👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 012 நடுவு நிலைமை 📖 (Naduvu Nilaimai)
📖 (குறள் – 0111) 📖
📖 தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
📖 பாற்பட்டு ஒழுகப் பெறின்.
🌻 தகுதி என்ற ஒன்று நல்லது.
🌻 அது பிரித்துப் பார்க்காமல் எல்லாரிடமும் ஒன்றாக பழுக்கும் தன்மை பெற்றதால்.
📖 (குறள் – 0112) 📖
📖 செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
📖 எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
🌻 சிறப்பு பொருந்தியவன் செயல்கள் வீணாகாமல் வளரும்.
🌻 சந்ததிக்கும் தனிச்சிறப்பு உடையதாய் இருக்கும்.
📖 (குறள் – 0113) 📖
📖 நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
📖 அன்றே யொழிய விடல்.
🌻 நன்மை தருவதாக இருப்பினும்,
🌻 நடுநிலை தவறிய செயல்களை உடனே ஒழித்து விட வேண்டும்.
📖 (குறள் – 0114) 📖
📖 தக்கார் தகவிலர் என்பது அவரவர்
📖 எச்சத்தாற் காணப்ப படும்.
🌻 தகுதி உடையவர் தகுதி அற்றவர் என்பது,
🌻 அவர் விட்டுச் செல்லும் உடல் மற்றும் படைப்புகளில் காணப்படும்.
📖 (குறள் – 0115) 📖
📖 கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
📖 கோடாமை சான்றோர்க் கணி.
🌻 கெடுவதும் பெருகுவதும் இல்லாமல் இருக்காது.
🌻 மனசாட்சிக்கு மாறுபாடு அற்று இருப்பதே உதாரணமாக வாழ்பவருக்கு அழகு.
📖 (குறள் – 0116) 📖
📖 கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
📖 நடுவொரீஇ அல்ல செயின்.
🌻 கெடப்போகிறேன் நான் என்பதை அறியட்டும் நெஞ்சம்.
🌻 நடுநிலை தவறியதை செய்தால்.
📖 (குறள் – 0117) 📖
📖 கெடுவாக வையாது உலகம் நடுவாக
📖 நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
🌻 கெடுதலாக குறைத்து பேசாது உலகம்.
🌻 நடுநிலையோடு நன்றியணர்வு கொண்டவனின் வறுமையை.
📖 (குறள் – 0118) 📖
📖சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
📖 கோடாமை சான்றோர்க் கணி.
🌻 சமமாக செய்து சரியாக தூக்கும் கோல் போல இருந்து,
🌻 யாதொரு பக்கமும், துக்கம் தராமல் இருப்பது, உதாரணமாக வாழும் மனிதர்களுக்கு அழகு.
📖 (குறள் – 0119) 📖
📖 சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
📖 உட்கோட்டம் இன்மை பெறின்.
🌻 வார்த்தையின் எல்லை இல்லாத சிறப்பு,
🌻 ஒருபக்கமாக உள் எல்லை இல்லாமல் இருந்தால் வரும்.
📖 (குறள் – 0120) 📖
📖 வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
📖 பிறவும் தமபோல் செயின்.
🌻 வியாபாரம் செய்பவருக்கு வியாபாரம் செய்து (வாங்குபவருக்கு விற்று),
🌻 மற்றபடி பிற யாவற்றையும் தமக்கு உண்டானதை போல் செய்ய வேண்டும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(012 – நடுவு நிலைமை) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 அவர் இவர் என்று பாரபட்சம் பார்க்காமல் இருப்பதே தகுதி.
🌻 அப்படி வாழ்பவரே தக்கார்.
🌻 அதை அவரது எச்சமாகிப் போன உடல் காட்டிவிடும்.
🌻 கேடும், பெருக்கமும் நிலைத்தவை இல்லை என்று அறிந்தவரே சான்றோர்.
🌻 தன்னைப் போல் பிறரை எண்ணும் தன்மையே அவருக்கு அணிகலனாக அமையும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : April 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈