மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
🌹 நம்பினால் உலகம் உனக்கு என்று சொல்வதுண்டு.
🌹 ஆனால், நம்பவில்லை என்றாலும் உலகம் உனக்குத்தான்.
🌹 ஒருவர் கடவுள் இருப்பதை நம்பவில்லை என்றாலும், அவரால் இந்த உலகத்தில் வாழ முடியும்.
🌹 அதாவது,
நான் வேலை செய்கிறேன்.
நான் சம்பாதிக்கிறேன்.
நான் சாப்பிடுகிறேன் என்று ஒருவர் நினைப்பதால்,
🌹 அதற்கும் கடவுளுக்கும் சம்பந்தமில்லை என்று கடவுளை நம்பாமல் ஒருவரால் வாழ முடியும்.
🌹 அதே சமயம், கடவுள் இருப்பதை நம்பி,
🌹 சதா சர்வ காலமும் தான் சார்ந்த மதக் கடவுளை வணங்கிக் கொண்டும், சடங்குகளை செய்து கொண்டும் இருப்பதால், ஒருவரால் வாழ்க்கையில் முன்னேறி விட முடியுமா ? என்றால் முடியாது.
எல்லா இந்துக்களும் பணக்காரர்களாக இருப்பதில்லை.
எல்லா கிறிஸ்தவர்களும் பணக்காரர்களாக இருப்பதில்லை.
எல்லா இஸ்லாமியர்களும் பணக்காரர்களாக இருப்பதில்லை.
சிலர் அடிமையாகவோ,
சிலர் ஜாதியில் மட்டமானவர்களாகவோ,
சிலர் ஏழையாகவோ இருப்பதுண்டு.
🌹 காரணம், யார் தனது வாழ்க்கையை கொண்டாட்டமாகவும், வசதியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்து முயற்சித்து உழைக்கிறாரோ ,
🌹 அவரே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார். அதனால் அவருக்கு கடவுள் நம்பிக்கை தேவைப்படாது.
🌹 இந்த உலகத்தில் யாருக்காவது கடவுள் தேவைப்படுமா ? என்றால்
🌹 தேவைப்படாது.
🌹 ஏனென்றால்,
யாரும் வாழ்க்கையை வாழ வில்லை.
நன்றாக சாப்பிடவில்லை.
நன்றாக தூங்கவில்லை.
தன் தேவையின் மீது அக்கறை இல்லை.
தனக்கு எது தேவை என்பதை தெரிந்து கொள்ளவில்லை.
🌹 கற்றுக்கொண்டதை தேவை என்று நம்பி அதை அடைய முயற்சி செய்கிறார்கள்.
🌹கற்றுக் கொண்ட படி ஒருவரை நல்லவர், கெட்டவர், வசதியானவர், ஏழை ,அறிவாளி முட்டாள் என்று நம்புகிறார்கள்.
🌹 ஆனால் நம்பிக்கை உண்மை கிடையாது.
நான் நம்பினாலும் நம்பாவிட்டாலும்,
நான் பிறந்திருக்கிறேன்.
நான் இருக்கிறேன் என்பதை
🌹 என்னை நான் தொட்டுப் பார்த்து புரிந்து கொள்ளலாம்.
🌹 அப்படி எதார்த்த உண்மையை புரிந்து கொண்டால் என்னால் நம்பிக்கையை கடந்து வாழ முடியும்.
🌹 நீங்கள்
கடவுளை நேசித்தாலும், நேசிக்க விட்டாலும்
கடவுளை நம்பினாலும் நம்பாவிட்டாலும்
கடவுளை ஒத்துக் கொண்டாலும் ஒத்துக் கொள்ள விட்டாலும்
கடவுளை புரிந்து கொண்டாலும் புரியாவிட்டாலும்
கடவுள் தெரிந்த ஒருவர் அறிமுகமானாலும் ஆகாவிட்டாலும்
🌹 நீங்கள் பிறந்து விட்டீர்கள் அதனால் சாகும்வரை இங்கு இருப்பீர்கள் என்பதே எதார்த்த உண்மை.
🌹 நீங்கள் வாழ்வது எப்படி என்று யாரோ ஒருவர் சொல்லிக் கொடுத்தால்
🌹 அதை நம்பி
🌹 அப்படியே வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.
🌹 அதாவது Program செய்யப்பட்ட Robort போல வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.
தாலி கட்டி
மோதிரம் மாற்றி
நிக்கா செய்து கற்றுக்கொண்டபடி மதச் சடங்குகளை நம்பி வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.
🌹 நம்பிக்கையை கடந்த வாழ்க்கை வாழ வேண்டுமென்றால்
🌹 என்னுடைய அசல் தேவை என்ன ? என்பதை நான் புரிந்து வாழ வேண்டும்.
🌹 அதாவது, நான் ஒரு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருப்பதால்,
🌹 எனக்கான துணை தேவைப்படுவதால்,
🌹 குடும்பமாக, (கணவன்-மனைவியாக) ஒருவருக்கொருவர் அன்பும்,பரஸ்பரமுமாக இருப்பது நல்லது என்ற எதார்த்தத்தை புரிந்து கொண்டு வாழ்வதுதான் நம்பிக்கை கடந்த வாழ்க்கை.
🌹 ஆனால் என் கணவன் அல்லது என் மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறுத்து வாழ்வது நம்பிக்கை சார்ந்தது.
🌹 கணவன் மனைவி உறவினை நம்பாமல் எதார்த்த உண்மைய புரிந்து கொண்டாலே எந்தவித பிரச்சனையும்,கேள்வியும், சந்தேகமும் (கணவன்-மனைவி) உறவில் வராது.
🌹 அதாவது
என் கணவன் அவன் அவனாக இருக்க வேண்டும்..
என் மனைவி அவள் அவளாக இருக்க வேண்டும்.
நான் என் கணவனை நேசிக்க வேண்டும்.
நான் என் மனைவியை நேசிக்க வேண்டும்.
இருவருக்குமான தேவையை நிறைவேற்றுவதில் ஒருவருக்கு ஒருவரின் பங்களிப்பு இருக்க வேண்டும். என்றும்
🌹 இன்னும் மேலாக,
🌹 ஒரு (ஆண்) – பெண்ணையும், (பெண்) – ஆணையும் பார்ப்பது இயற்கை என்ற எதார்த்த உண்மையை புரிந்து கொண்டு வாழ்ந்தாலே கணவன் மனைவிக்குள் பிரச்சனைக்கே இடமில்லை.
🌹 மாறாக,
என் கணவன் எனக்கு மட்டும்தான்.
என் மனைவி எனக்கு மட்டும்தான்
🌹 என்று நம்பினால் அது சந்தேகத்திற்கு வழி வகுத்து எந்த எல்லைக்கும் கொண்டு போய்விடும்.
🌹 நிறைய மனிதர்கள் வாழ்வில் துன்பப்படுவதற்கு காரணம் எதார்த்த உண்மையை புரிந்து கொள்ளாமல் கற்றுக் கொண்ட நம்பிக்கை மட்டும் தான்.
🌹 அதனால் எதையும் நம்ப கூடாது.
🌹 எந்த ஒரு மனிதனும்,
நல்லது கெட்டது இரண்டையும் செய்வான்.
அவனுக்குத் தெரிந்த படி தான் வாழ்வான்.
அவனுக்கு என்ன புரிகிறதோ அப்படித்தான் இருப்பான்.
🌹 என்ற எதார்த்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
🌹 எதார்த்த உண்மையை புரிந்து கொண்டு, நீங்கள் எவ்வளவு தூரம் ஒரு தெளிவான புரிதலை பெற்றிருக்கிறீர்களோ, அதை பொருத்து நம்பிக்கை கடந்த புரிதலால் வாழலாம். புரிதல் ஏற்பட்டால் நன்றாக இருக்கலாம். 🌹