👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 067 வினைத் திட்பம் 📖 (Vinaithitbam)
📖 (குறள் – 0661) 📖
📖 வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
📖 மற்றைய எல்லாம் பிற.
🌻 செயலில் உறுதி என்பது ஒருவரது மனதின் உறுதியே,
🌻 மற்றவை எல்லாம் அதற்கு அடுத்ததே.
📖 (குறள் – 0662) 📖
📖 ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
📖 ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
🌻 கூட்டத்தில் இருந்து தனித்து சிந்தித்தல், தேர்தெடுத்த செயலை விலகாது செய்தல், இவ்விரண்டையும்
🌻 ஒழுக்கமாக கடைபிடிப்பது ஆராய்ந்து புரிந்துக்கொண்டவர்களின் பண்பு.
📖 (குறள் – 0663) 📖
📖 கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
📖 எற்றா விழுமந் தரும்.
🌻 கடைசிவரை தளராது செயல்படுவதே ஆண்மை. இடையில் தளர்ந்தால் .
🌻 ஏற்கமுடியா துன்பம் தரும்.
📖 (குறள் – 0664) 📖
📖 சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
📖 சொல்லிய வண்ணம் செயல்.
🌻 செயல்விளக்கம் பேசுதல் எல்லாருக்கும் எளிமையானது. அரியது
🌻 விளக்கியபடி செயல்படுதல்.
📖 (குறள் – 0665) 📖
📖 வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
📖 ஊறெய்தி உள்ளப் படும்.
🌻 வீரமுடன் போராடி இறந்தவரின் செயல்திறன் ஆட்சியாளரிடத்தில்
🌻 ஊரார் சொல்லி சிறப்பாக எண்ணப்படும்.
குறிப்பு : செயலை திறமையுடன் செய்பவர் புகழ் இறந்தப்பின்னும் போற்றப்படும்.
📖 (குறள் – 0666) 📖
📖 எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
📖 திண்ணியர் ஆகப் பெறின்.
🌻 மனதில் எண்ணங்களால் எப்படி எண்ணமிடுகிறாரோ அப்படியே அதை அடைவார். எண்ணியவர்
🌻 மனதிடமாக உள்ளவராக இருந்தால்.
📖 (குறள் – 0667) 📖
📖 உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
📖 அச்சாணி அன்னார் உடைத்து.
🌻 உருவம் பார்த்து ஏளனமாக எண்ணக்கூடாது. உருளும் பெரிய தேருக்கு
🌻 அச்சாணி போல் அவர்கள் இருக்கக் கூடும்.
📖 (குறள் – 0668) 📖
📖 கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
📖 தூக்கங் கடிந்து செயல்.
🌻 குழப்பம் இல்லாமல் எடுத்த செயல்களை துவண்டுவிடாமல்
🌻 தூக்கத்தையும் வெறுத்து செய்து முடிக்கவேண்டும்.
📖 (குறள் – 0669) 📖
📖 துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
📖 இன்பம் பயக்கும் வினை.
🌻 துன்பம் நெருக்கமாக இருந்தாலும் துணிவுடன் செய்யவேண்டும்
🌻 இன்பம் தரும் செயல் என்றால்.
📖 (குறள் – 0670) 📖
📖 எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
📖 வேண்டாரை வேண்டாது உலகு.
🌻 எவ்வளவு உறுதியை அடைந்திருந்தாலும் செயல் துணிவு
🌻 இல்லாதவரை உலகம் ஏற்காது.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(067 – வினைத் திட்பம்) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 செயல்பட உறுதியாக இருக்க மனம் உறுதியாக இருக்க வேண்டும்.
🌻 சொன்னபடி செய்யவும், எண்ணியதை அடையவும் மன உறுதியே முதன்மையானது.
🌻 உருவம் ஒரு பொருட்டல்ல அச்சாணியைப் போல் அவர்கள் இருக்கக்கூடும்.
🌻 செயல் துன்பம் தந்தாலும் பலன் இன்பம் என்றால் செயல்பட தயங்காது இருப்பவரையே உலகம் போற்றும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : may 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈