👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 004 அறன் வலியுறுத்தல் 📖 (Aran Valiyuruthal)
📖 (குறள் – 0031) 📖
📖 சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
📖 ஆக்கம் எவனோ உயிர்க்கு.
🌻 சிறப்பு வரும் செல்வமும் வரும்,
🌻 அறமுடன் ஆர்வமாய் செயல்படுபவன் உயிர்க்கு.
📖 (குறள் – 0032) 📖
📖 அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
📖 மறத்தலின் ஊங்கில்லை கேடு.
🌻 அறமுடன் உயர்வு போல் செயல் இல்லை,
🌻 இதனை மறுத்தால் உயர்வு இல்லை கேடுதான்.
📖 (குறள் – 0033) 📖
📖 ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
📖 செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
🌻 ஏற்கும் வகையில் இருப்பதே அறச் செயல்,
🌻 ஏற்க முடியாதது எப்படியாவது எல்லாவற்றையும் செய்வது.
📖 (குறள் – 0034) 📖
📖 மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
📖 ஆகுல நீர பிற.
🌻 மனதளவிலேயே மாசு இல்லாமல் இருத்தலே,
🌻 அனைத்திற்கும் அறம் மற்றவை நீர்த்துவேடும்.
📖 (குறள் – 0035) 📖
📖 அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
📖 இழுக்கா இயன்றது அறம்.
🌻 அழிக்கும் குணம்,அளவற்ற ஆசை,கடுங் கோபம்,வன்மையான வார்த்தை
🌻 இவை நான்கும் இல்லாமல் இருப்பதே அறம்.
📖 (குறள் – 0036) 📖
📖 அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
📖 பொன்றுங்கால் பொன்றாத் துணை.
🌻 பிறகு பார்போம் என்று இல்லாமல் அறம் செய்யவேண்டும்,
🌻 இல்லையேல் வாழ்த்தும் பொழுது வாழ்த்தாத துணை போல் ஆகிவிடும்.
📖 (குறள் – 0037) 📖
📖 அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
📖 பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
🌻 அறம் இதுவென என்னதே ,
🌻 பல்லக்கில் அமர்தவனுடன் சுமப்பவனை சேர்த்து.
📖 (குறள் – 0038) 📖
📖 வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
📖 வாழ்நாள் வழியடைக்கும் கல்.
🌻 வாய்த்த நாள் வீணாகாமல் நல்லது செய்தால்,
🌻 அது ஒருவருக்கு வாழ்நாள் வழியை மூடும் கல்.
📖 (குறள் – 0039) 📖
📖 அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
📖 புறத்த புகழும் இல.
🌻 அறச் செயல்களால் வருவதுவே இன்பம்,
🌻 மற்றவை வெளியே கூட மதிக்கப்படுவது இல்லை.
📖 (குறள் – 0040) 📖
📖 செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
📖 உயற்பால தோரும் பழி.
🌻 பலசெயல்களை அறத்துடன் செய்யும் ஒருவருக்கு,
🌻 பழியும் பல உயர்வை தரும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(004 – அறன் வலியுறுத்தல்) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 மனதால் நேர்மையடன் இருப்பதே அறம்,
🌻 அப்படி அறமுடன் இருப்பவர்க்கு செல்வமும், சிறப்பும் வளரும்,
🌻 மறுப்பவர் வாழ்வில் விழ்ச்சி உறுதி.
🌻 அழிக்கும் குணம்,அளவற்ற ஆசை,கடுங் கோபம்,வன்மையான வார்த்தை இவை நான்கும் இல்லாமல் இருப்பதே அறம்.
🌻 அடுத்தவர் மதிக்கப்பட வேண்டும் என்று அறத்தை செய்யாமல் தனக்காக செய்யவேண்டும்.
🌻 அடிமையாக இருப்பது அறமாகாது.
🌻 அறமே இன்பத்தை தரும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : April 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈