கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
📖 தின்னும் அவர்க்காணல் உற்று.
🌻 கண்ணையும் உடன் கொண்டு சேர் என் நெஞ்சே இவைகள் என்னை
🌻 தின்றுவிடும் அவரை காணமுடிய நிலைக் கண்டு.
📖 (குறள் – 1245) 📖
📖 செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
📖 உற்றால் உறாஅ தவர்.
🌻 பிரிந்து சென்றாலும் என்னை கைவிடல் உண்டோ நெஞ்சே
🌻 உறவுகொண்டு இன்று உறவு இல்லாதவர்.
📖 (குறள் – 1246) 📖
📖 கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
📖 பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.
🌻 கலந்து இன்பம் உணர்ந்தும் காதலரைக் கண்டால் கூடி உணராமல்
🌻 பொய்யாக தாகம் கொண்டு தாகம் அடைகிறாய் என் நெஞ்சே.
📖 (குறள் – 1247) 📖
📖 காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
📖 யானோ பொறேன்இவ் விரண்டு.
🌻 காமம் விடப்படும் ஒன்றா ? நாணத்தை விடு நல்ல என் நெஞ்சே
🌻 ஏன் பெற்றேன் இந்த இரண்டும்.
📖 (குறள் – 1248) 📖
📖 பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
📖 பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.
🌻 பரிவுடன் இணைந்து இருக்காதவர் என்றாலும் ஏங்கிப் பிரிந்தவர்
🌻 பின் செல்கின்றாயே பேதை என் நெஞ்சே.
📖 (குறள் – 1249) 📖
📖 உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
📖 யாருழைச் சேறியென் நெஞ்சு.
🌻 உள்ளத்தில் உள்ளவர் காதலர் அவரை எண்ணி
🌻 யாருக்காய் பேய் போல் அலைகிறாய் நெஞ்சே.
📖 (குறள் – 1250) 📖
📖 துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
📖 இன்னும் இழத்தும் கவின்.
🌻வறுத்தம்படி பிரிந்தவரை நெஞ்சத்தில் வைத்திருக்கலாமோ
🌻 இன்னும் இழுக்கச் செய்யும் அழகை.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(125 – நெஞ்சொடு கிளத்தல்) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 யோசனை செய்து சொல் என் நெஞ்சே.
🌻 காம நோய் தீர்க்கும் மருந்து எது?.
🌻 காதலிக்காத அவரை மறக்காமல் இருக்கும் என் நெஞ்சே நீ வாழ்க.
🌻 அவரை நினைத்தபடி இருக்கும் உனக்கு அவர் மறந்தபடி இருப்பது தெரிந்தும் சிறுமைபட்டு இருக்கிறாயே.
🌻 இறையாகிய காதலரை காண இயலவில்லை என்றால் என் கண்களை கொன்றுவிடு என் நெஞ்சே.
🌻 உறவுகொண்டவர் உறவு இல்லாது போனலும் கைவிடாமல் உறவு கொள்கிறாய் என் நெஞ்சே.
🌻 தாகத்தை மறைத்து இன்பத்தை தவிர்க்கிறாய் என் நெஞ்சே.
🌻 காமத்தை விட முடியுமா நாணத்தை விடு என் நெஞ்சே.
🌻 பரிவற்று பிரிந்தவர் பின் செல்கிறாயே என் நெஞ்சே.
🌻 உள்ளே இருக்கும் அவரை பேய் போல் பிடிக்க பார்க்கிறாயே நெஞ்சே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈