👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 014 ஒழுக்கமுடைமை 📖 (Olukkamudaimai)
📖 (குறள் – 0131) 📖
📖 ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
📖 உயிரினும் ஓம்பப் படும்.
🌻 சுயமுன்னேற்றதிற்க்கான வரைமுறையால் சுயத்தை அறியலாம்.
🌻 சுயமுன்னேற்றதிற்கான வரைமுறையை உயிரை விட சிறந்ததாக காக்க வேண்டும்.
📖 (குறள் – 0132) 📖
📖 பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
📖 தேரினும் அஃதே துணை.
🌻 விரும்பி ஏற்றுக் கொள்ளவேண்டும் சுயமுன்னேற்றதிற்க்கான வரைமுறையை.
🌻 புரிந்து கொண்டு நடப்பவருக்கும் அதுவே துணையாக இருக்கிறது.
📖 (குறள் – 0133) 📖
📖 ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
📖 இழிந்த பிறப்பாய் விடும்.
🌻 ஒழுக்கத்தின் வெளிப்பாடே குடும்பம்,
🌻 இழுக்கம் பிறப்பையே அசிங்கப்படுத்தி விடும்.
📖 (குறள் – 0134) 📖
📖 மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
📖 பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
🌻 பார்ப்பவனுக்கு நினைவிழந்து போனானும் ஏற்றுக் கொள்ளலாம்,
🌻 பிறப்பொழுக்கம் அற்றுப் போனால் ஏற்றுக் கொள்ளமுடியது.
📖 (குறள் – 0135) 📖
📖 அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
📖 ஒழுக்க மிலான்கண் உயர்வு.
🌻 அழுக்கு மனம் உள்ளவனின் வளர்ச்சி இல்லா தன்மைப்போல்,
🌻 ஒழுக்கம் இல்லாதவனுக்கு வளர்ச்சி இல்லை.
📖 (குறள் – 0136) 📖
📖 ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
📖 ஏதம் படுபாக் கறிந்து.
🌻 ஒழுக்கத்தில் தவறாதவர்கள் உயர்ந்தவர்கள்,
🌻 அவர்கள் இழுக்கத்தின் அவல நிலை அறிந்து உள்ளார்கள்.
📖 (குறள் – 0137) 📖
📖 ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
📖 எய்துவர் எய்தாப் பழி.
🌻 ஒழுக்கத்தால் உன்னதமான நிலையை அடைவார்கள்.
🌻 இழுக்கத்தால் இதுவரை இல்லாத பழி வரும்.
📖 (குறள் – 0138) 📖
📖நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
📖 என்றும் இடும்பை தரும்.
🌻 நன்றியுனர்வுக்கு விதையாக நல்லொழுக்கம் அமையும்,
🌻 தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தை தரும்.
📖 (குறள் – 0139) 📖
📖 ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
📖 வழுக்கியும் வாயாற் சொலல்.
🌻 ஒழுக்கமானவர்கள் தீமையானவற்றை,
🌻 தவறியும் வாயில் கூட சொல்லுவது இல்லை.
📖 (குறள் – 0140) 📖
📖 உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
📖 கல்லார் அறிவிலா தார்.
🌻 உலக மனிதர்களுடன் ஒத்திசைவு கொள்ள கற்காதவர்,
🌻 பல துறை அறிவு பெற்றும் அறிவில்லாதவரே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(014 – ஒழுக்கமுடைமை) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 வாழ்தலுக்கான வரைமுறையே ஒழுக்கம்.
🌻 அது வீடுபெறு அடைய உதவும் என்பதால் உயிரைவிட மேலானதாக போற்றவேண்டும்.
🌻 ஒழுக்கத்தின் வெளிப்பாடே குடும்பம்.
🌻 நல்லொழுக்கம் என்பதே நன்றியுணர்வுடன் இருப்பது.
🌻 அதிலும் உலகத்துடன் ஒத்திசையும் படி நடப்பவர் கற்று அறிந்தவர்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : April 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈