👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 013 அடக்கமுடைமை 📖 (Adakkamudaimai)
📖 (குறள் – 0121) 📖
📖 அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
📖 ஆரிருள் உய்த்து விடும்.
🌻 பணிவு தெயவீகமானவர்களுடன் சேர்க்கும்.
🌻 பணிவற்ற தன்மை மீளமுடியாத இருட்டில் சேர்த்து விடும்.
📖 (குறள் – 0122) 📖
📖 காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
📖 அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
🌻 பொருளாக இல்லாத அடக்கத்தை பாதுகாக்க வேண்டும்.
🌻 அதன் பயனை விட சிறந்தது இல்லை உயிருக்கு.
📖 (குறள் – 0123) 📖
📖 செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
📖 ஆற்றின் அடங்கப் பெறின்.
🌻 திறன் அறியப்பட்டு நன்மைகள் விளையும்,
🌻 அறிய வேண்டியதை அறிந்து செயல்பட்டு அடக்கமாக இருந்தால்.
📖 (குறள் – 0124) 📖
📖 நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
📖 மலையினும் மாணப் பெரிது.
🌻 இருப்புத் தன்மையை மாற்றிக் கொள்ளாமல்,
🌻 அடக்கம் அடைந்தவரின் வெளிப்பாடுகள் மலையை விட பெரியது.
📖 (குறள் – 0125) 📖
📖 எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
📖 செல்வர்க்கே செல்வம் தகைத்து.
🌻 எல்லாருக்கும் நல்லது பணிதல்,
🌻 அப்படியானவர்களின் மனம் செல்வந்தருக்கும் செல்வம் தர வல்லது.
📖 (குறள் – 0126) 📖
📖 ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
📖 எழுமையும் ஏமாப் புடைத்து.
🌻 ஒன்றில் மட்டும் ஆமைப் போல் ஐந்து புலன்களையும் அடக்க செய்தால்,
🌻 எழுந்து செயல்படும் பொழுதெல்லாம் காவலாக இருக்கும்.
📖 (குறள் – 0127) 📖
📖 யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
📖 சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
🌻 எதைக் காக்காவிட்டாலும் நாவைக் காக்க வேண்டும்,
🌻 இல்லையென்றால் சோகத்தைக் காக்க நேரிடும், சொல் குற்றம் ஏற்பட்டு.
📖 (குறள் – 0128) 📖
📖ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
📖 நன்றாகா தாகி விடும்.
🌻 ஒரே ஒரு தீமையான சொல்,
🌻 அதன் அர்த்தம் விளங்கும் பொழுது நன்மைகள் தாராது போகும்.
📖 (குறள் – 0129) 📖
📖 தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
📖 நாவினாற் சுட்ட வடு.
🌻 தீ பட்ட காயம் ஆறிப்போகும்,
🌻 நாவில் திட்டிய காயம் வடுவாக மாறும்.
📖 (குறள் – 0130) 📖
📖 கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
📖 அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
🌻 முடிவை முன்னிறுத்தி, கற்று அடங்கி நடப்பவன் இடத்தில்
🌻 அறமும் வழி பார்த்து நுழையும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(013 – அடக்கமுடைமை) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 தெய்வீகமானவர்களுடன் சேர்க்கும் அடக்கத்தை அதன் செறிவு அறிந்து காக்க வேண்டும்.
🌻 அவர் மலையை விட பெரியவராய் கருதப்படுவார்.
🌻 வாய்ச்சொல் தவறிவிடாதபடி காப்பதே அவசியம்.
🌻 காரணம் தீ ஏற்படுத்தும் காயத்தைவிட பெரிய காயத்தை உண்டாக்கிவிடும்.
🌻 முழுமையாக கற்று அறிந்தவர் பணிதலுடன் வாழ்வார்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : April 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈