👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 126 நிறை அழிதல் 📖 (Nirai Arithal)
📖 (குறள் – 1251) 📖
📖 காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
📖 நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
🌻 காமம் சார்ந்த கணக்கிடுதல் உடைத்துவிடும் நிறை என்ற
🌻 நாணத்தால் தாழ் போட்ட கதவும் வீழ்த்தும்படி.
📖 (குறள் – 1252) 📖
📖 காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.
🌻 காமம் என்ற ஒன்று மட்டுமே கண்ணில் நின்று என் நெஞ்சத்தை
🌻 இரவிலும் ஆளும் தொழில் செய்கிறது.
📖 (குறள் -1253) 📖
📖 மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
📖 தும்மல்போல் தோன்றி விடும்.
🌻 மறைக்க முடியுமா என் காமத்தை. அது முன் அறிவிப்புக் குறிப்பின்றி
🌻 தும்மல் போல் தோன்றிவிடுமே.
📖 (குறள் – 1254) 📖
📖 நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
📖 மறையிறந்து மன்று படும்.
🌻 நிறைவானவன் என்றே இருந்தேன் ஏனோ என் மறைக்க முடியா காமம்
🌻 மறைவாக இருந்து பலர் முன்னிலையில் வெளிப்படுகிறது.
📖 (குறள் – 1255) 📖
📖 செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
📖 உற்றார் அறிவதொன்று அன்று.
🌻 விரும்பாது சென்றவர் பின் செல்லாமல் இருக்கும் பெருந்தகைமை காமநோய்
🌻 அடைந்தவர் அறியக்கூடிய ஒன்று இல்லை.
📖 (குறள் – 1256) 📖
📖 செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
📖 எற்றென்னை உற்ற துயர்.
🌻 விரும்பாது சென்றவர் பின் சென்று சேரும் சூழலை அளித்ததே
🌻 என்னை ஏற்ற நானடைந்த துயரம்.
📖 (குறள் – 1257) 📖
📖 நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
📖 பேணியார் பெட்ப செயின்.
🌻 நாணம் என்ற ஒன்றை அறியாமல் போகலாம் காமத்துடன்
🌻 நமக்கு வேண்டியதை பேணுபவர் பெறச் செய்தால்.
📖 (குறள் – 1258) 📖
📖 பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
📖 பெண்மை உடைக்கும் படை.
🌻 பலவிதமான மாயத்தை செய்யும் கள்வன் பணிவாக பேசியே வார்த்தை அன்றோ நம்
🌻பெண்மை உடைக்கும் படை.
📖 (குறள் – 1259) 📖
📖 புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
📖 கலத்தல் உறுவது கண்டு.
🌻 புணரக் கூடாது என சென்றேன் ஆனால் மேய்ந்து கூடினேன் நெஞ்சம்
🌻 கலக்க ஏங்கியதைக் கண்டு.
📖 (குறள் – 1260) 📖
📖 நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
📖 புணர்ந்தூடி நிற்பேம் எனல்.
🌻 கொழுப்பை தீயில் இட்டது போல் உருகும் நெஞ்சினார்க்கு உண்டோ
🌻 புணராமல் ஊடி நிற்போம் எனல்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(126 – நிறை அழிதல்) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 நிறையான நாணம் என்ற கதவு உடைபடும் காமம் கணிந்தால்.
🌻 காமம் கண்ணில் நிறைந்து இரவும் பகலுமாய் நெஞ்சை ஆள்கிறது.
🌻 காமம் தும்மல் போல் தோன்றுவதால் மறைக்க இயலவில்லை.
🌻 நிறையானவன் என்றே இருந்தேன் இறையான அவன் மேல் கொண்ட காமம் மறைக்கமுடியாமல் பலர் முன்னிலையில் வெளிப்படுகிறது.
🌻 அவன்(இறை) என்னை மறந்து விலகினாலும் அவன் மேல் உள்ள காமத்தால் பெருந்தகமை இல்லாமல் போயிற்று.
🌻 நம்மை காக்கும் இறை மேல் காமம் நாணம் என்ற ஒன்றை இல்லாமல் செய்திடும்.
🌻 பலவிதமான மாயத்தை செய்யும் கள்வனான இறைவன் பணிவாக பேசியே வார்த்தையாகிய நாதம் அன்றோ நம் பெண்மை என்ற அச்சம் உடைக்கும் படை.
🌻 யோகம் என்ற புணர்தல் கூடாது என சென்றேன் ஆனால் மேய்ந்து கூடினேன் நெஞ்சம் கலக்க ஏங்கியதைக் கண்டு.
🌻 கொழுப்பை தீயில் இட்டது போல் உருகும் நெஞ்சி உடைய பக்தனுக்கு உண்டோ புணராமல் ஊடி நிற்போம் எனல்?.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈