மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
🌹 ஆம், ஏனென்றால் வாழ்க்கை பொய்யானது.
🌹 நான் பொய்யாக தான் வாழ்ந்தாக வேண்டும்.
🌹 நான் அணிந்திருக்கும் உடையே பொய்தான்.
🌹 நாம் அனைவரும் ஒரு நடிகர்கள்.
🌹 நாம் நடிக்கத்தான் வந்திருக்கிறோம்.
🌹 நான் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை புரிந்து கொண்டாலே,
🌹 நான் என்னிடம் நடிக்காமல் உண்மையாக இருக்கிறேன் என்பது புரிந்துவிடும்.
🌹 எதிராளியிடம் எனக்கு தேவை இருக்கும் பட்சத்தில் எதிராளியின் எதிர்பார்ப்பை பொருத்து நான் நடித்தாக வேண்டும்.
🌹 நான் அவரின் பெயர் சொல்லி அழைப்பது அவருக்கு பிடிக்கவில்லை என்றால்,
🌹 அவர் விரும்பும் பெயரில் அல்லது உறவில் அவருடன் உறவாட வேண்டும்.
🌹 ஒரு பச்சோந்தியை விட அதிகபட்சமாக மனிதனால் நடிக்க முடியும்.
🌹 மனிதனுக்கு நிறைய அறிவு இருப்பதால் அவனால்
ஒரு நரியை போல்,
ஒரு நாயைப் போல்,
ஒரு பூனையைப் போல்,
ஒரு யானையைப் போல்,
ஒரு சிங்கத்தைப் போல் வாழ முடியும்.
🌹 எல்லா விலங்குகளின் தொகுப்பாகத்தான் நான் இருக்கிறேன்.
🌹 நான் கருவறையில் இருந்து வந்திருந்தாலும்,
🌹 என்னால் எல்லாவற்றையும் போல வாழ முடியும், நடிக்க முடியும்.
🌹 யாரைப் போலவும் ஆடைகளால் என்னை அலங்கரித்துக் கொள்ள முடியும்.
🌹 மனிதனுக்குத் தான் பலவிதமான குணங்கள் இருக்கிறது.
அதனால் தான் வள்ளுவன்
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
என்று எழுதியிருக்கிறார்.
🌹 குணத்தில் நற்குணம் தீய குணம் என்று கிடையாது.
🌹 என் குணத்தை எதிராளி ஒத்துக் கொண்டால் அது அவருக்கு நற்குணம்.
🌹 ஒத்துக் கொள்ளவில்லை என்றால் அவருக்கு அது தீய குணம்.
🌹 அதனால் இடத்திற்கு ஏற்றார் போல் என் தோற்றத்தையும் மனிதர்களுக்கு ஏற்றாபோல் என் மனதையும் மாற்றி நடித்தாக வேண்டும்.
🌹 எந்த உறவுடனும்
என் தேவையின் பொருட்டு தான் உறவாட வேண்டும்.
என் தேவையின் பொருட்டு தான் உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டும்.
என் தேவைக்கு தான் வாழ வேண்டும்.
🌹 எந்த உறவுடனும்
என் தேவையின் பொருட்டு தான் கோபம் கொள்ள வேண்டும்.
என் தேவையின் பொருட்டு தான் அன்பு காட்ட வேண்டும்.
என் தேவையின் பொருட்டு தான் இரக்கம் காட்ட வேண்டும்.