👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 061 மடியின்மை 📖 (Madiyinmai)
📖 (குறள் – 0601) 📖
📖 குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
📖 மாசூர மாய்ந்து கெடும்.
🌻 உள்ளது சிறத்தல் என்ற வாழ்வுக்கான குறைவற்ற விளக்கம் சோர்வு என்ற
🌻 அதிபயங்கரத்தால் அழிந்துவிடும்.
📖 (குறள் – 0602) 📖
📖 மடியை மடியா ஒழுகல் குடியைக்
📖 குடியாக வேண்டு பவர்.
🌻 ஊக்கமின்மையை ஊக்கப்படுத்தாமல் கடைபிடிக்க வேண்டும். சிறந்த வாழ்வை
🌻 சிறப்பான வாழ்வாக வாழ வேண்டுபவர்.
📖 (குறள் – 0603) 📖
📖 மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
📖 குடிமடியும் தன்னினும் முந்து.
🌻 சோம்பிச் சோம்பலை உரிமையாகக் கொண்ட அறிவற்றவர் தான் பிறந்த
🌻 குடும்பம் தனக்கு முன்னமே அழிவதைக் காண்பார்.
📖 (குறள் – 0604) 📖
📖 குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
📖 மாண்ட உஞற்றி லவர்க்கு.
🌻 உள்ளது சிறத்தல் என்ற வாழ்வு அழிந்து குற்றங்கள் பெருகும் சோம்பலால்
🌻 கவரப்பட்டு உலகில் இருப்பவர்களுக்கு.
📖 (குறள் – 0605) 📖
📖 நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
📖 கெடுநீரார் காமக் கலன்.
🌻 நீண்ட அழுகை, மறந்துவிடுவது, சோம்பல், அதிகபட்ச உறக்கம் இவை நான்கும்
🌻 அழிவை விரும்புபவர்களின் ஆயதங்கள்.
📖 (குறள் – 0606) 📖
📖 படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
📖 மாண்பயன் எய்தல் அரிது.
🌻 ஆற்றலுடையவர் உறவு இருந்தாலும் சோம்பலுடையவர்
🌻 நற்பயன் அடைவது கடினம்.
📖 (குறள் – 0607) 📖
📖 இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
📖 மாண்ட உஞற்றி லவர்.
🌻 சறுக்கி விழுந்து ஏளனச் சொல் கேட்பார் சோம்பலாய் இருந்து
🌻 மாண்டவர் போல் உலகில் இருப்பவர்.
📖 (குறள் – 0608) 📖
📖 மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
📖 அடிமை புகுத்தி விடும்.
🌻 சோம்பல் உள்ளது சிறக்கும் வாழ்வில் தங்கி தனது பகைவருக்கு
🌻 சோம்பல் உள்ளது சிறக்கும் வாழ்வில் தங்கி தனது பகைவருக்கு அடிமையாக மாற்றிவிடும்.
📖 (குறள் – 0609) 📖
📖 குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
📖 மடியாண்மை மாற்றக் கெடும்.
🌻 உள்ளது சிறக்கும் வாழ்வில் ஏற்பட்ட தவறுகள் ஒருவர்
🌻 தனது சோம்பலை மாற்றுவதால் தீர்க்கப் படும்.
📖 (குறள் – 0610) 📖
📖 மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
📖 தாஅய தெல்லாம் ஒருங்கு.
🌻 சோம்பல் அற்ற மன்னவன் அடையும் நற்பயன்கள்
🌻 போலவே ஒப்ப முயற்சியுடைவருக்கும் கிடைக்கும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(061 – மடியின்மை) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 வளர்ச்சிக்கான வாழ்தல் சோர்வால் தடைபடும்.
🌻 சோர்வை சோர்வின்றி நீக்க வேண்டும்.
🌻 அப்படி செய்யாதவர் அறிவற்றவரே.
🌻 அழுகை, மறதி, சோம்பல், தூக்கம் இதை விரும்புபவர் வளர்ச்சியை காண முடியாது.
🌻 சோம்பல் அற்றவர் வாழ்வு மன்னன் வாழ்வு போல் இருக்கும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈