🛞 சக்கரம் 🛞
🌻 பொதுவாக 🛞 சக்கரம் 🛞 என்றாலே 🚴♂️ பயணம் செய்வதற்கான வண்டி தான் நினைவுக்கு வரும்.
🌻 🛞 சக்கரம் 🛞 என்றால் வட்ட வடிவமானது.
🌻 அதாவது, ஒரு 🌍 🪚 கோலிகுண்டை பாதியாக வெட்டி எடுத்தால் , 🔵வெட்டப்பட்ட பகுதிக்கு பெயர் 🛞 சக்கரம் 🛞.
🌻 ஆதி மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் ⚽ பந்து போல் உருண்டு வந்த ஒரு கல் தான் சக்கரத்தை உருவாக்கி பயணிக்கலாம் என்ற சிந்தனையை தந்தது.
🌻 சக்கரம் பயணம் செய்வதற்கு ஆதாரமாக உள்ளது.
🌻 ஆனால் இப்போது, மனித உடலில் ஏழு சக்கரங்கள் இருப்பதாக நிறைய 🧘🏻 யோகிகள் சொல்கிறார்கள்.
🌻 யோகிகள் சொல்லும் சக்கரத்திற்கும், பயணம் செய்ய உதவும் சக்கரத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்றால்,
🌻 எப்படி ஒரு வண்டி இயங்குவதற்கு சக்கரங்கள் ஆதாரமாக இருக்கிறதோ,
🌻 அப்படி உடலில் உயிர் இயங்கி உறுப்புகளை செயல்பட வைப்பதற்கு ஆதாரமாக சக்கரங்கள் இருக்கிறது.
🌻 நிறைய யோகிகள் உடலில் இந்த சக்கரங்களை அனுபவித்து ஏழு சக்கரங்கள் இருப்பதாக சொல்லி வைத்திருக்கிறார்கள்.
🌻 எண்ண முடிந்த சக்கரங்கள் ஏழு தான் என்றாலும் கூட எண்ணப்பட முடியாத அளவுக்கு உடலில் சக்கரங்கள் (ஆதாரங்கள்) இருக்கிறது.
🌻 அதாவது, உடல் முழுவதும் ஒரு பொருள்(அணு) சுற்றிக்கொண்டே இருக்கிறது.
🌻 அது இந்த இடத்தில் தான் மையப்பட்டு இருக்கிறது என்று சொல்ல முடியாது.
🌻 பல அணுக்களின் கூட்டாக இந்த உடலாக இருக்கிறது.
🌻 ஒரு நாள் இந்த அணுக்களின் கூட்டு பிரிந்து விடவும் போகிறது.
🌻 இந்தக் கோணத்தில் பார்த்தால் ஒவ்வொரு அணுக்களும் ஒவ்வொரு சக்கரம் தான்.
🌻 ஆனால் இந்த அணுக்களின் கூட்டுகளை மையப்படுத்தி ஏழு சக்கரங்கள் ஆதாரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
🌻 இதைத்தான் தன்னை ஆராய்ந்து தனக்குள் இருக்கும் விசேஷங்களை உணர்ந்த ஞானிகள் அனுபவிக்கிறார்கள்.
🌻 அப்படி அனுபவித்தவர்கள் தான் உடலில் உயிர் இயங்கும் இந்த ஆதாரத்திற்கு சக்கரங்கள் என்றும் கடல் என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள்.
🌻 ஏன் அவர்கள் சக்கரங்களை கடல் என்று சொல்கிறார்கள் என்றால்,
🌻 ஒவ்வொரு சக்கரத்திலும் அல்லது ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு விதமான செயல்பாடுகளுக்கான உணர்வுகள் வற்றாத கடல் போல் ஊறிக்கொண்டே உள்ளது.
🌻 அதனால் தான் அதனை கடல் என்று சொல்கிறார்கள்.
🌻 யோகிகள் இந்த ஏழு சக்கரத்திற்கும் ஒவ்வொரு பெயர் வைத்திருக்கிறார்கள்.
1️⃣ மூலாதாரம்
2️⃣ சுவாதிஷ்டானம்
3️⃣ மணிபூரகம்
4️⃣ அனாகதம்
5️⃣ விசுத்தி
6️⃣ ஆக்கினை
7️⃣ துரியம்
1️⃣ மூலாதாரம் 1️⃣
🌻 ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள அனைத்து ஜீவன்களுக்கும் தன்னை போன்று ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற வேட்கை இயற்கையாகவே இருக்கிறது.
🌻 அப்படி ஒரு மனிதன் இன்னொரு மனிதனை உருவாக்குவதற்கு ஆதாரமாக மூலமாக இந்த சக்கரம் இருப்பதால் இதற்கு மூலாதாரம் என்று பெயர்.
🌻 Sex Based Thinking மூளையில் செயல்பட்டாலும்,கண்களால் காமுற்றாலும் அது செயல்படக்கூடிய இடம் மூலாதாரம்.
🌻 மூலாதாரம் மலம் வெளியேறும் இடத்திற்கும் சிறுநீர் வெளியேறும் இடத்திற்கும் இடையில் இருந்து இவைகளை செயல்பட வைத்துக் கொண்டிருக்கிறது.
🌻 மூலாதார சக்கரத்தினால் தான் பிறப்புறுப்புக்கள் மற்றும் கழிவு வெளியேற்ற உறுப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
🌻 அதாவது (மலம், மூத்திரம், விந்து) போன்ற கழிவுகளை வெளியேற்றும் வேலையை மூலாதாரம் செய்கிறது.
🌻 ஒரு கழிவு வெளியேற்றம் (விந்து) ஜீவன்கள் உருவாவதற்கு ஆதாரமாகவும்,
🌻 மற்ற கழிவு வெளியேற்றம் உடல் ஆரோக்கியத்திற்கு ஆதாரமாகவும் இருப்பதால்,
🌻 சிந்தித்து அந்த இடத்திற்கு மூலாதாரம் என்ற என்ற பெயரை நம் முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள்.
🌻 ஒரு நல்ல குருவை சந்தித்து உண்மை புரிந்து கொண்டவர்களுக்கு மூலாதாரம் என்றால் மேல் நோக்கிய சிந்தனையை கொடுக்கிறது.
🌻 அந்த மூலாதாரத்தால் மனதில் உள்ள கழிவுகளை (ஆணவம், கர்மம், மாயை) வெளியேற்றி ஞானத்தை பெற்றெடுக்கலாம் என்ற புரிதலையும் கொடுக்கிறது.
🧘🏻♀️ மூலாதாரத்தை குருவின் உதவியால் சந்தித்தறிந்து மனதில் உள்ள ஆணவம் கர்மம் மாயை போன்ற மனக்கழிவுகளை நீக்கி குழந்தையாக ஞானத்தை பெற்றெடுக்கலாம். 🧘🏻
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : JULY 2025