நெற்றிக்கண் விழிப்பும் ஆணவமும் :
🌻 ஒரு மனிதனுக்கு நெற்றிக்கண் துடிப்பு ஏற்பட்டால் அவருடைய ஆரா வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.
🌻 ஆராவை வளர்த்தவன் என்று பிறரிடம் நிரூபிப்பதற்காக நெற்றிக்கண் விழிப்பிற்கு முயற்சிப்பது ஆணவத்தை தான் உண்டு பண்ணும்.
🌻 அதனால் மேற்கொண்டு அனுபவங்களை பெற முடியாது.
🌻 அதாவது இறைவன் பக்கம் திரும்ப முடியாது.
🌻 நெற்றிக்கண் விழிப்பு ஏற்பட்டவுடன் ஆணவமற்று இறைவன் பக்கம் திரும்பி இறைவனை புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
🌻 ஆணவமற்று முயற்சித்தால் எளிதில் இறைவனை புரிந்து கொள்ளலாம்.
🌻 நெற்றிக்கண் விழிப்பினால் இறைவனைப் புரிந்து கொண்டால் நிறைவாகவும், சந்தோசமாகவும், அமைதியாகவும் வாழலாம்.
🌻 அப்படி வாழ்பவரின் எல்லா செயல்களும் நேர்த்தியாகவும் அழகாகவும் மாறி விடும்.
சக்கரங்களும் சுரப்பிகளும் :
🌻 பொதுவாக வெளிச்ச உடம்பு முதுகுத்தண்டில் பரவி இருந்தாலும்,
🌻 அது இயக்குவது உறுப்புகளை தான்,
🌻 அப்படி அது இயக்கும் ஒவ்வொரு உறுப்புகளிலும் ஒவ்வொரு விதமான திரவத்தை சுரந்து ஒரு சுரப்பியாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
🌻 உதாரணமாக, மூலாதாரம் மலத்தை வெளியேறுவதற்கு அந்த இடத்தில் ஒரு திரவத்தை சுரக்க செய்து
🌻 அதன் மூலம் மலம் வெளியேற்றும் செயலை செய்கிறது.
🌻 அப்படி ஒவ்வொரு சக்கரங்களும் அது இயக்கும் உறுப்புக்களில் செயல்பாடுகளை பொருத்து திரவத்தை சுரக்கும் சுரப்பிகளாகவும் செயல்படுகின்றன.
நெற்றிக்கண் விழிப்பும் மனத் தெளிவும்
🌻 மனதால் வாழ்பவன் மனிதன் என்று சொல்வதுண்டு.
🌻 அதாவது மனதில் எழும் எண்ணத்தால் வாழ்பவன் மனிதன்.
🌻 அப்படி என்றால் ஒரு மனிதன் சிறப்பாக வாழ வேண்டும் என்றால் அவனுடைய எண்ணம் தெளிவாகவும் சிந்திக்கும் விதம் சரியாகவும் இருக்க வேண்டும்.
🌻 அதனால்தான் மற்ற சக்கரங்களை கவனிப்பதை விட எண்ணத்திற்கு ஆதாரமான ஆக்கினையை விழிப்படைய வைக்க முயற்சிக்கிறார்கள்.
🌻 அதற்கு பலவிதமான யுக்திகளை கையாளுகிறார்கள்.
🌻 சிறப்பான மனிதனின் அல்லது குருவின் பாதத்தில் தலை வைத்து வணங்கும் வழிமுறையும் நெற்றிக்கண்ணை விழிப்படையச் செய்வதற்காகத்தான் தோன்றியது.
சக்கரங்களை தொட்டு எழுப்பி நெற்றியில் வைத்தல் :
🌻 சக்கரங்களை தொட்டு எழுப்பி அதை நெற்றியில் வைத்தல் என்பது சாத்தியமற்றது.
🌻 ஆனால் தந்திரமாக விரலில் Chemical-ஐ தொட்டு அதை நெற்றியில் வைத்து அதனால் ஏற்படும் ஊரலை நெற்றிக்கண் விழிப்பு என நம்ப வைத்து விடலாம்.
🌻 அல்லது இப்படி ஊரல் எடுக்கும் என்று சொல்லிக் காட்டலாம்.
🌻 ஆனால் அது நெற்றிக்கண் விழிப்பு கிடையாது.
🌻 ஒரு நல்ல குருவை சந்தித்து இறை சிந்தனையும், பயிற்சியும் பெற்று சுயமாக நான் இறை உணர்வில் வாழ்ந்து முயற்சிக்கும் போது மட்டும் தான் என்னால் நெற்றிக்கண் விழிப்பினை உணர முடியும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : JULY 2025