👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 011 செய்நன்றி அறிதல் 📖 (Sei Nandri Arithal)
📖 (குறள் – 0101) 📖
📖 செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
📖 வானகமும் ஆற்றல் அரிது.
🌻 செய்கிறோம் என்று அறியாமலேயே, செய்த உதவியானது, பூமியும்
🌻 வானமும் வழங்குவதை விட மேலானது.
📖 (குறள் – 0102) 📖
📖 காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
📖 ஞாலத்தின் மாணப் பெரிது.
🌻 சரியான நேரத்தில் செய்த உதவி, சிறியதாக இருப்பினும்,
🌻 அதுவே உலகத்தின் மிக பெரியது.
📖 (குறள் – 0103) 📖
📖 பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
📖 நன்மை கடலின் பெரிது.
🌻 பயன் கருதி செய்யாமல், செய்த உதவியை எண்ணிப் பார்பத்தின்
🌻 நன்மை கடலை விட பெரியது.
📖 (குறள் – 0104) 📖
📖 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
📖 கொள்வர் பயன்தெரி வார்.
🌻 தினையளவு துணையாக நன்றி செய்தலும், பனையளவு துணையாக
🌻 ஏற்பார்கள், நன்றியின் பயன் தெரிந்தவர்கள்.
📖 (குறள் – 0105) 📖
📖 உதவி வரைத்தன்று உதவி உதவி
📖 செயப்பட்டார் சால்பின் வரைத்து.
🌻 உதவுவது வரையறை செய்யாமல் உதவுவது, உதவியின் தன்மை
🌻 செய்பவரின் நிலையை பொறுத்து அமைகிறது.
📖 (குறள் – 0106) 📖
📖 மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
📖 துன்பத்துள் துப்பாயார் நட்பு.
🌻 மறக்கவேண்டாம் மாசற்றவர்களின் உறவை. துறக்க வேண்டாம்
🌻 துன்பத்துடன் இருக்கையில் விலக நினைக்காதவர் நட்பை.
📖 (குறள் – 0107) 📖
📖 எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
📖 விழுமந் துடைத்தவர் நட்பு.
🌻 தோன்றும் அடுத்த பிறப்புக்கும் எண்ணுவர். தனக்கு
🌻 வந்த துன்பத்தை அழித்தவரின் நட்பை.
📖 (குறள் – 0108) 📖
📖நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
📖 அன்றே மறப்பது நன்று.
🌻 பெற்ற உதவியை மறப்பது பெருமையல்ல. நமக்கு செய்த தீங்கை
🌻 உடனே மறப்பது நல்லது.
📖 (குறள் – 0109) 📖
📖 கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
📖 ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
🌻 கொல்வதை போன்ற துன்பம் செய்தாலும், அவர் செய்த
🌻 நன்மை ஒன்றை நினைக்க துன்பம் மறையும்.
📖 (குறள் – 0110) 📖
📖 எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
📖 செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
🌻 எந்த உதவியை மறந்தவருக்கும் முக்தி உண்டு. முக்தி இல்லை,
🌻 தான் பெற்ற உதவியை மறந்தவருக்கு.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(011 – செய்நன்றி அறிதல்) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 உதவுகிறோம் என்ற நினைப்பு இல்லாமல் உதவுவதே ஆனந்தம்.
🌻 அது இந்த வானத்தையும், பூமியையும் விட மிகப் பெரியது.
🌻 பிறர் நமக்கு செய்த துன்பத்தை விட நன்மை சிறிது செய்திருந்தாலும் அதை எண்ணிப் பார்பதே நமக்கு நல்லது.
🌻 பெற்ற உதவியை மறப்பவர் உய்வு அடைய முடியாது.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : April 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈