சக்கரங்களும் சத்தங்களும் :
🌻 நீங்கள் ஒவ்வொரு பொருளையும் தட்டும்போது ஒவ்வொரு விதமான சத்தம் எழும்புவதை கவனத்திற்கலாம்.
🌻 எழுப்பும் சத்தத்தை கொண்டே அது எந்த உலோகத்தில் இருந்து எழும்பியது என்று கண்டுபிடிக்க முடியும்.
🌻 அப்படி சப்தத்திற்கும் பொருளுக்கும் தொடர்பு இருப்பதை போல,
🌻 இந்த உடம்பில் எழும் ஒவ்வொரு சப்ததங்களும், ஒவ்வொரு சக்கரங்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறது.
🌻 அதனால்தான் சப்தங்களை எழுப்பி சக்கரங்களை விழிப்படையச்செய்ய முடியும் என்பதற்காக,
🌻 நம் முன்னோர்கள் ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஒவ்வொரு கடவுளை வைத்து,
🌻 ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக மந்திரங்களை உருவாக்கி பயன்படுத்தினார்கள்.
🧘🏻♀️ மேலும் தெளிவு பெற்று சப்தங்களை எழுப்பி சக்கரங்களை விழிப்படையச் செய்ய குருவை சந்திப்பது நல்லது. 🧘🏻
சக்கரங்கள் விழிப்படைதல் :
🌻 சக்கரங்கள் விழிப்படைதல் என்றால் மூலாதாரத்தில் காமம் சார்ந்து மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்த ஒரு சக்தி,
1️⃣ காமத்தை கடந்து,
2️⃣ காமத்தை தன் வசப்படுத்தி காமமற்று போய்
3️⃣ சாப்பிடுவதையும் கடந்து
4️⃣ அனாதத்தையும் கடந்து
5️⃣ விசுத்தியையும் கடந்து
6️⃣ எண்ணமாக இருக்கும் இடத்திற்கு செல்லும் போது தான் அதை உணர முடிகிறது.
🌻 அப்படி 1️⃣2️⃣3️⃣4️⃣5️⃣எண்ணத்தை – 6️⃣எண்ணத்தோடு நிறுத்துகிற போது
🌻 அந்த இடத்தில் ஒரு அரிப்பு அல்லது துடிப்பு ஏற்படுகிறது.
🌻 அந்த இடம் கருப்பாக கூட மாறிவிடுகிறது.
🌻 அந்த இடத்தையே நினைத்து நினைப்பை நினைப்பிலேயே வைத்திருக்க வேண்டும் என்பதினால் தான்,
🌻 சந்தனம் வைத்தல், பொட்டு வைத்தல், அந்த இடத்தில் பச்சை குத்துதல் போன்ற வழிமுறைகள் வந்தது.
🌻 இந்த வழிமுறைகள் அனைத்தும் புருவ மத்தியில் நினைப்பை வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக உருவாக்கப்பட்டது.
🌻 ஆனால் அதை ஒரு சடங்காகவோ அல்லது வழிபடும் முறையாகவோ செய்வதால் எந்த பயனும் இல்லை.
🧘🏻♀️ நினைப்பை நினைப்பிலேயே வைத்திருக்கும் கலையை பயிற்சியாக பெறுவதற்கு குருவை சந்திப்பது நல்லது. 🧘🏻
Main Switch – ஆக்கினை சக்கரம் :
🌻 பல அறைகள் உள்ள ஒரு மாளிகையில் தனித்தனியாக ஒவ்வொரு Light Switch-ஐயும் ON செய்வதற்கு பதிலாக,
🌻 ஒரு மெயின் Switch-ஐ ON செய்தால் அனைத்து Light-களும் எரிந்து அந்த மாளிகையே பிரகாசமாவதைப் போல போல,
🌻 உடலில் அனைத்து சக்கரத்திற்கும் ஆக்கையாக உள்ள ஆக்கினை சக்கரத்தை மட்டும் விழிப்படையச் செய்தால்,
🌻 அனைத்து சக்கரங்களும் விழிப்படைந்து விடும்.
🧘🏻♀️ அப்படி (Main Switch)-ஐ ON செய்வதற்கான யுக்திகளை குருவினை சந்தித்தறிந்து ஆக்கினை சக்கரத்தை விழிப்படையச் செய்வது நல்லது. 🧘🏻
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : JULY 2025