2️⃣ சுவாதிஷ்டானம் 2️⃣
🌻 சுவாசத்தை முடித்துக் கொள்ளும் இடத்திற்கு பெயர் சுவாதிஷ்டானம்.
🌻 அதாவது, இழுத்து விடும் சுவாசத்தை கவனித்தால் அது ஒரு இடத்தில் முடிந்து, அங்கிருந்து கிளம்பும் அந்த இடத்திற்கு பெயர் சுவாதிஷ்டானம்.
🌻 சுவாதிஷ்டானம் தொப்புளுக்கும் மூலாதாரத்திற்கும் இடையே அமைந்துள்ளது.
🌻 சுவாதிஷ்டானம் என்றால்,
🌻 நீங்கள் சுவாதீனமாக இருப்பதையும்,
🌻 நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு அல்லது விருப்பத்திற்கு வசப்படுத்த அல்லது கட்டுப்படுத்த முடியும் என்பதை குறிக்கிறது.
🌻 வயதானவர்கள் தன்னை அறியாமல் சிறுநீர் வெளியேற்றினால் அவர்களுக்கு சுவாதீனம் இல்லை என்று சொல்வதுண்டு.
🌻 அப்படி கழிவுகளை தனது விருப்பத்திற்கு அல்லது தனது இஷ்டத்திற்கு வெளியேற்ற அல்லது கட்டுப்படுத்த உதவுவது சுவாதிஷ்டானம்.
🧘🏻♀️ குருவை சந்தித்து மேல்நோக்கிய சிந்தனை பெற்று எது சுவாதிஷ்டானம் என்று அறிந்து அந்த இடத்திலேயே சுவாசத்தை முடித்து கிளப்பும் கலையை பயிற்சியாக பெற்று அனுபவித்தல் நல்லது. 🧘🏻
3️⃣ மணிப்பூரகம் 3️⃣
🌻 தொப்புள் இருக்கும் இடத்திற்கு பெயர் மணிப்புரகம்.
🌻 மணிப்பூரகம் உடலின் செரிமான உறுப்புகளை இயக்கி உணவில் தேவையான சத்துக்களை எடுத்து உடல் பூரிக்க அல்லது வளர உதவுகிறது.
🌻 கருவில் இருக்கும் குழந்தை வளர்வதற்கான ஊட்டச்சத்துக்களையும் ஆக்சிஜனையும் தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு கொண்டு செல்கிறது.
🌻 அதனால்தான் பெருமாள் வயிற்றிலும் தாமரை மலர் கொடி இணைந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும்.
🌻 புத்தர் ஆரம்ப கட்டத்தில் தொப்புள் புள்ளியின் மீது சுவாசம் வைத்து கவனித்ததாக சொல்லப்படுகிறது.
🧘🏻♀️ குருவை சந்தித்து மேல்நோக்கிய சிந்தனை பெற்று எது மணிப்பூரகம் ? எது தொப்புள் புள்ளி ? என்று அறிந்து, அந்த தொப்புள் புள்ளியில் கவனம் வைத்து அகத்தைப் பூக்கச் செய்வது சிறப்பு. 🧘🏻
4️⃣ அனாகதம் 4️⃣
🌻 தொப்புளுக்கு மேலே நெஞ்சு குழியில் அனாதத்திற்கான இருப்பிடம் உள்ளது.
🌻 அனாதியான ஒரு செயல் அனாகதத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
🌻 சுவாசிக்கும் காற்று உள்ளே சென்று ரத்தத்தில் கலந்தாலும் வெளியே வரும் போது ரத்தமாக வருவதில்லை.
🌻 அப்படி விசேஷமான ஒரு அனாதியான செயல் உள்ளே நடந்து கொண்டிருக்கிறது.
🌻 அதனால் தான் அந்த இடத்திற்கு அனாகதம் என்ற பெயர் வைத்திருக்கிறார்கள்.
🧘🏻♀️ குருவை சந்தித்து மேல் நோக்கிய சிந்தனை பெற்று அனாகதத்தை அறிந்து அனுபவித்து மும்மலத்திலிருந்து அனாதியாகுவது (காலியாகுவது) சிறப்பு. 🧘🏻
5️⃣ விசுத்தி 5️⃣
🌻 விஷத்தை (தேவையற்றதை) சுத்தம் செய்து கொள்ளுதல்.
அல்லது
🌻 விசேஷத்தை சுரந்து சுத்தம் செய்தல்.
🌻 விசுத்தி தொண்டைக் குழியில் விசுத்தி மையம் கொண்டிருக்கிறது.
🌻 விசுத்தி தொண்டையில் உள்ள உறுப்புகளை இருக்கிறது.
🌻 உண்ணும் உணவினை சுரப்பிகளால் சுத்தம் செய்து உடலுக்கு ஏற்றார் போல் கூழ்மமாக மாற்றுகிறது.
🌻 மேலும் தொண்டையில் உள்ள தைராய்டு என்ற சுரப்பி தேவைக்கு ஏற்றபடி சுரந்து உடலில் சீராக இயங்க உதவுகிறது.
🧘🏻♀️ குருவின் அருளால் மேல் நோக்கிய சிந்தனை பெற்று விசேஷத்தை சுரந்து விஷத்தை சுத்தம் செய்யும் விசுத்தி அறிந்தனுபவித்து மனதை சுத்தம் செய்வது சிறப்பு. 🧘🏻
6️⃣ ஆக்கினை 6️⃣
🌻 ஆக்கினை – ஆக்குதல் அல்லது உருவாக்குதல்.
🌻 எந்த ஒரு செயலுக்கும் ஆதாரமாக நினைப்பு தான் உள்ளது.
🌻 எல்லா செயலுக்கும் ஆக்கையாக, ஆதாரமாக, நினைப்பாக இருப்பதால் இதற்கு ஆக்கினை என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
🌻 குருவின் அருளால் சிந்தனை பெற்றவருக்கு எண்ணத்தை ஆக்கும் அல்லது உருவாக்கும் ஆக்கினை புலப்படுகிறது.
🧘🏻♀️ குருவின் அருளால் அனைத்திற்கும் ஆக்கையாக இருக்கும் ஆக்கினையை விழிப்படையச் செய்து அனைத்தையும் அனுபவிப்பது சிறப்பு. 🧘🏻
7️⃣ சகஸ்ராரம் 7️⃣
🌻 சக்கரத்திற்கான ஆரம்
🌻 சகஸ்ராரம் தலை உச்சியில் மையம் கொண்டுள்ளது.
🌻 சகஸ்ராரத்திற்கு ஆயிரம் தாமரை மலர்தல் என்றும் ஒரு பெயர் உண்டு.
🌻 ஆயிரம் தாமரை மலரும் போது உள்ளே வினைகள் எல்லாம் புலப்படுகிறது.
🧘🏻♀️ குருவின் அருளால் சிந்தனை பெற்று கோடு போன்று ஆரமாக இருக்கும் சகஸ்ராரத்தை அனுபவிப்பது சிறப்பு. 🧘🏻
📖 மூலம் முதல் ஆறு தளம் கீழே தள்ளி 📖
🌻 ஏழு சக்கரங்கள் உடலில் உள்ளே இருந்தாலும் ஒவ்வொரு சக்கரத்தையும் தனித்தனியாக உணர முடியாது.
🌻 ஆனால் எங்கு எண்ணம் எழும்புகிறதோ அந்த இடத்தை எளிதாக உணர முடியும்.
🌻 அதற்கு கீழ் உள்ள ஐந்து சக்கரங்களும் வேலை செய்ய வேண்டும்.
🌻 ஆனால் அதையெல்லாம் கடந்து மேலே வந்தால் தான் அகம் மலரும் என்பதனால்,
🌻 மூலம் முதல் ஆறு தளம் கீழே தள்ளி என்று அகத்தைப் புரிந்து கொண்ட அகத்தியர் சொல்கிறார்.
🧘🏻♀️ குருவின் அருளால் உபதேசம் பெற்று,
1️⃣ மூலாதாரம்,
2️⃣ சுவாதிஷ்டானம்,
3️⃣ மணிப்பூரகம்,
4️⃣ அனாகதம்,
5️⃣ விசுத்தி,
6️⃣ ஆக்கினை,
7️⃣ சகஸ்ராரம்
இவை அனைத்தும் ஒன்றையே குறிக்கிறது என்ற புரிதலை பெற்று மூலம் முதல் ஆறுதளம் கீழே தள்ளும் வித்தை அறிந்து மேலிருப்பது சிறப்பு. 🧘🏻
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : JULY 2025