மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
🌹 என்னுடைய கடமை என்ன என்றால்,
🌹 நான் குழந்தையாக இருக்கும்போது எப்படி அம்மாவிடம் எடுத்துக் கொண்டேனோ,
🌹 அப்படி இந்த உலகத்திடம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
🌹 அதுதான் என்னுடைய கடமை
🌹 அதாவது எனக்கு பசி என்ற ஒரு தேவை இருந்ததால்,
🌹 அம்மா இருந்ததால்,
🌹 அம்மாவிடம் பாலை உறிந்து எடுத்துக் கொண்டதைப் போல,
🌹 எனக்கு வாழ வேண்டும் என்ற தேவை இருந்தால்,
🌹 அதற்குத் தேவையானதை இந்த உலகத்திடமிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
🌹 எப்படி குழந்தை பசி தீர்ந்தவுடன் பால் உறிஞ்சுவதை நிறுத்தி,
🌹 மீண்டும் பசி எடுக்கும் போது மட்டும் அழுது தாயிடம் பாலை உறிந்து எடுத்துக் கொள்கிறதோ,
🌹 அப்படி நான் என் தேவையின் மீது கவனமாக இருந்து,
🌹 தேவைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
🌹 எனக்கு என்ன தேவை என்பதை நான் என்னிடம் கேட்டு
🌹 அதை நிறைவேற்றுவதே எனது கடமை.
🌹 எனக்கு
கார் தேவையா ?
வீடு தேவையா ?
சௌகரியமாக இருப்பது தேவையா ?
🌹 என்பதில் கவனம் கொண்டு அதை எடுத்துக் கொள்வதற்கான திறமையை வளர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆனால் நான்
🌹 எனக்குத் தேவையில்லாததை கற்றுக் கொண்டிருக்கிறேன்.
🌹 எனக்குத் தேவையில்லாதவைகளை கற்பனை செய்கிறேன்.
🌹 எனக்குத் தேவையில்லாததும் இங்கே இருக்கிறது.
🌹 என்பதை புரிந்து கொண்டு என் தேவைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
🌹 என்னிடம் உங்களுடைய தேவை அல்லது கடமை என்னஎன்று கேட்டால்
உங்களை நீங்கள் தெரிந்து கொள்வது தான்
உங்களுடைய முதல் தேவை என்றும்,
உங்களுடைய முதல் கடமை என்றும் நான் சொல்வேன்.
🌹 எப்படி குழந்தை பசி அறிந்து அதை தீர்த்துக் கொள்ள காம்பை தேடுகிறதோ,
🌹 அப்படி நான் வளர்ந்து, நான் யார் என்னும் வேட்கையால் குருவை அல்லது இறைவனை தேடுவதுதான் இறைவன் சமூகத்தின் அடிப்படை அறிவு.
🌹 ஆனால் அந்த அறிவை மனித சமூகம் பிடுங்கிவிட்டது.
🌹 எனக்கு ஒரு மொழியை கற்றுக் கொடுத்து,
🌹 சமூக அடையாளங்களை நான் என்று நம்பும் படி வைத்துவிட்டது.
🌹 அதனால் தான் தன்னை அறிய எந்த மனமும் முற்படுதில்லை.
நான் யார் ?
நான் எங்கிருந்து வந்தேன் ?
நான் எங்கு செல்ல போகிறேன் ?
🌹 என்பதுதான் என்னுடைய முதல் தேவையாகவும், முதல் கடமையாகவும் இருக்கின்ற பட்சத்தில் இறைவனால் வழிகாட்டப்பட்ட குருவினால் தெளிந்து கொள்ளலாம். 🌹