மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
(தியானம்) என்பது வேறு (பக்தி) என்பது வேறு.
🌹 இந்த உலகத்தில் கடவுள் தெரியாத, கடவுள் புரிந்து கொள்ளாத மனிதர்களால், தியானம், பக்தி என்ற பெயரில் ஏமாறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
🌹 தியானத்தையும் பக்தியையும் கடவுள் தெரிந்த, கடவுள் புரிந்த ஒரு குருவிடம் கேட்டு தெரிந்து கொண்டால் தான் அதற்கான பலனை பெற முடியும்.
பக்தி :
🌹 கடவுள் புரிந்து கொள்ளாமல் கடவுளின் பெயரால் கற்றுக்கொண்ட சடங்குகளை செய்வது பக்தி கிடையாது.
🌹 கடவுள் தெரிந்த மனிதனிடம் அல்லது குருவிடம் கேட்டு கடவுளை புரிந்து கொண்டு செய்வதே பக்தி.
🌹 என் இருதயம் என்னால் துடிப்பதில்லை.
🌹 ஏதோ ஒன்று கடத்துக்குள் (உடலுக்குள்) இருந்து துடிக்க வைக்கிறது.
🌹 கடத்துக்குள் (உடலுக்குள்) இருப்பதால் கடவுள் என்று
🌹 ஒரு மனிதன் கடவுளை புரிந்து கொண்டான் என்றால்,
தன்னை அலங்கரித்து,
தன்னை அர்ச்சித்து,
தன்னை ஆரோக்கியமாகவும்,
தன்னை கொண்டாட்டமாகவும்,
தன்னை மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்வது தான்
🌹 கடவுளுக்கு செய்யும் பக்தி என்பது புரிந்து விடும்.
தியானம் :
🌹 தியானம் என்பது யோக சாதனையில் ஏழாவது இடத்தில் உள்ளது.
1️⃣ இயமம்,
2️⃣ நியமம்,
3️⃣ ஆசனம்,
4️⃣ பிராணயாமம்,
5️⃣ பிரத்யகார,
6️⃣ தாரணை,
7️⃣ தியானம்
8️⃣ சமாதி
🌹 யோக சாதனை என்றால் இறைவனுடன் கூடி அல்லது இணைந்து சமாதி – (சம)(ஆதி) சாதிப்பது.
🌹 சமாதி சாதித்த குருவின் உதவியால் தெரிந்து கொண்டு ஒன்று முதல் ஏழாவது நிலைக்கு வந்து எட்டாவது நிலைக்குச் செல்வது.
🌹 அதாவது ஏழு நிலைகளை கடந்து தியானத்தால் சமாதி அடைய முயற்சிப்பதாகும்.