👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 005 இல்வாழ்வு 📖 (Ilvazvu)
📖 (குறள் – 0041) 📖
📖 இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
📖 நல்லாற்றின் நின்ற துணை.
🌻 குடும்பம் நடத்தும் ஒருவன்,
🌻 இயல்பாக மாறிய முவருக்கும் நல்லது செய்யும் துணை.
📖 (குறள் – 0042) 📖
📖 துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
📖 இல்வாழ்வான் என்பான் துணை.
🌻 போதும் என்று நிறைவை அடைந்தவருக்கும்,
🌻 நிறைவு அடையாதவருக்கும்,இறந்தவருக்கும் ,குடும்பத்தானே துணையாவான்.
📖 (குறள் – 0043) 📖
📖 தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
📖 ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
🌻 தெரியும் புலன் அறிந்தவர் சிறந்த மனிதர்களை உபசரிப்பது,
🌻 ஐந்து புலன்கள் தலையில் ஒத்திசைவு கொள்வது போல் இருக்கும்.
📖 (குறள் – 0044) 📖
📖 பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
📖 வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
🌻 பழித்துவிடதாவாறு பக்குவமாக உண்ணுவது புரிந்து விட்டால் வாழ்க்கையின்
🌻 பாதையில் இடையுறு இல்லை.
📖 (குறள் – 0045) 📖
📖 அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
📖 பண்பும் பயனும் அது.
🌻 அடுத்தவர்களும் வாழவேண்டும் என்ற மனமும்,தனக்குத் தானே உண்மையாக இருக்கும் குணமும், உண்டாக குடும்ப வாழ்க்கையே
🌻 பண்போடு பயன் தருவதாக இருக்கிறது.
📖 (குறள் – 0046) 📖
📖 அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
📖 போஒய்ப் பெறுவ எவன்.
🌻 அறத்துடன் இருக்க குடும்பத்தானாக இருக்க வேண்டும். புறத்தே
🌻 சென்று பேறு அடைந்தவன் யார் ?
📖 (குறள் – 0047) 📖
📖 இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
📖 முயல்வாருள் எல்லாம் தலை.
🌻 இயல்பாக குடும்ப வாழ்க்கை வாழ்பவனே,
🌻 உண்மையறிய முயலும் அனைவரிலும் தலையானவன்.
📖 (குறள் – 0048) 📖
📖 ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
📖 நோற்பாரின் நோன்மை உடைத்து.
🌻 வாழ்வின் முறை அறிந்து வாழ்ந்து அறத்திற்கு கேடு செய்யாத குடும்ப வாழ்கை,
🌻 உண்மையறிய முறைசெய்வதைவிட முறையானது.
📖 (குறள் – 0049) 📖
📖 அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
📖 பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
🌻 அறம் எனப்படுவதே குடும்ப வாழ்க்கை. அதுவும்
🌻 பிறர் பழிக்கும்படி இல்லாமல் இருப்பது நன்று.
📖 (குறள் – 0050) 📖
📖 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
📖 தெய்வத்துள் வைக்கப் படும்.
🌻 உலகத்தில் வாழும் முறையுடன் வாழ்பவன். வான்போன்ற
🌻 தெய்வமாக மதிக்கப்படுவான்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(005 – இல்வாழ்வு) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 உள்ளபடி இருத்தல் என்ற தன்மையே இல்வாழ்வு.
🌻 இதன் பெருட்டு அடையும் நன்மைகள் அதிகம்.
🌻 துறவு மெற்கொண்டவர், வாழ்பவர், இறந்தவர் என்ற மூவருக்கும் உதவும் ஆற்றலும், விருந்தேம்பலும், பழிக்கு அஞ்சுவதும் இல் வாழ்வின் சிறப்பு கூறுகள்.
🌻 எனவே, அன்புடனும், அறனுடனும் நடப்பதே பண்பும், பயனுள்ளதும் ஆகும்.
🌻 குடுப்பத்திலிந்து கற்க முடியதவர் துறப்பதால் எதையும் கற்க முடியாது.
🌻 இல்வாழ்வு போன்ற சிறந்த நோன்பு இல்லை.
🌻 பிறர் பழிக்காதபடி வாழ்வாங்கு வாழ்ந்தால் தெய்வமாகலாம்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : April 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈