நெற்றிக்கண் விழிப்பின் அனுபவம் :
🌻 நெற்றிக்கண் விழிப்பு ஏற்பட ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான யுக்திகளை கையாளுகிறார்கள்.
🌻 ஆனால்,நெற்றிக்கண் விழிப்பு ஏற்பட்டதற்கான அனுபவம் என்னவென்றால்,
🌻 அவருக்கு ஆக்கினை திறந்திருக்கும்.
🌻 அவரால் அந்த இடத்தில் விசேஷமான ஒரு துடிப்பை அல்லது உணர்வை அனுபவிக்க முடியும்.
🌻 ஒரு நல்ல மனிதனை அல்லது குருவை சந்தித்தால் அந்த இடத்தில் அவருக்கு அரிப்பு அல்லது ஒரு உன்னதமான உணர்வு ஏற்படும்.
🧘🏻♀️ குருவை சந்தித்து உபதேசமும் பயிற்சியும் பெற்று நெற்றிக்கண் விழிப்பபடைந்தவர்களின் அனுபவமே இதற்கு சான்று. 🧘🏻
குருவும் நெற்றிக்கண் விழிப்பும் :
🌻 ஒரு நல்ல குருவை சந்திக்காமல் நெற்றிக்கண் விழிப்பு ஏற்பட்டு அந்த இடத்தில் உணர்வு பெறுவது என்பது சாத்தியமற்றது.
🌻 அதற்கு நீங்கள் கடந்து வந்த Yoga Center – களின் அனுபவமே சான்று.
🌻 Main Switch-ஐ மட்டும் ON செய்வதால் Light எரிந்து வெளிச்சம் வந்து விடாது.
🌻 அந்த Line-ல்Current Flow-ம் இருக்க வேண்டும்.
🌻 அதாவது நீங்கள் ஏதோ ஒரு ஆன்மீக வகுப்புக்கு சென்று ஏதோ ஒரு பயிற்சியை கற்றுக்கொண்டு செய்வதால் மட்டும் நெற்றிக்கண் விழிப்பு ஏற்பட்டு விடாது.
🌻 எனக்கும் இறை உணர்வு ஏற்பட்டிருக்க வேண்டும்.
🌻 என் குருட்டுத் தன்மையை நீக்குவதற்கு இறை உணர்வு பெற்ற வெளிச்சமான ஒரு குருவின் கல்வியும் வழிகாட்டுதலும் எனக்கு கிடைத்திருக்க வேண்டும்.
🌻 இறை உணர்ந்த அந்த மனிதனின் வழிகாட்டுதலால் இறைவனைப் புரிந்து கொள்ளும் போது தான்,
🌻 எனக்கு இறை உணர்வே தோன்றுகிறது.
🌻 அப்படி இறைவனின் குரு கொடுத்த பயிற்சியை அணுகும் போது தான் எனக்கு நெற்றிக்கண் விழிப்பு என்பது சாத்திய படுகிறது.
🌻 மற்றபடி அதைப் பற்றி கற்றுக் கொள்வதால் புரிந்து கொள்ளலாமே தவிர அனுபவம் என்பது இருக்கப் போவதில்லை.
🧘🏻♀️ இறைவனைப் பற்றிய புரிதலைப் பெற்று இறை உணர்வில் உறவாடி நெற்றிக்கண் விழிப்பு ஏற்பட குருவை சந்திப்பது நல்லது. 🧘🏻
நெற்றிக்கண் விழிப்பும் இறைத் தொண்டும் :
🌻 நான் என்னுடைய நினைப்பை இறைவன் பால் அல்லது இயற்கையின் பால் திருப்பி
🌻 என்னை நலமாகவும் சிறப்பாகவும் வளமாகவும் வைத்துக் கொள்வதே,
🌻 இறைவனுக்கு நான் செய்யும் பெரிய தொண்டாகிறது.
🌻 அப்படி வாழ்பவரின் உடல், ஆரோக்கியம் பெற்று,
🌻 அவருக்கு நெற்றிக்கண் விழிப்பும் எளிதில் சாத்திய படுகிறது.
🌻 நெற்றிக்கண் விழிபடைந்தவர் உணர்வாளனாக மாறிவிடுகிறார்.
🌻 அவரால் அவருடைய உணவினை பக்தியில் இறை உணர்வுடன் சாப்பிட முடிகிறது.
🌻 அவரால் ஒரு பெண்ணை இறை உணர்வில் பார்க்க முடிகிறது.
🌻 அவருடைய குழந்தைகளையும் இறை உணர்வில் பார்க்க முடிகிறது.
🌻 அவரால் யாரையும், எவரையும், எல்லாவற்றையும் இறை உணர்வில் பார்க்க முடிகிறது.
🧘🏻♀️ குருவை சந்தித்து பெற்ற புரிதலாலும்,நெற்றிக்கண் விழிப்பினாலும் நான் என்னை சிறப்பாக வைத்துக் கொள்வதே இறைவனுக்கும் குருவுக்கும் நான் செய்யும் தொண்டு. 🧘🏻
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : JULY 2025