👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 015 பிறனில் விழையாமை 📖 (Piranil Vizlaiyamai)
📖 (குறள் – 0141) 📖
📖 பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
📖 அறம்பொருள் கண்டார்கண் இல்.
🌻 அடுத்தவர் பொருளையே பயன்படுத்திக் கொள்வது அறியாமை.
🌻 அது அறிவினால் நேர்மையின் பொருள் அறிந்தவரிடத்தில் இல்லை.
📖 (குறள் – 0142) 📖
📖 அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
📖 நின்றாரின் பேதையார் இல்.
🌻 அறம் கடந்து இருப்பவர்களை காட்டிலும்,
🌻 பிறரை சார்ந்து நிற்கும் அறிவிலிகள் இல்லை.
📖 (குறள் – 0143) 📖
📖 விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
📖 தீமை புரிந்துதொழுகு வார்.
🌻 ஏசப்படவேண்டியவர் வேறு ஒருவர் இல்லை.
🌻 நன்கு அறிந்தவருக்கு தீமை செய்து பழுகுபவரைத் தவிர.
📖 (குறள் – 0144) 📖
📖 எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
📖 தேரான் பிறனில் புகழ்.
🌻 எத்தனை துணைகளை பெற்றிருந்தால் என்ன?
🌻 தினையளவும் தேர முடியாது அடுத்தவர் பொருள் மேல் பற்று கொண்டால்.
📖 (குறள் – 0145) 📖
📖 எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
📖 விளியாது நிற்கும் பழி.
🌻 எளிதாக இருக்கிறது என்று இல்லத்தை துறப்பவன்,
🌻 எய்தும் ஒன்று அழியாது இருக்கும் பழி மட்டுமே.
📖 (குறள் – 0146) 📖
📖 பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
📖 இகவாவாம் இல்லிறப்பான் கண்.
🌻 பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும்,
🌻 பிரியாமல் இருக்கும், இல்லறத்தை துறந்தவன் இடத்தில்.
📖 (குறள் – 0147) 📖
📖 அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
📖 பெண்மை நயவா தவன்.
🌻 உண்மையான குடும்பத்தான் என்பவன்,
🌻 பிறருக்கு உரிமையான பெண்ணை நாடதவனாக இருப்பான்.
📖 (குறள் – 0148) 📖
📖பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
📖 அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
🌻 அடுத்த வீட்டை ஆராயாத ஆண்மையே,
🌻 முன்மாதிரியாக வாழும் மனிதர்க்கு அறமும் நல்ல ஒழுக்கமும் ஆகும்.
📖 (குறள் – 0149) 📖
📖 நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
📖 பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.
🌻 நலமுடன் இருக்க உரியவர் யாரென்றால்,
🌻 தங்கும் உடல் நீரை அடுத்தவருக்கு உரிமையானவளின் தோள் தொட்டு தராதவர்.
📖 (குறள் – 0150) 📖
📖 அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
📖 பெண்மை நயவாமை நன்று.
🌻 அறமாக வரையறுத்தவைக்கு எதிராக செய்தாலும்,
🌻 பிறருக்காக வரையறுக்கப் பட்டவளின் பெண்மையை நாடாததே நன்று.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(015 – பிறனில் விழையாமை) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 அடுத்தவரின் பொருள்களை பயன்படுத்திக் கொள்வது, அறம் என்றால் என்ன என்று அறிந்தவர்கள் செய்வதில்லை.
🌻 பகை, பாவம், பழி,பயமுடையவர், இல்லறத்தார் ஆவர்.
🌻 அவர் அடுத்தவர் குடும்ப வாழ்வை சிதைக்க காரணமாக இருக்க மாட்டார்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : April 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈