👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 010 இனியவை கூறல் 📖 (Iniyavai Kooral)
📖 (குறள் – 0091) 📖
📖 இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
📖 செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
🌻 மகிழ்வான வார்த்தையால் ஈரம் பெருகும், பொய்மை இன்றி
🌻 உண்மையை அறிந்தவர்களின் வாய் சொல்.
📖 (குறள் – 0092) 📖
📖 அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
📖 இன்சொலன் ஆகப் பெறின்.
🌻 உள்முகமாக இருந்து செய்யும் செயல்களில் நல்லது, முக மலர்ச்சியுடன்
🌻 இனிய வார்த்தைகள் சொல்லுவது.
📖 (குறள் – 0093) 📖
📖 முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
📖 இன்சொ லினதே அறம்.
🌻 முகத்திற்கு நேராக அமர்ந்து, இனிமையாக பார்த்து, உள்ளத்திலிருந்து
🌻 இனிய வார்த்தைகளை தருவதே அறம்.
📖 (குறள் – 0094) 📖
📖 துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
📖 இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
🌻 துன்புறுவதும் துவண்டு விடுவதும் இல்லாமல் போகும். யாரும்
🌻 இன்பமடையும் இனிய சொல் பேசுபவருக்கு.
📖 (குறள் – 0095) 📖
📖 பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
📖 அணியல்ல மற்றுப் பிற.
🌻 பணிவானவனாகவும் இனிமையான சொல்லை பேசுபவனாகவும் மாறுவதே, ஒருவருக்கு
🌻 சிறந்த அணிகலன் மற்றவைகள் இதுபோன்றவை அல்ல.
📖 (குறள் – 0096) 📖
📖 அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
📖 நாடி இனிய சொலின்.
🌻 தீமைகள் அழிந்து நன்மை பெருகும். நல்லது எது என்று
🌻 தேடி இனிமையான வார்த்தைகள் பேசினால்.
📖 (குறள் – 0097) 📖
📖 நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
📖 பண்பின் தலைப்பிரியாச் சொல்.
🌻 நன்மை தரும், நன்றியுணர்வும் கொடுக்கும், பயன்கருதி
🌻 பக்குவமாய் பெசப்படும் வார்த்தை.
📖 (குறள் – 0098) 📖
📖சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
📖 இம்மையும் இன்பம் தரும்.
🌻 குழந்தைத் தனமற்ற இனிய வார்த்தை, நாளையும்
🌻 இன்றும் இன்பம் தரும்.
📖 (குறள் – 0099) 📖
📖 இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
📖 வன்சொல் வழங்கு வது.
🌻 இனிய வார்த்தைகளால் இன்பம் காண்பவன், எதற்க்காக?
🌻 வன்மையான வார்த்தைகளை வழங்குவது.
📖 (குறள் – 0100) 📖
📖 இனிய உளவாக இன்னாத கூறல்
📖 கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
🌻 இனிமையானது இருக்கும் பொழுது, இனிமையின்றி கூறுவது,
🌻 கனி இருக்க காய் பறிப்பது போன்றது.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(010 – இனியவை கூறல்) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 செம்பொருள் கண்டவர் வார்த்தைகள் கண்களில் ஈரம் வழிய செய்யும்.
🌻 உள்ளத்தை பொருத்தே கொடுக்கும் அளவு இருக்கும்.
🌻 முக மலர்ச்சி பொருத்தே வார்த்தை பொருள்படும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : April 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈