👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 006 வாழ்க்கைத் துணைநலம் 📖 (Vazkai Thunainalam)
📖 (குறள் – 0051) 📖
📖 மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
📖 வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
🌻 விட்டிற்கு தேவையானதை சிறப்புற செய்பவளை, தனதாக கொண்டவன்
🌻 வளம் பல காணும் வாழ்கை துணை அடைந்தவன்.
📖 (குறள் – 0052) 📖
📖 மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
📖 எனைமாட்சித் தாயினும் இல்.
🌻 வீட்டை சிறப்பாக ஆளும் தகுதி இல்லாதவள் இல்லத்தரசி(மனைவி)யானால் வாழ்வில்
🌻 எவ்வளவு சிறப்புகள் இருந்தும் பயன் இல்லை .
📖 (குறள் – 0053) 📖
📖 இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
📖 இல்லவள் மாணாக் கடை.
🌻 இல்லை என்பதே இல்லத்தாளின் குணமாக இருந்தால், உள்ளது எது
🌻 இல்லத்தாளை விட துன்பம் தரும் ஒன்று.
📖 (குறள் – 0054) 📖
📖 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
📖 திண்மைஉண் டாகப் பெறின்.
🌻 பெண்ணை விட பெறவேண்டிய ஒன்று எதுவும் இல்லை. கற்பென்னும்
🌻 திடத்தன்மை உண்டாக்க பெற்றால்.
📖 (குறள் – 0055) 📖
📖 தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
📖 பெய்யெனப் பெய்யும் மழை.
🌻 சிறப்பு பெற்றவர்களை தொழ மறுத்து தனது கணவனை மட்டுமே தொழுபவள்
🌻 எதிர்பாக்கும் பொழுது பெய்யும் மழை போன்றவள்.
📖 (குறள் – 0056) 📖
📖 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
📖 சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
🌻 தன்னை காத்து தான் கொண்டவர்களை பாதுகாத்து தகுதிக்கு உதாரனமாய்
🌻 வாய்ச்சொல் காத்து சோர்வில்லாமல் இருபவளே பெண்.
📖 (குறள் – 0057) 📖
📖 சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
📖 நிறைகாக்கும் காப்பே தலை.
🌻 காவலில் வைத்து காப்பது என்ன செய்யும், பெண்களின்
🌻 தன்னை தான் காக்கும் தன்மையே முதன்மையானது.
📖 (குறள் – 0058) 📖
📖 பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
📖 புத்தேளிர் வாழும் உலகு.
🌻 அடைந்தவர் அடைந்தது அடையவேண்டிய பெண்ணை, அறியசிறப்பும்
🌻 புதிய ஒளியும் இருக்கும் உலகில்.
📖 (குறள் – 0059) 📖
📖 புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
📖 ஏறுபோல் பீடு நடை.
🌻 புகழ் அடைந்த குடும்ப வழக்கை வழாதவருக்கு இல்லை,இகழ்ந்து பேசுவார் முன்
🌻 காளை போன்ற கம்பிர நடை.
📖 (குறள் – 0060) 📖
📖 மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
📖 நன்கலம் நன்மக்கட் பேறு.
🌻 முழுமை என்பது குடும்ப வாழ்க்கை, அதன்
🌻 சிறப்பே நல்ல குழந்தைகளை பெறுவது.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(006 – வாழ்க்கைத் துணைநலம்) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 வாழ்தல் என்பது உள்ளது சிறத்தல் ஆகும்.
🌻 அதற்கு துணையாக இருக்கும் எதிர்பாலினம் சிறப்பாக அமைந்துவிட்டால் வளம்பல கிடைத்துவிடும்.
🌻 ஆனால் நிர்வாகத் திறன் இல்லாதவர் என்றால் ஏற்றம் இருக்காது.
🌻 வேண்டிய பொழுது வரும் மழைப் போன்றவள் மனைவி மேலும்,
🌻 தன்னைக் காத்து தன்னை சார்ந்தவரையும் காப்பவள்
🌻 எனவே, பெற வேண்டியது நல்ல துணையே. அதுவே மங்களம்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : April 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈