👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 123 பொழுது கண்டு இரங்கல் 📖 (poluthu Kandu Irangal)
📖 (குறள் – 1221) 📖
📖 மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
📖 வேலைநீ வாழி பொழுது.
🌻 மாலைப் பொழுதோ இல்லை மணமானவர்களின் உயிரை உண்ணும்
🌻 வேலையோ உன்னை வாழ்த்துகிறேன் பொழுதே.
📖 (குறள் – 1222) 📖
📖 புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
📖 வன்கண்ண தோநின் துணை.
🌻 மாயமாக தாக்கி மயங்கும் மாலைப் பொழுதே வாழ்க எனது உறவுக்குரியவர் போல்
🌻 கடினமானதோ உன் துணை.
📖 (குறள் -1223) 📖
📖 பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
📖 துன்பம் வளர வரும்.
🌻 பனி போல் மெல்ல அரும்பி வேகமாய் வரும் மாலை சிறு துளி அரும்பித்
🌻 துன்பம் வளர வரும்.
📖 (குறள் – 1224) 📖
📖 காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
📖 ஏதிலர் போல வரும்.
🌻 காதலர் உடன் இல்லாத மாலைப் பொழுது கொலைக் களத்தில் இருக்கும்
🌻 இரக்கமில்லாதவரைப் போல் வரும்.
📖 (குறள் – 1225) 📖
📖 காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
📖 மாலைக்குச் செய்த பகை.
🌻 காலைப் பொழுதுக்கு என்ன நன்றி செய்தேனோ எப்படி அறிய முடியுமோ
🌻 மாலைப் பொழுதுக்கு செய்த பகை.
📖 (குறள் – 1226) 📖
📖 மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
📖 காலை அறிந்த திலேன்.
🌻 மாலைப் பொழுது தரும் நோய் எப்படிப்பட்டது என்று மணந்தவர் என்னை விட்டு விலகாத
🌻 காலத்தில் அறியாமல் இருந்தேன்.
📖 (குறள் – 1227) 📖
📖 காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
📖 மாலை மலரும்இந் நோய்.
🌻 காலையில் அரும்பாகி பகல் பொழுதில் வளர்ச்சி பெற்ற போது என மாறி
🌻 மாலையில் முழுமையாக மலரும் இந்நோய்.
📖 (குறள் – 1228) 📖
📖 அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
📖 குழல்போலும் கொல்லும் படை.
🌻 கருகச் செய்யும் மாலைக்கு தூதாகி தாக்குகிறது தேடுபவன்
🌻 குழல் போன்ற கொல்லும் படை.
📖 (குறள் – 1229) 📖
📖 பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
📖 மாலை படர்தரும் போழ்து.
🌻 தலைவனின் மருட்சியால் உறவோர்கள் மயங்குவதைப் போல் நிலவு மருண்டு
🌻 மாலை படர்தரும் போழ்து.
📖 (குறள் – 1230) 📖
📖 பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
📖 மாயும்என் மாயா உயிர்.
🌻 பொருள் தேடி சென்றத் தலைவனை எண்ணி அச்சம் தரும் மாலைப்பொழுதுக்கு
🌻 அழியும் என் அழியா உயிர்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(123 – பொழுது கண்டு இரங்கல்) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 மாலையோ இல்லை மணமானவர்கள் உயிர் வாங்கும் வேலையோ எப்படி இருப்பினும் உன்னை வாழ்த்துகிறேன்.
🌻 உன் துணையும் என் துணை போன்று பிரிந்து கூடும் ஒன்றோ பனி போல் துளித்து அரும்புகிறதே.
🌻 காதலர் இல்லாத பொழுது வரும் மாலை ஒரு கொலைகளத்து எதிலர் போல் இருக்கிறது.
🌻 காலை பொழுதிற்கு நன்றியும் மாலை பொழுதிற்கு பகையும் ஆனது எனோ?.
🌻 மாலை தரும் துன்பம் அவருடன் இருந்த காலத்தில் அறியவில்லை.
🌻 காலை அரும்பி பகலில் போதாகி மாலையில் மலரும் இந்த காமநோய்.
🌻 போர்களத்து ஓசையாக இருக்கிறது இந்த மாலை.
🌻 நிலவும் மயங்கி நிலை குலைகிறது மாலை பொழுதில்.
🌻 ஒயாத உயிரும் மாய்கிறது பொருள் தேடி சென்ற தலைவன் நினைவால்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
👉 (124-உறுப்பு நலன் அழித்தல்) 👈
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈