👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 122 கனவு நிலை உரைத்தல் 📖 (kanavu Nilai Uraithal)
📖 (குறள் – 1211) 📖
📖 காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
📖 யாதுசெய் வேன்கொல் விருந்து.
🌻 காதலரை இணைக்கும் தூதொடு வந்த கனவிற்கு என்ன செய்வேனோ
🌻 எவ்வகையில் செய்வேனோ விருந்து.
📖 (குறள் – 1212) 📖
📖 கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
📖 உயலுண்மை சாற்றுவேன் மன்.
🌻 மீன் போன்ற கண்கள் உறங்கும் நிலையில் காதலரை கலந்தால்
🌻 உற்ற உண்மையை எப்படிச் சொல்லுவேன்.
📖 (குறள் -1213) 📖
📖 நனவினால் நல்கா தவரைக் கனவினால்
📖 காண்டலின் உண்டென் உயிர்.
🌻 நிகழும் காலத்தில் நெருங்காதவரை கனவில்
🌻 கண்டு உறவாடுவதால் இருக்கிறது என் உயிர்.
📖 (குறள் – 1214) 📖
📖 கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
📖 நல்காரை நாடித் தரற்கு.
🌻 கனவில் கண்டு உறவாடி மகிழும் காமத்தால் நேரில் நாடாத
🌻 அவரை நாட காரணமாய் இருக்கிறது.
📖 (குறள் – 1215) 📖
📖 நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
📖 கண்ட பொழுதே இனிது.
🌻 நேரில் கண்டு இருந்தது எப்படியோ கனவில்
🌻 கண்ட பொழுதும் இருந்தது அதே இனிமை.
📖 (குறள் – 1216) 📖
📖 நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
📖 காதலர் நீங்கலர் மன்.
🌻 நேரில் நிகழ்வது என்று ஒன்றில்லை என்றால் கனவில்
🌻 காதலர் நீங்காமல் இருப்பார் அன்றோ.
📖 (குறள் – 1217) 📖
📖 நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
📖 என்எம்மைப் பீழிப் பது.
🌻 நேரில் நாடி வராத கொடியவர் கனவில் வந்து
🌻 ஏன் என்னை வருந்தச் செய்வது.
📖 (குறள் – 1218) 📖
📖 துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
📖 நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
🌻 உறங்கையில் உறவாடுபவராக இருப்பவர் விழித்தவுடன்
🌻 நெஞ்சத்திலே நிறைந்து விடுகிறார் விரைந்து.
📖 (குறள் – 1219) 📖
📖 நனவினால் நல்காரை நோவர் கனவினால்
📖 காதலர்க் காணா தவர்.
🌻 நேரில் நெருங்காதவரை நொந்துக் கொள்வார்கள் யார் எனப் பார்த்தால் அவர்கள் கனவிலும்
🌻 காதலரை காணாதவர்கள்.
📖 (குறள் – 1220) 📖
📖 நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
📖 காணார்கொல் இவ்வூ ரவர்.
🌻 நனவினால் நம்மை பிரிந்து இருப்பவர்கள் என்று சொல்கிறார்கள் கனவினால்
🌻 உறவாடுவதை காணாத இவ்வூர் மக்கள்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(122 – கனவு நிலை உரைத்தல்) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 காதலரை இணைக்க வந்த கனவை எப்படி கொண்டாடி மகிழ்வேன்.
🌻 மீன் போன்ற கண்கள் உறங்கும் தருணம் காதலரை கலந்தால் எப்படி உரைப்பேன்.
🌻 நேரில் நெருங்காத என் காதலர் கனவில் கலப்பதால் நிலைக்கிறது என் உயிர்.
🌻 கனவில் என் காமம் நிறைவாகிறது.
🌻 நேரில் கண்ட சுகம் கனவு தருகிறது.
🌻 நேரில் நடக்கவே நடக்காது என்றால் கனவில் நீங்காமல் இருக்கலாம்.
🌻 நேரில் வராத கொடிய காதலர் கனவில் வந்து பிழைக்கச் செய்கிறார்.
🌻 உறக்கத்தில் உறவாடி விழிப்பில் நெஞ்சம் நிறைகிறார்.
🌻 நேரில் நெருங்காதவரை நொந்துக் கொள்பவர்கள் கனவிலும் காணதவர்கள்.
🌻 நாங்கள் கூடவில்லை என நினைக்கும் இவ்வூர் மக்கள் கனவில் இணைவதை அறியாதவர்கள்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
👉 (123-பொழுது கண்டு இரங்கல்) 👈
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈