👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 003 நீத்தார் பெருமை 📖 (Neethar Perumai)
📖 (குறள் – 0021) 📖
📖 ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
📖 வேண்டும் பனுவல் துணிவு.
🌻 ஒழுக்கத்தால்(இயல்பாக)நீர்த்துபோனவர்களின் பெருமையை,
🌻 பகிந்துகொள்ள துணிவு வேண்டும்.
📖 (குறள் – 0022) 📖
📖 துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
📖 இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
🌻 துறந்தாரின் பெருமையை துணையாக கூறினால் உலகமோ
🌻 இறந்தவர்களை எண்ணிக்கொண்டது.
📖 (குறள் – 0023) 📖
📖 இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
📖 பெருமை பிறங்கிற்று உலகு.
🌻 இரண்டின் வகை அறிந்து இங்கே இயல்பனார்
🌻 பெருமையை பேசுவதே உலகம்.
📖 (குறள் – 0024) 📖
📖 உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
📖 வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.
🌻 உயிர் என்ற தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்
🌻 வாழ்வென்ற ஆதாரத்திற்கு விதை.
📖 (குறள் – 0025) 📖
📖 ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
📖 இந்திரனே சாலுங் கரி.
🌻 ஐந்தாக பிரிபவனின் ஆற்றலை அகல் விளக்கின் திபம் போல் காக்கும்
🌻 தலைவன் யானை அடக்கிய இந்திரன்.
📖 (குறள் – 0026) 📖
📖 செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
📖 செயற்கரிய செய்கலா தார்.
🌻 அரிய செயல்களை செய்பவர் பெரியவர்கள்,சிறியவர்கள்
🌻 அரிய செயல்களை செய்ய முடியாதவர்.
📖 (குறள் – 0027) 📖
📖 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
📖 வகைதெரிவான் கட்டே உலகு.
🌻 சுவை,பார்வை,தொடுதல்,கேட்டல்,முகர்தல் என ஐந்தின்
🌻 வகையாக அறிவதே உலகம்.
📖 (குறள் – 0028) 📖
📖 நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
📖 மறைமொழி காட்டி விடும்.
🌻 நிறைவான மொழி மனிதர்களின் பெருமையை, மண்ணில்
🌻 மறைவான மொழி காட்டிவிடும்.
📖 (குறள் – 0029) 📖
📖 குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
📖 கணமேயும் காத்தல் அரிது.
🌻 குணம் என்ற குன்றின் மேல் நிற்பவர்கள் கோபத்துடன்
🌻 கண நேரம்கூட இருப்பது கடினம்.
📖 (குறள் – 0030) 📖
📖 அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
📖 செந்தண்மை பூண்டொழுக லான்.
🌻 அந்தணர் (அந்தம் அறிந்ததால் அதாவது முடிவு அறிந்ததால்)என்பவர்கள் அறமுடையவர் மற்ற எல்லா உயிர்களிடத்திலும்
🌻 செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(004 – அறன் வலியுறுத்தல்) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 போதும் என்ற நிறைவை தரும் ஒழக்கத்துடன் வாழ்ந்து நிறைவடைந்தவர்களை விரும்பி அறிய துணிவு அவசியம்.
🌻 இறந்தவர்கள் எல்லாம் நிறைவானவர்கள் என்று எண்ணக்கூடாது.
🌻 இரண்டால் ஆன உலகை புரிந்து கொள்ளவேண்டும்.
🌻 புலன்களை கட்டுப்பாட்டிற்க்குள் வைப்பதே சிறந்தது.
🌻 அப்பொழுது, மனித ஆற்றல் முற்றிலும் உணரப்பட்டு இந்திரனைப்போல் வாழலாம்.
🌻 இத்தகைய பண்புள்ளவர்களே அரிய செயல்களை செய்வார்கள்.
🌻 புலன்கள் புலப்படுத்தும் சுவை, ஒளி,ஊறு,ஒசை,நாற்றம் என்ற ஐந்தால் இந்த உலகை அறிகிறோம்.
🌻 நிறைவானவர்கள் பெருமையை போற்றுவதே மறைநூல்கள்.நற்குணம் அடைந்தவர் கோபத்தை அதிக நேரம் தக்கவைத்துக்கொள்வது இல்லை.
🌻 அந்தனர் என்பவர் யாவரும் எல்லா உயிரும் இன்பற்று மகிழவே எண்ணுவார்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : April 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈