👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 060 ஊக்கமுடைமை 📖 (Ukkamudaimai)
📖 (குறள் – 0591) 📖
📖 உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
📖 உடையது உடையரோ மற்று.
🌻 உலக நன்மைகளை பெற்றவர் எனப்படுவது உச்சாகமுடன் ஆர்வமாய் செயல்படுவது. அப்படி இல்லை என்றால்
🌻 உள்ளதும் உள்ளபடி இல்லாமல் மாறும்.
📖 (குறள் – 0592) 📖
📖 உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
📖 நில்லாது நீங்கி விடும்.
🌻 உள்ளத்தில் உரிமையாக அடைந்ததே உரிமையானது. பொருளை அடைந்தது
🌻 நிலை இல்லாமல் விலகிவிடும்.
📖 (குறள் – 0593) 📖
📖 ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
📖 ஒருவந்தம் கைத்துடை யார்.
🌻 பயன் அற்றுப் போனதே என்று தன்நிலை இழக்க மாட்டார் ஊக்கத்தை
🌻 ஒருவர் தனது கைத்துணையாய் வைத்துக்கொண்டால்.
📖 (குறள் – 0594) 📖
📖 ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
📖 ஊக்க முடையா னுழை.
🌻 பயனுள்ள செயல்கள் வீனாகாமல் நடக்கும்,
🌻 தளராத ஊக்கத்தை உரிமையாக அடைந்த ஒருவர் இடத்தில்.
📖 (குறள் – 0595) 📖
📖 வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
📖 உள்ளத் தனையது உயர்வு.
🌻 நீரின் அளவு தண்டு நீண்டு மலரை வெளிக்காட்டும் அதுபோலவே
🌻 உள்ளத்தின் அளவிற்கு ஏற்ப மனிதர்களின் உயர்வும் இருக்கும்.
📖 (குறள் – 0596) 📖
📖 உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
📖 தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
🌻 உள்ளத்தின் எண்ணங்கள் அனைத்தும் உயர்வானதாகவே இருக்கவேண்டும்.
🌻 உயர்வற்றவை, விலக்கினாலும் விலகாவிட்டாலும் வீரியம் அற்றுப்போகும்.
📖 (குறள் – 0597) 📖
📖 சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
📖 பட்டுப்பா டூன்றுங் களிறு.
🌻 அழியும் தருணத்திலும் தளரமாட்டார்கள் உள்ளத்தில் வலிமை உடையவர்கள் அம்புகளால் மறைத்தாலும்
🌻 அடங்காது செயல்படும் ஆண்யானை போன்று.
📖 (குறள் – 0598) 📖
📖 உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
📖 வள்ளியம் என்னுஞ் செருக்கு.
🌻 ஊக்கம் கொண்ட உள்ளம் இல்லாதவர் உலகத்தை
🌻 வென்றோம் என்ற பெருமை அடையமுடியாது.
📖 (குறள் – 0599) 📖
📖 பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
📖 வெரூஉம் புலிதாக் குறின்.
🌻 கூரிய தந்தம் இல்லை என்றாலும் யானையை
🌻 மடக்கும் ஆர்வம் கொண்ட புலியே ஊக்கத்திற்கு அடையாளம்.
📖 (குறள் – 0600) 📖
📖 உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
📖 மரம்மக்க ளாதலே வேறு.
🌻 ஒருவருக்கு உரமாக இருப்பது உள்ளம் எண்ணமற்று வெறுமை அடையும் செல்வம். அப்படி அடையாதவர்கள்
🌻 செய்யப்பட்ட மனிதர்களே அன்றி வேறு இல்லை
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(060 – ஊக்கமுடைமை) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 உரிமையாக அடையவேண்டிய உடைமைப் பொருள் ஊக்கம்.
🌻 அது இல்லை என்றால் அடைந்த எல்லாம் மாறும்.
🌻 ஊக்கம் உள்ளவர்கள் தோல்வி கடந்து வெற்ற அடைவார்.
🌻 ஊக்கமே வாழ்வின் நிலைப்பாட்டை தீர்மானிக்கும்.
🌻 தந்தம் உள்ள யானையை எதிர்க்கும் புலி ஊக்கத்திற்கு நல்ல உவமை.
🌻 ஊக்கம் இல்லாதவர் இயந்திர மனிதனே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
👉 (061-மடியின்மை) 👈
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈