👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 008 அன்புடைமை 📖 (Anbudaimai)
📖 (குறள் – 0071) 📖
📖 அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
📖 புன்கணீர் பூசல் தரும்.
🌻 அன்பினை தடுக்கும் தாழ்பாள் உண்டா? அன்பு மிகுதி அடைந்தாள்
🌻 கண்ணில் ஈரம் பெருகி வெளிப்படும்.
📖 (குறள் – 0072) 📖
📖 அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
📖 என்பும் உரியர் பிறர்க்கு.
🌻 அன்பில்லாதவர் எல்லாவற்றையும் தனக்கு உரியது என்பார். அன்புள்ளவர்களோ
🌻 எனதுயிரும் உரியது பிறருக்கு என்பார்.
📖 (குறள் – 0073) 📖
📖 அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
📖 என்போடு இயைந்த தொடர்பு.
🌻 அன்புடன் இணைந்த செயல் என்பது, சிறந்த உயிர்களின்
🌻 உடம்புடன் உயிர் கொள்ளும் தொடர்பை போன்றது.
📖 (குறள் – 0074) 📖
📖 அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
📖 நண்பு என்னும் நாடாச் சிறப்பு.
🌻 அன்பு தருகின்ற ஆர்வம் உண்டானால் , அதுதரும்
🌻 நல்லபன்புகள் நாட முடியாத சிறப்புகளாகும்.
📖 (குறள் – 0075) 📖
📖 அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
📖 இன்புற்றார் எய்தும் சிறப்பு.
🌻 அன்பினால் அமையும் செயல் என்பது, உலகத்தில்
🌻 இன்பம் பெற்றவர்களின் சிறப்பு.
📖 (குறள் – 0076) 📖
📖 அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
📖 மறத்திற்கும் அஃதே துணை.
🌻 தர்ம செயல்களுக்கு மட்டுமே அன்பு காரணம் என்பார்கள் அறியாதவர்கள்,
🌻 வீரத்திற்கும் அன்பே துணையாகும்.
📖 (குறள் – 0077) 📖
📖 என்பி லதனை வெயில்போலக் காயுமே
📖 அன்பி லதனை அறம்.
🌻 எலும்பு இல்லாதவற்றை வெயில் தாக்குவதை போல, தாக்கும்
🌻 அன்பில்லாதவர்களை அறம்.
📖 (குறள் – 0078) 📖
📖 அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
📖 வற்றல் மரந்தளிர்த் தற்று.
🌻 அகத்தில் அன்பில்லா உயிர் வாழ்க்கை, கடினமான பாறையில்
🌻 வெப்பத்தில் மரம் துளிர்வதை போன்றது.
📖 (குறள் – 0079) 📖
📖 புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
📖 அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
🌻 வெளியே இருக்கும் உறுப்புகள் தீங்கு செய்யும். உடம்பின்
🌻 உள் உறுப்பு அன்பில்லாதவருக்கு.
📖 (குறள் – 0080) 📖
📖 அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
📖 என்புதோல் போர்த்த உடம்பு.
🌻 அன்பின் பாதையே உயிரின் தன்மை, அன்பில்லாதவர்களுக்கு
🌻 எலும்பு மேல் போர்த்திய தோல் போன்றதே உடம்பு.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(008 – அன்புடைமை) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 ஒருவர் அன்பானவராக இருந்தால் அவரால் இரக்கத்தை மறைக்க முடியாமல் கண்களில் கண்ணிர் வழியும்.
🌻 தனக்கு என்று மறைக்காமல் தன் உயிரையும் அடுத்தவற்கு தரவல்லவராகவும்,
🌻 அடுத்தவருடன் ஒத்திசைவுடனும், ஆர்வமுடனும் இருப்பார்கள்.
🌻 இன்பமுடனும், அறம் காக்கும் பண்புடனும், உண்மையான உயிர் வாழ்தல் என்ற சிறப்புடனும் இருப்பார்கள்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : April 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈