👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 002 வான் சிறப்பு 📖 (Vaan Sirappu)
📖 (குறள் – 0011) 📖
📖 வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
📖 தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
🌻 வெட்டவெளிருந்து பூமி தோன்றியதால்,
🌻 அதுவும் அழிவில்லாதது என்று உணரப்படும்.
📖 (குறள் – 0012) 📖
📖 துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
📖 துப்பாய தூஉம் மழை.
🌻 துப்பாதவருக்கு துப்பும் பொருளையும் உருவாக்கி,
🌻 துப்போவது போல் துவுவதே மழை.
📖 (குறள் – 0013) 📖
📖 விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
📖 உள்நின்று உடற்றும் பசி.
🌻 நீரால் நிறைந்த இந்த உலகத்தில் விண்ணிலிருந்து வரும் நீர் பொய்த்தால்,
🌻 உள்ளிருந்து வாட்டும் பசி.
📖 (குறள் – 0014) 📖
📖 ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
📖 வாரி வளங்குன்றிக் கால்.
🌻 புயல் என்று அழிக்கும் வெள்ளபெருக்கு தனது தன்மையை இழந்தால்,
🌻 உழவர்கள் உழுவதை நிறுத்துவார்கள்.
📖 (குறள் – 0015) 📖
📖 கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
📖 எடுப்பதூஉம் எல்லாம் மழை.
🌻 அழிப்பதுவும் அழிந்தவர்களை வளம் செய்வதுவும்,
🌻 என எல்லாம் செய்வதே மழை.
📖 (குறள் – 0016) 📖
📖 விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
📖 பசும்புல் தலைகாண்பு அரிது.
🌻 சிறு துளியாக மழை இல்லாமல் போனால்,
🌻 புல்லும் முளைக்காமல் போகும்.
📖 (குறள் – 0017) 📖
📖 நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
📖 தான்நல்கா தாகி விடின்.
🌻 பெரிய கடலும் தனது நீர்மையை இழக்கும், மேகமாக
🌻 தனது நீரை தரவில்லை என்றால்.
📖 (குறள் – 0018) 📖
📖 சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
📖 வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
🌻 சிறப்பான பூசனைகள் செல்லாது ,
🌻 வரியார்க்கும் வானோர்க்கும் வானம் வழங்கவில்லை என்றால்.
📖 (குறள் – 0019) 📖
📖 தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
📖 வானம் வழங்கா தெனின்.
🌻 அற்புத உலகத்தில் தானம் தவம் இரண்டும் இருக்காது,
🌻 வானம் வழங்கவில்லை எனில்.
📖 (குறள் – 0020) 📖
📖 நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
📖 வான்இன்று அமையாது ஒழுக்கு.
🌻 நீர் இல்லை என்றால் உலகம் இல்லை. யாருக்கும்,
🌻 வான் இல்லையேல் ஒழுக்கம் இல்லை.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(002 – வான் சிறப்பு) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 வெட்டவெளியில் இருந்தே உலகம் தேன்றியது.
🌻 அங்கிருந்தே மழை வருவதால் அதை அமிழ்தம் என்கிறோம்.
🌻 அது பூமியை மதித்து துப்பாதவர்களுக்கு துப்புகிறது.
🌻 உள்ளிருக்கும் பசிக்கு உணவாகவும்,
🌻 உழவர்களுக்கு உற்ற துணையாகவும் சமயத்தில் புயலாகவும் இருக்கிறது.
🌻 மழைத்துளி இல்லை என்றால் புல்லும் முளைக்காது.
🌻 தானம், தவம், பக்தியால் செய்யும் பூசை அனைத்திற்கும் ஆதாரம் மழை.
🌻 நீர் இல்லை என்றால் உயிர்களால் ஆன பூமி (உலகம்) இல்லை,
🌻 வெட்டவெளி இல்லை என்றால் உயிர்களுக்கு ஒழுக்கம் இல்லை.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : April 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈