👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 009 விருந்தோம்பல் 📖 (Virunthombal)
📖 (குறள் – 0081) 📖
📖 இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
📖 வேளாண்மை செய்தற் பொருட்டு.
🌻 இருக்க செய்து இல்வாழ்வது, விருந்து கொடுப்பது போன்றவைகள்
🌻 விவசாயம் செய்பவர்களின் பொருட்டே வந்தது.
📖 (குறள் – 0082) 📖
📖 விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
📖 மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
🌻 விருந்தாளி வெளியே இருக்க, சாகா
🌻 மருந்தாக இருப்பினும், தான் மட்டும் உண்ணுவது இல்லை.
📖 (குறள் – 0083) 📖
📖 வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
📖 பருவந்து பாழ்படுதல் இன்று.
🌻 ஒவ்வொரு காலையும், விருந்தை எதிர்பார்ப்பவர் வாழ்கை,
🌻 பருவகால மாற்றத்தால் பாதிப்பது இல்லை.
📖 (குறள் – 0084) 📖
📖 அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
📖 நல்விருந்து ஓம்புவான் இல்.
🌻 உள்ளே இருந்து எதையும் செய்யவிடாமல் தடுக்கும் சோம்பல், முகமலர்ச்சியுடன்
🌻 விருந்தை கவனிப்பவர்களை அணுகாது.
📖 (குறள் – 0085) 📖
📖 வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
📖 மிச்சில் மிசைவான் புலம்.
🌻 விதை இட வேண்டுமோ? விருந்து படைத்து இன்பமுடன்
🌻 மிச்சத்தை விரும்பும் மனிதர் நிலத்தில்.
📖 (குறள் – 0086) 📖
📖 செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
📖 நல்வருந்து வானத் தவர்க்கு.
🌻 செல்லும் விருந்தினரை வழி அனுப்பி, வரும் விருந்துக்கு எதிர்பார்பவரை,
🌻 தெய்வீகமானவர்கள் ஆசீர்வதிப்பார்கள்.
📖 (குறள் – 0087) 📖
📖 இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
📖 துணைத்துணை வேள்விப் பயன்.
🌻 தன்னை விட தனக்கு துணை ஒன்று இல்லை. விருந்தின் பயன்
🌻 வேள்வி பயன் போல் துணையாக இருக்கும்.
📖 (குறள் – 0088) 📖
📖 பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
📖 வேள்வி தலைப்படா தார்.
🌻 போதனையால் பற்றை விட்டோம் என்பார்கள்; விருந்து படைக்கும்
🌻 வேள்வியை செய்ய முற்படாதர்வர்கள்.
📖 (குறள் – 0089) 📖
📖 உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
📖 மடமை மடவார்கண் உண்டு.
🌻 அடைந்தவைகளில் விருந்து உபசரிப்பதைபோல் இல்லை.
🌻 சிறுபுத்தி உள்ளவர்களிடம் உபசரிக்காதா மடத்தனம் உண்டு.
📖 (குறள் – 0090) 📖
📖 மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
📖 நோக்கக் குழையும் விருந்து.
🌻 முகர்ந்தாலே வாடும் அனிச்ச மலர்போல், முகத்தை திரித்து
🌻 உபசரித்தாள் வீணாகி விடும் விருந்து.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(009 – விருந்தோம்பல்) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 விவசாயத்தை தொழிலாக கொண்டதால் விருந்து என்பது தோன்றியது.
🌻 உயிர் காக்கும் மருந்தாக இருப்பினும் விருந்துடன் பகிர்ந்து கொள்வதே சிறப்பானது.
🌻 விருந்தை எதிர்பார்ப்பவர் வறுமைக்கு ஆட்படமாட்டார்.
🌻 வேள்வியை விட சிறந்த விருந்தோம்பல் மென்மையானது.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : April 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈