மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
🌹 பெண்ணை சிறப்பாக்க சமூகம் முயற்சிக்கவில்லையா? அல்லது பெண்ணே முயற்சிக்கவில்லையா? என்றால்,
🌹 இரண்டு பக்கம் இருக்கிறது.
ஒரு பக்கம்,
🌹 சில பெண்கள் தன்னை அழகாக காட்டிக் கொள்ளும் விளம்பரப்பிரியர்கள் ஆகி விட்டார்கள்.
மற்றொரு பக்கம்,
🌹 சிறப்பாக வாழ்ந்த பெண்களைப் பற்றிய விளம்பரம் இல்லாமல் போய்விட்டது.
🌹 பெண் இயல்பிலேயே அழகானவளாக இருந்தாலும்,
🌹 அதை புரிந்து கொள்ளாமல் விளம்பரப் பிரியராக சமூகத்திற்கு தன்னை அழகாக காட்டிக் கொள்ள முற்படுகிறாள்.
🌹 அதற்கு சமூகம் எதிர்பார்க்கும் நடை உடை பாவனைகளை எல்லாம் மாற்றி பிறருக்கு நிரூபிக்கும் முயற்சியில் தன்னை இழக்கிறாள்.
🌹 அதனால், கடவுள் பக்கம் திரும்பி கடவுளை புரிந்து கொண்டு கடவுளைப் பற்றி பேசும் சிறப்பான பெண்கள் குறைந்து விட்டார்கள்.
🌹 பெண்கள் சமூகத்தில் நிறைய துறைகளில் சாதித்து சிறப்பானவர்களாக இருந்தாலும்,
🌹 அவர்களால் ஆன்மீகத்திலும் சாதிக்க முடியும்.
🌹 என்னிடத்தில் நிறைய பெண்கள் ஆன்மீகவாதிகளாக மாறி இருக்கிறார்கள்.
🌹 தியானம் கற்று இருக்கிறார்கள்.
🌹 ஆன்மீகத்தை சமூகம் தவறாக விளம்பரப்படுத்தி இருப்பதால் அந்தப் பக்கம் பெண்களுக்கு தடையாக இருக்கிறது.
🌹 தன்னை அறிந்து அல்லது தனக்கு ஆதாரமானதை அறிந்து,
🌹 தன்னை கொண்டாடி அல்லது தனக்கு ஆதாரமானதை கொண்டாடி,
🌹 சிறப்பாக வாழ்வதே ஆன்மீகம்.
🌹 அதாவது, பிறர் என்னை கொண்டாட வேண்டும் என்று நினைப்பதை விட,
🌹 நான் என்னை கொண்டாட வேண்டும்.
🌹 கடவுள் என்னை படைத்திருக்கிறது.
🌹 அதனால் நான் இங்கே வந்திருக்கிறேன்.
🌹 நான் சிறப்பான செயலை செய்து பிறருக்கும் உதவி அதனால் என் தேவையை தீர்த்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு,
🌹 தன்னைக் கொண்டாடும் எந்த பெண்ணும் சிறப்பானவர்கள் தான்.
🌹 தன்னைக் கொண்டாடும் எந்த பெண்ணும் ஆன்மீகவாதி தான்.
🌹 அதனால் பெண்ணை சிறப்பாக்க பெண் தான் முயற்சிக்க வேண்டுமே தவிர சமூகம் முயற்சிக்காது.