உணவுப் பழக்கமும் சக்கரங்களும்
🌻 எந்த மாதிரியான உணவு உட்கொள்கிறோம் என்பதற்கும்,சக்கரங்களுக்கும் சம்பந்தம் கிடையாது.
🌻 ஆடும் மாடும் புல்லை சாப்பிடுவதால் ஆடு மாடாகாது மாடு ஆடாகாது.
🌻 அதனால் சாத்வீகம் என்பது உணவில் கிடையாது.
🌻 சாத்வீகம் என்பது குணம் அது என்னிடம் தான் இருக்கிறது.
🌻 சைவமோ, அசைவமோ எந்த உணவையும் நன்றியுணர்வுடன்,மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் சாப்பிட்டாலே நான் சாத்வீகமாக உணவருதுகிறேன் என்று அர்த்தம்.
ஒருவேளை உண்பவன் யோகி
இரண்டு வேலை உண்பவன் போகி
மூன்று வேளை உண்பவன் ரோகி
🌻 என்று சொல்வதால்,
🌻 ஒரு மனிதன் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு யோகி ஆகி விட முடியாது.
🌻 உடல் உழைப்பு அற்று மரத்தில் வாழும் யோகிக்கு ஒருவேளை உணவே போதுமானது.
🌻 ஆனால், உடலால் உழைக்கும் யோகிக்கு ஒருவேளை போதாது.
🌻 அதனால், எனக்கு என்ன தேவை என்பதை ஒரு தனி மனிதனாக நான் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
🌻 பழமொழிகளை நம்பி நான் என்னை வருத்தி விடக்கூடாது.
🌻 ஏனென்றால் வாழ்க்கை கொண்டாட்டத்திற்குரியது.
🌻 எந்த ஒரு செயலும் அல்லது யாரோ ஒருவர் சொல்லிய கருத்தையும் நான் பின்பற்றுவதும் எனக்கு கொண்டாட்டத்தை தருகிறதா என்பதில் நான் கவனமாக இருக்க வேண்டும்.
சக்கரங்களும் பயிற்சியும்
🌻 பொதுவாக வெளிச்ச உடம்பு கீழே மூலதாரத்திலேயே இருந்து காமம் சார்ந்து செயல்பட்டு செலவாகி விடுகிறது.
🌻 அதை இறைவன் பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்காக,
🌻 தக்கன் வேள்வி என்ற பயிற்சி மூலம் மேலெழுப்பி தகுதி உடையவனாக்க வேள்வி செய்கிறோம்.
🌻 அதாவது இறைவனை உணர்வதற்கு தகுதி உடையவன் ஆக்குவதற்கான வேள்வியை பயிற்சியாக செய்கிறோம்.
🌻 அதைத்தான் சிவவாக்கியரும்,
📖 மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை
📖 காலமே எழுந்திருந்து நாலு கட்டு அறுப்பிரேல்
📖 பாலனாகி வாழலாம் பரப்பிரம்மம் ஆகலாம்
📖 ஆழம் உண்ட க ண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே.
🌻 என்று பயிற்சியை பாடலாக்கி வைத்திருக்கிறார்.
🧘🏻♀️ மேலும் விழிப்பு ஏற்பட குருவை நேரில் சந்திப்பது சிறப்பு. 🧘🏻
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : JULY 2025